மேலும் அறிய
Ragi Groundnut Halwa: சத்தும் சுவையும் கொட்டி கிடக்கும் ராகி வேர்க்கடலை அல்வா..சிம்பிள் ரெசிபி இதோ..!
Ragi Groundnut Halwa Recipe: ராகி கூழ், ராகி அடை, ராகி களி, ராகி தோசை சாப்பிட்டு அலுத்து போனவர்களுக்கு சுவையான ஒரு உணவு சாப்பிட வேண்டும் என நினைத்தால் ராகி அல்வாவை செய்து பார்க்கலாம்.
ராகி வேர்க்கடலை அல்வா
1/6

அல்வா என்றாலே நாக்கில் எச்சில் ஊறும். அல்வா என்பது அரபுப்பிரதேசங்களில் இருந்து வந்த இனிப்பு பொருள். அரேபிய மொழியில் அல்வா என்றால் தேவ இனிப்பு என்று அர்த்தம். முந்திரி அல்வா, பாதம் பிஸ்தா, கேரட் மற்றும் இளநீர் அல்வாவை சாப்பிட்டு இருக்கலாம். ஆனால், ராகி வேர்க்கடலை அல்வாவை பெரும்பாலானோர் கேள்விப்பட்டிருக்க முடியாது. ராகியில் அல்வாவா, அது நல்லா இருக்குமா என்று கேட்கலாம். ஆனால், ஒருமுறை செய்து பார்த்தால், ராகி அல்வாவை ருசி பார்க்காமல் விட முடியாது.
2/6

தேவையான பொருட்கள் : ராகி மாவு, வேட்க்கடலை- 100 கிராம், முந்திரி -50 கிராம், பாதாம்- 50 கிராம், சர்க்கரை - தேவையான அளவு, நெய் - அரை கப், பால் - 250 மி.லி. ஏலக்காய் - தேவையான அளவு ஒரு சிட்டிகை
3/6

செய்முறை முதலில் ராகி மாவை நன்றாக வாசம் வரும் வரை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதை சிறிது நேரம் ஆற வைத்து தோசை மாவுப்பதத்தில் தண்ணீர் ஊற்றி கலக்கிக்கொள்ள வேண்டும். பின்னர், ஒரு கடாயில் 250 மி.லி.பாலை ஊற்றி கொதிக்க வைத்து அதில், கால் கால் கிலோ சர்க்கரை போட்டு கிளற வேண்டும்.
4/6

2 நிமிடங்களில் பாலுடன் கரைத்து வைத்த கேழ்வரகு மாவை சேர்த்து கிளற வேண்டும். அதுடன் நெய் சேர்த்து கொள்ள வேண்டும். நன்றாக அடிப்பிடிக்காமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
5/6

அல்வா பதம் வந்ததும், தனியாக நெய்யில் வறுத்து வைத்திருந்த வேர்க்கடலை, தேங்காய் துண்டுகள், முந்திரி மற்றும் பாதாம் மற்றும் ஏலக்காய் பொடியை தூவி நன்றாக கிளற வேண்டும்.
6/6

கடைசியாக கொஞ்சம் நெய் போட்டி கிளறிவிட்டு, அடுப்பில் இருந்து கடாயை இறக்கி வைத்தால் சுவையான, ஆரோக்கியமான ராகி வேர்க்கடலை அல்வா ரெடி.
Published at : 03 Aug 2023 04:44 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement






















