மேலும் அறிய
Oats Upma Recipe : உப்மாவை இப்படி செய்து கொடுங்க..எல்லோருக்கும் பிடிக்கும்..ஓட்ஸ் உப்மா ரெசிபி இதோ!
Oats Upma Recipe : உங்கள் காலை உணவு சத்தானதாக இருக்க வேண்டியது அவசியம்..10 நிமிடங்களில் சுவையான சத்தான உணவு செய்யனுமா..? உடனே இந்த ஓட்ஸ் உப்மாவை செய்யுங்கள்.

ஓட்ஸ் உப்மா
1/6

தேவையான பொருட்கள் : ரோல்டு ஓட்ஸ் - 2 கப், எண்ணெய் - 1 1/2 மேசைக்கரண்டி, கடலை பருப்பு - 1 தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி, கடுகு - 1 தேக்கரண்டி, சீரகம் - 1 தேக்கரண்டி, பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி, வெங்காயம் - 1 நறுக்கியது, பச்சை மிளகாய் - 4 நறுக்கியது, இஞ்சி - 1 துண்டு நறுக்கியது, கறிவேப்பிலை, பீன்ஸ் - 1 கப் நறுக்கியது, கேரட் - 1 நறுக்கியது,, தக்காளி - 1 நறுக்கியது, பச்சை பட்டாணி - 1/4 கப் வேகவைத்தது, மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி, உப்பு - 1 1/2 தேக்கரண்டி, தண்ணீர் - 1/2 கப், எலுமிச்சை பழச்சாறு (விரும்பினால்), வறுத்த வேர்க்கடலை, கொத்தமல்லி இலை.
2/6

செய்முறை : முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம் சேர்த்து வறுக்கவும்.
3/6

பின்பு பெருங்காயத்தூள், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும். அடுத்து பீன்ஸ், கேரட், தக்காளி, வேகவைத்த பச்சை பட்டாணி சேர்த்து கலந்துவிடவும்.
4/6

பின்பு மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலந்து, பின்பு ஓட்ஸை சேர்த்து கலந்துவிடவும். பின்பு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கலந்துவிட்டு 5 நிமிடம் மூடி வேகவிடவும்.
5/6

கடைசியாக எலுமிச்சை சாறு, வறுத்த வேர்க்கடலை, மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்துவிட்டு இறக்கவும்.
6/6

அவ்வளவு தான் சுவை மிகுந்த ஓட்ஸ் உப்மா தயார்!
Published at : 17 Mar 2024 01:05 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
ஐபிஎல்
ஐபிஎல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion