மேலும் அறிய
GatiShakti Launched: பிரதமர் கதிசக்தி செயல் திட்டம் என்றால் என்ன? புகைப்படத் தொகுப்பு இங்கே

பிரதமர் கதிசக்தி செயல் திட்டம்
1/8

நாட்டின் உள்கட்டமைப்பு துறையில் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக பிரதமர் கதிசக்தி எனும் பல்முனை இணைப்புகளுக்கான தேசிய செயல்திட்டத்தை இன்று காலை 11 மணிக்கு புதுதில்லி பிரகதி மைதானத்தில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
2/8

முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களின் பங்குதாரர்களுக்கான முழுமையான திட்டமிடலை அமைப்புரீதியானதாக ஆக்குவதன் மூலம் கடந்த கால பிரச்சினைகளை பிரதமர் கதிசக்தி தீர்க்கும். தனித்தனியாக திட்டமிடுதல் மற்றும் வடிவமைத்தலுக்கு பதிலாக, பொதுவான பார்வையுடன் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்படும்
3/8

உதாரணமாக, பல்வேறு துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லாததால், சாலை அமைக்கப்பட்டவுடன், மற்ற ஏஜென்சிகள் நிலத்தடி கேபிள்கள், எரிவாயு குழாய் பதித்தல் போன்ற செயல்பாடுகளுக்காக மீண்டும் சாலையை தோண்டினர். இதை சமாளிக்க, அனைத்து கேபிள்கள், குழாய்கள் போன்றவற்றை ஒரே சமயத்தில் அமைக்கக்கூடிய வகையில் ஒருங்கிணைப்பை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நேரம் எடுக்கும் ஒப்புதல் செயல்முறை, ஒழுங்குமுறை அனுமதிகளின் பெருக்கம் போன்ற பிற சிக்கல்களையும் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
4/8

பாரத்மாலா, சாகர்மாலா, உள்நாட்டு நீர்வழிகள், உலர்/நில துறைமுகங்கள், உடான் போன்ற பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசாங்கங்களின் உள்கட்டமைப்பு திட்டங்களை இது உள்ளடக்கும்
5/8

ஜவுளி மண்டலங்கள், மருந்து மண்டலங்கள், ராணுவ வழித்தடங்கள், மின்னணு பூங்காக்கள், தொழில் வழித்தடங்கள், மீன்வள மண்டலங்கள், வேளாண் மண்டலங்கள் உள்ளிட்டவை உள்ளடக்கப்படும்
6/8

வரவிருக்கும் இணைப்புத் திட்டங்கள், பிற வணிக மையங்கள், தொழில்துறை பகுதிகள் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான பொது மற்றும் வணிக சமூகத் தகவல்களை பிரதமர் கதிசக்தி வழங்கும். முதலீட்டாளர்கள் தங்கள் வணிகங்களை பொருத்தமான இடங்களில் திட்டமிடுவதற்கான மேம்படுத்தப்பட்ட ஒருங்கிணைப்புக்கு இது வழிவகுக்கும்
7/8

பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் தற்போதைய மற்றும் ஏற்கனவே திட்டமிட்ட அனைத்து முன்முயற்சிகளையும் மையப்படுத்தப்பட்ட போர்ட்டலுடன் இது இணைக்கும். ஒவ்வொரு துறையும் திட்டங்களைத் திட்டமிட்டு செயல்படுத்தும்போது அடுத்தவர்களின் செயல்பாடுகள் குறித்த விரிவான தெரிவுநிலையைக் கொண்டிருக்கும்
8/8

நாட்டில் முழுமையான மற்றும் ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ.100 லட்சம் கோடிக்கு மேற்பட்ட மதிப்பில் மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் தனது சுதந்திர உரையில் குறிப்பிடிருந்தார்
Published at : 13 Oct 2021 12:46 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
மதுரை
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion