மேலும் அறிய
ஃப்ரிட்ஜில் வைத்தும் தோசை மாவு, தயிர் சீக்கிரம் புளித்துவிடுகிறதா.. இதை தடுப்பதற்கான டிப்ஸ் இதோ!
தோசை மாவு, தயிர் புளிக்காமல் இருக்க இந்த டிப்ஸ்களை பின்பற்றி பாருங்கள்..

தோசை மாவு
1/6

இட்லி, தோசை தென்னிந்திய கலாச்சாரத்தில் ஒன்றிப்போன உணவு வகையாக மாறிவிட்டது.
2/6

வெயில் காலத்தில், இட்லி மாவு எளிதாக புளித்துவிடும். மாவை ஃபிரிட்ஜிக்குள் வைக்க மறந்துவிட்டால் அவ்வளவுதான், புளித்த மாவை வாயில் கூட வைக்க முடியாத நிலை ஏற்படும்.
3/6

வெயில் காலத்தில் பெரும்பாலும் தயிரை ஃப்ரிட்ஜில் வைப்பது நல்லது. அது போக தயிர் உறை ஊற்றுவதில் பலர் செய்யும் தவறு, பால் காய்ச்சிய அதே பாத்திரத்தில் உறை ஊற்றுவதுதான். அதனை தவிர்த்து வேறு பாத்திரத்தில் மாற்றி ஊற்ற வேண்டும்.
4/6

மேலும், நாம் அரைக்கும் மொத்த மாவிலும் உப்பு போடக்கூடாது. பயன்படுத்தும்போது எடுக்கும் கொஞ்ச மாவில் மட்டுமே உப்பு போட்டு பயன்படுத்தவேண்டும்.மொத்தமாக உப்பு போட்டால் சூட்டில் மாவு சீக்கிரம் புளித்துவிடும்.
5/6

மாவை புளிக்க விடாமல் செய்ய கற்பூரவல்லி எனப்படும் ஓமவல்லி இலையும் நமக்கு உதவும். மாவின் மேல் பகுதியில் இந்த இலைகளை போட்டு வைக்கவும்.
6/6

வெற்றிலையின் காம்பு மாவை புளிக்க விடாமல் தடுக்கும். மாவு வைத்திருக்கும் பாத்திரத்தின் மீது வெற்றிலைகளை காம்போடு சேர்த்து வைக்கவேண்டும்.
Published at : 18 Apr 2023 02:50 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement