World Record: ஹைய்யோ...எவ்வளவு பெரிய மீனு..உலகத்தின் பெரிய நன்னீர் மீனைப் பத்தி தெரியணுமா? வைரல் ஃபோட்டோஸ் இதோ
உலகளவில் சுமார் 70% பெரிய நன்னீர் மீன்கள் அழியும் நிலையில் உள்ளதாக விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கம்போடியாவில் உலகின் மிகப்பெரிய மீன் சிக்கியதாக வெளியான புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
உலகளவில் பறப்பன,ஓடுவன, ஊர்வன என ஏகப்பட்ட உயிரினங்கள் உள்ளது. இது சில நேரங்களில் வழக்கமான தோற்றத்தில் இருந்து மாறுபடுபவையின் புகைப்படங்கள் இணையத்தில் அவ்வப்போது வெளியாகி வைரலாவது வழக்கம்.அந்த வகையில் உலகின் மிகப்பெரிய மீன் சிக்கியுள்ளது.
வொண்டர்ஸ் ஆஃப் தி மீகாங் என்ற யூடியூப் சேனலில் வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில் கம்போடியாவின் மெகாங் ஆற்றுப் பகுதி உலகளவில் நன்னீர் உயிரினங்கல் அதிக வாழும் ஆறுகளில் 3 ஆம் இடத்தை பெற்றுள்ளது. இங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மீனவர்கள் வழக்கம் போல மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் வலையில் மிகப்பெரிய அளவில் கனமான எடையுடன் மீன் சிக்கியுள்ளது.
உடனடியாக கரைக்கு திரும்பிய அவர்கள் வலையை பார்த்த போது அதில் மிகப்பெரிய அளவில் திருக்கை மீன் இருந்ததைக் கண்டு ஆச்சரியமடைந்தனர். இதனையடுத்து அப்பகுதியில் உள்ள மீன்வள ஆராய்ச்சியாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து ஆய்வு மேற்கொண்டதில் சிக்கிய திருக்கை மீன் சுமார் 13 அடி நீளமும், 300 கிலோவுக்கு மேல் எடையும் இருப்பது தெரிய வந்தது. பொதுவாக இத்தகைய திருக்கை மீன்கள் நன்னீரில் வாழ்பவை. அந்த வகையில் நன்னீரில் கண்டறியப்பட்ட மீன்களில் அதிக எடைக் கொண்டது என்ற சாதனையை இந்த மீன் பெற்றுள்ளது.
கடந்த 2005 ஆம் ஆண்டு தாய்லாந்தில் பிடிபட்ட 646 பவுண்டு எடையுள்ள ராட்சத கெளுத்தி மீனை இந்த திருக்கை மீன் முறியடித்துள்ளது. அதேசமயம் அதிக எடைக் கொண்ட மீன்களின் வரிசையில் மற்றொரு போட்டியாளரான சீன துடுப்பு மீன் ஒன்று கடந்த 2020 ஆம் ஆண்டு இறந்ததால் இந்த திருக்கை மீனை ஆவணப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. இதனைத் தொடர்ந்து அந்த திருக்கை மீனில் ஒரு ஒலி சாதனம் ஒன்று பொருத்தப்பட்டு மீண்டும் ஆற்றில் விடப்பட்டது.
We are so excited to see the tagging and release of the world largest freshwater stingray back into the Mekong river in #Cambodia. We hope to see more of these beautiful fish! Learn more: https://t.co/mUSShyHNv4 pic.twitter.com/25n13B3nFP
— USAID Cambodia (@USAIDCambodia) June 23, 2022
இதன் மூலம் மீன்களின் இயக்கங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீகாங் ஆறு சீனா, மியான்மர், லாவோஸ், தாய்லாந்து, கம்போடியா மற்றும் வியட்நாம் வழியாக செல்கிறது . இது பல வகையான மாபெரும் நன்னீர் மீன்களின் தாயகமாகும். மேலும் உலகளவில் சுமார் 70% பெரிய நன்னீர் மீன்கள் அழியும் நிலையில் உள்ளதாக விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்