மேலும் அறிய
Afghani Chicken Recipe: ஆப்கானி சிக்கன் எப்படி செய்வது? ரெசிபி இதோ!
Afghani Chicken Recipe: சிக்கன் பிரியர்களா? ஒரு முறை சிக்கனை இப்படி செய்து பாருங்க. சுவை நன்றாக இருக்கும்.

ஆப்கானி சிக்கன்
1/6

முதலில் மிக்ஸியில் நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி இலை சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
2/6

அரைத்த மசாலா விழுதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி அதில் தயிர், பிரெஷ் கிரீம், கரம் மசாலா தூள், உப்பு, சாட் மசாலா தூள், மிளகு தூள், கசூரி மேத்தி, எலுமிச்சை பழத்தின் சாறை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
3/6

அடுத்து சிக்கனை கீறி அதில் கலந்த மசாலாவை சிக்கனில் ஊற்றி 1 மணிநேரம் ஊறவிடவும்.
4/6

கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் ஊறவைத்த சிக்கனை சேர்த்து 15 நிமிடம் பொரித்து எடுக்கவும்.
5/6

அதே கடாயில் ஏலக்காய், கிராம்பு, பட்டை சேர்க்கவும்
6/6

மீதம் உள்ள மசாலாவை சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடம் வேகவிடவும். பொரித்த சிக்கன் துண்டுகளை சேர்த்து கலந்து கடாயை மூடி 15 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும். ஆப்கானி சிக்கன் தயார்!
Published at : 26 May 2024 11:44 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement