மேலும் அறிய
Potato Cheese Balls : உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்.. குழந்தைகளுக்கு செய்து கொடுங்க!
Potato Cheese Balls : குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் வடை பஜ்ஜிக்கு பதிலாக இந்த மாதிரி உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் செய்து தரலாம்.

உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்
1/6

தேவையான பொருட்கள் : 150-200 கிராம் சீஸ், 8 உருளைக்கிழங்கு, 2 வெங்காயம் (பொடியாக நறுக்கியது), 5 பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது), 100 கிராம் பிரட்தூள், 1/4 கப் சோள மாவு, 2 தேக்கரண்டி கருப்பு மிளகு தூள், உப்பு தேவையான அளவு, எண்ணெய்
2/6

செய்முறை : முதலில் உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலை உரித்து நன்கு மசித்து தனியாக எடுத்துக்கொள்ளவும்.
3/6

கடாயை அடுப்பில் வைத்து அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். அதன் பின் மசித்த உருளைக்கிழங்கு, உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து கிளறிவிடவும்
4/6

5 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து உருளைக்கிழங்கு கலவையை ஆறவிடவும். அடுத்தது சீஸ் துண்டுகளை உருளைக்கிழங்கு இடையில் வைத்து உருண்டை பிடித்து கொள்ளவும்.
5/6

அடுத்தது, சோள மாவை தண்ணீரில் கரைத்து வைத்து கொள்ளவும். உருண்டைகளை சோள மாவு தண்ணீரில் நெனைத்து பிரட்தூள்களில் பிரட்டு எடுத்துக்கொள்ளவும்.
6/6

அதன் பின் கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும், மிதமான சூட்டில் உருண்டைகளை பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் தயார்.
Published at : 21 Jun 2024 11:31 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion