மேலும் அறிய
Dragon Fruit: நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் ட்ராகன் பழம் சாப்பிடலாமா?இதைப் படிங்க!
ஹோனோலுலு குயின் என்றும் அழைக்கப்படும் டிராகன் பழம் நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்ததா?
டிராகன் பழம்
1/5

நீரிழிவு நோயாளிகள் தங்களுக்குப் பிடித்த பழங்களைச் சாப்பிடுவதற்குக் கூட ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும். சப்போட்டா போன்ற பழங்களைச் சாப்பிடுவது முற்றிலுமாக நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்து.கொய்யா, வாழை என அத்தனை பழங்களும் நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்து. இந்த வரிசையில் ஹோனோலுலு குயின் என்றும் அழைக்கப்படும் டிராகன் பழம் நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்ததா?
2/5

கற்றாழை இனத்தைச் சேர்ந்த இது உடலுக்கு உகந்ததா? ஹைலோசெரியஸ் கற்றாழை வகையான டிராகன் பழத்தின் பூக்கள் இரவில் மட்டுமே பூக்கும். இந்த பழம் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நபரின் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் என்று அறியப்படுகிறதுடைப்-2 நீரிழிவு நோயாளிகளைக் காட்டிலும், நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலைகளில் இதன் தாக்கம் கனிசமாகவே உள்ளதாக ஆய்வுகள் நிரூபித்துள்ளன.
3/5

புளிப்புச் சுவையுடைய இந்தப் பழம் சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் என்று பல ஆய்வுகள் கண்டறிந்துள்ளன, ஏனெனில் இது மிகவும் சத்தானது, சில ஆய்வுகள் இதனை நீரிழிவுக்கான சாத்தியமான சிகிச்சையாகவும் பரிந்துரைக்கின்றன. இவை கணைய பீட்டா செல்களை மீளுருவாக்கம் செய்து உடல் பருமன் அபாயத்தைக் குறைப்பதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளது.
4/5

இதிலுள்ள குறைந்த கிளைசிமிக் குறியீடு காரணமாக இதனை நீரிழிவு நோயாளிகள் தாராளமாக சாப்பிடலாம். போதுமான அளவு சாப்பிடுவது நல்லது. GI குறியீடு இதற்கு அதிகமாகவும் இல்லாமல் குறைவாகவும் இல்லாமல் நடுநிலையாக இருக்க வேண்டும். அதனால் டிராகன் பழத்தை உட்கொள்வதை கட்டுக்குள் வைத்திருப்பது நல்லது.
5/5

ப்ரீயாபெட்டிக் நோயாளிகளுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக செயல்படுகின்றன. இந்த ஃப்ரீ ரேடிக்கல்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.
Published at : 23 Jun 2024 04:24 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















