மேலும் அறிய
Banana Poli : வாழைப்பத்தில் டேஸ்டியான போலி.. இப்படி செய்தால் சுவை சூப்பரா இருக்கும்!
Banana Poli Recipe : வாழைப்பழம் மற்றும் கோதுமை மாவை வைத்து எப்படி சுவையான போலி செய்வது என்று பார்க்கலாம்...

வாழைப்பழ போலி
1/6

ஒரு கப் கோதுமை மாவு, கால் டீஸ்பூன் உப்பு, சிறிது மஞ்சள் தூள் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து இதன் மீது அரை ஸ்பூன் நெய் தடவி மூடி போட்டு வைத்து விட வேண்டும்.
2/6

10 முந்திரி, 10 பாதாம்-ஐ ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இரண்டு வாழைப்பழங்களை திப்பி இல்லைமால் மைய அரைத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.
3/6

ஒரு ஸ்பூன் நெய்யில் கால் கப் ரவையை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து ரவையை வறுக்க வேண்டும். ரவை வறுப்பட்டதும், அரைத்து வைத்துள்ள வாழைப்பழ விழுதை இதில் சேர்த்து நன்கு கிளறி விட்டு இதனுடன் முக்கால் கப் பொடித்த வெல்லம் சேர்த்தும் வெல்லம் உருகும் வரை கிளறி விட வேண்டும்.
4/6

இதில் ஒரு ஸ்பூன் நெய் மற்றும் பொடித்து வைத்துள்ள பாதாம் முந்திரியை சேர்த்து 4 நிமிடம் கிளறி விட்டு அடுப்பில் இருந்து இறக்கி கொள்ள வேண்டும்.
5/6

பிசைந்த சப்பாத்தி மாவில் இருந்து ஒரு உருண்டை எடுத்து அதை சப்பாத்தி கட்டையில் வைத்து அதிரசம் அளவில் தேய்த்துக் கொள்ள வேண்டும். பின் தயாரித்து வைத்துள்ள ரவை கலவையில் இருந்து ஒரு உருண்டை எடுத்து இந்த சப்பாத்தி அடையினுள் வைத்து இதை ஒரு உருண்டையாக பிடித்துக் கொள்ளவும்.
6/6

இப்போது இதை சப்பாத்தில் போல் தேய்த்து, தோசைக்கல்லில் போட்டு சப்பாத்தி போல் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். அவ்வளவு தான் டேஸ்டியான வாழைப்பழ போலி தயார்.
Published at : 06 May 2024 12:25 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
கல்வி
கல்வி
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion