மேலும் அறிய

செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர் செல்.! அசைன்மென்ட் இது தான்- விஜய்யை அலறவிடும் அமைச்சர் ரகுபதி

அமித்ஷா அழைக்க மாட்டாரா என்று இன்றைக்கும் காத்துக் கொண்டிருப்பவர் தான் செங்கோட்டையன் என தெரிவித்துள்ள அமைச்சர் ரகுபதி, பாஜகவின் ஸ்லீப்பர் செல்லாக தவெகவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தவெகவில் செங்கோட்டையன்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 முதல் 4 மாத காலமே உள்ள நிலையில், தேர்தலுக்கான பணியை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது. ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு நிர்வாகிகளை இழுத்து வருகிறது. இந்த நிலையில் அதிமுகவின் மூத்த நிர்வாகியாக இருந்த செங்கோட்டையன் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், திமுக அல்லது பாஜகவில் இணைவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் ட்விஸ்ட்டாக நடிகர் விஜய்யின் தவெகவில் இணைந்து அனைவரையும் திரும்பி பார்க்கவைத்துள்ளார் செங்கோட்டையன்,

இந்த நிலையில் தவெகவில் செங்கோட்டையன் இணைந்திருப்பது பாஜகவின் அசைன்மென்ட் என தமிழக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த 20 குழந்தைகளுக்கு  அமைச்சர் ரகுபதி மோதிரம் வழங்கினார். 

பாஜகவின் ஸ்லீப்பர் செல் செங்கோட்டையன்

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், யாரை வைத்தும் யாரும் எந்த அரசியலும் செய்தாலும் மக்களுக்கு செய்கின்ற களப்பணி இதுதான் மக்கள் மனதில் நிற்கும். தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த நாலரை ஆண்டு காலமாக செய்கின்ற களப்பணிகள் திமுக கூட்டணி வெற்றிக்குத் துணை நிற்கும் என தெரிவித்தார்.  திமுகவும் அதிமுகவும் இணைந்து தான் செயல்படுகிறார்கள் என செங்கோட்டையன் கூறியிருப்பது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், நேற்று வரை செங்கோட்டையனுக்கு புத்தி எங்கே போனது என கேள்வி எழுப்பினார். தற்போதும் தமிழகத்தில் புனிதமான ஆட்சி தான் நடைபெறுகிறது.எதிர்காலத்திலும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் புனிதமான ஆட்சி தான் நடைபெறும். செங்கோட்டையன் பாஜக உடைய ஸ்லீப்பர் செல்லாக பார்க்கிறேன். அது உண்மையா இல்லையா என்பது மிக விரைவில் தெரியவரும் என கூறினார். 

அமித்ஷா அழைப்பிற்காக காத்திருக்கும் செங்கோட்டையன்

பாஜக செங்கோட்டையனை ஏமாற்றி இருந்தால் தவெகவிக்கு சென்றிருக்க மாட்டார் அவர் பாஜகவின் ஸ்லீப்பர்செல். அமித்ஷா அழைக்க மாட்டாரா என்று இன்றைக்கும் காத்துக் கொண்டிருப்பவர். தவெகவை பாஜகவுக்கு இழுத்துக் கொண்டு வருவதற்காகத்தான் அந்த அசைன்மென்டிற்கு தான் செங்கோட்டையன் அனுப்பப்பட்டிருக்கிறார் என்பதுதான் எங்களுடைய கருத்தாக உள்ளதாக தெரிவித்தார். திமுகவில் இணைய செங்கோட்டையனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், யாருமே ஒரு கட்சியில் இருந்து வெளிவரும் பொழுது அவர்களை மற்றொரு கட்சிக்கு அழைப்பது இயற்கை. எம்எல்ஏ பதவியை செங்கோட்டையன் ராஜினாமா செய்கின்ற முடிவுக்கு வந்த பிறகு அமைச்சர் சேகர்பாபு நட்புரீதியில் கூட அழைத்து இருக்கலாம். அவர் பாஜகவின் ஸ்லீப்பர் செல்லாக இருப்பதால்தான் அவர் திமுகவிற்கு வரவில்லை என கூறினார்.

 

பல குழப்பங்களை செய்த செங்கோட்டையன்

அதிமுக பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி  செங்கோட்டையனை வெறுத்து தான் விரட்டிவிட்டார். அவருக்கும் செங்கோட்டையனுக்கும் நல்ல புரிதல் கிடையாது. அதே நேரத்தில் பாஜக வோடு செங்கோட்டையனுக்கு நல்ல புரிதல் உள்ளது. எந்த பொறுப்பிலும் இல்லாமல் அமித்ஷாவை போய் டெல்லியில் சந்தித்து விட்டு அதற்குப் பிறகு அவர் ஒரு முடிவு எடுக்கிறார். ஓபிஎஸ், தினகரன் , சசிகலாவை செங்கோட்டையன் சந்திக்கிறார். இப்படி பல்வேறு குழப்பங்களை எல்லாம் செய்துவிட்டு கடைசியாக பாஜகவுடைய ஸ்லீப்பர் செல்லாக  தவெகவுடன் சென்று இருக்கிறார் என ரகுபதி விமர்சித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

விஜய் ஆட்சியில் ஊழல் குறையுது; ரங்கசாமிக்கு அந்த தைரியம் இருக்கா? முன்னாள் முதலவர் நாராயணசாமி அதிரடி...
விஜய் ஆட்சியில் ஊழல் குறையுது; ரங்கசாமிக்கு அந்த தைரியம் இருக்கா? முன்னாள் முதலவர் நாராயணசாமி அதிரடி...
தமிழ்நாட்டிற்கு முழுமையாக வராத காவிரி நீர்.. அழுத்தம் கொடுங்க முதலமைச்சர் - இபிஎஸ் வேண்டுகோள்!
தமிழ்நாட்டிற்கு முழுமையாக வராத காவிரி நீர்.. அழுத்தம் கொடுங்க முதலமைச்சர் - இபிஎஸ் வேண்டுகோள்!
திரைக்கு வரும் ஜனநாயகன்! காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை! அன்னதானம் வழங்கி அசத்தல்!
திரைக்கு வரும் ஜனநாயகன்! காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை! அன்னதானம் வழங்கி அசத்தல்!
EPS: இபிஎஸ்-க்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்.. அமித்ஷாவின் ரியாக்ஷன் என்ன?
EPS: இபிஎஸ்-க்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்.. அமித்ஷாவின் ரியாக்ஷன் என்ன?

வீடியோ

Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Nirmal kumar Vs DMK: “உங்க ஆட்சில ட்விட் போட்டதுக்கே குண்டாஸ் போட்டீங்க.?“ திமுகவை விளாசிய அமைச்சர் நிர்மல் குமார்
“உங்க ஆட்சில ட்விட் போட்டதுக்கே குண்டாஸ் போட்டீங்க.?“ திமுகவை விளாசிய அமைச்சர் நிர்மல் குமார்
Jana Nayagan: விஜய்யின் ஜனநாயகன்.. ஐ அம் வெயிட்டிங் மோடில் வட இந்தியா! வடக்கிலும் தமிழ்நாடு சிஎம்-க்கு மாஸ்!
Jana Nayagan: விஜய்யின் ஜனநாயகன்.. ஐ அம் வெயிட்டிங் மோடில் வட இந்தியா! வடக்கிலும் தமிழ்நாடு சிஎம்-க்கு மாஸ்!
EPS: இபிஎஸ்-க்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்.. அமித்ஷாவின் ரியாக்ஷன் என்ன?
EPS: இபிஎஸ்-க்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்.. அமித்ஷாவின் ரியாக்ஷன் என்ன?
Russia Ukraine War: அடப்பாவமே.! உக்ரைனில் 4 இந்தியர்கள் பலி; கப்பல் மீதான ரஷ்ய க்ரூஸ் ஏவுகணை தாக்குதலுக்கு MEA கண்டனம்
அடப்பாவமே.! உக்ரைனில் 4 இந்தியர்கள் பலி; கப்பல் மீதான ரஷ்ய க்ரூஸ் ஏவுகணை தாக்குதலுக்கு MEA கண்டனம்
Donald Trump Tariff: ட்ரம்ப்பின் புதிய முடிவால் இந்தியாவுக்கு சிக்கல்.! கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்குமா.? நடந்தது என்ன.?
ட்ரம்ப்பின் புதிய முடிவால் இந்தியாவுக்கு சிக்கல்.! கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்குமா.? நடந்தது என்ன.?
Ather Most Cheapest EV Scooter: அடி தூள்.! மிகவும் மலிவான EV ஸ்கூட்டரை இறக்கும் ஏதர்; ரூ.1000 கோடியை ஏதரில் இறக்கும் ஹீரோ நிறுவனம்
அடி தூள்.! மிகவும் மலிவான EV ஸ்கூட்டரை இறக்கும் ஏதர்; ரூ.1000 கோடியை ஏதரில் இறக்கும் ஹீரோ நிறுவனம்
நாங்களும் வர்றோம்.. பஜாஜ், ஹீரோ, டிவிஎஸ் இறக்கப்போகும் ஆஃப் ரோட் பைக்குகள் - என்னென்ன?
நாங்களும் வர்றோம்.. பஜாஜ், ஹீரோ, டிவிஎஸ் இறக்கப்போகும் ஆஃப் ரோட் பைக்குகள் - என்னென்ன?
GATE 2027: ஐஐடி சென்னை நடத்தும் கேட் தேர்வு; தேதி அறிவிப்பு; விண்ணப்பம், பாடத்திட்டம், வினாத்தாள்
GATE 2027: ஐஐடி சென்னை நடத்தும் கேட் தேர்வு; தேதி அறிவிப்பு; விண்ணப்பம், பாடத்திட்டம், வினாத்தாள்
Embed widget