என்ன பெரிய கொரோனா? உலகத்தை அச்சுறுத்தும் மோஸ்ட் டேஞ்சரஸ் வைரஸ் இதுதாங்க
எச்.எம்.வி.பி. வைரஸ் இந்தியாவிற்குள் பாதிப்பைத் தொடங்கிய நிலையில், உலக நாடுகளை அச்சுறுத்தும் வைரஸ்கள் என்னனென்ன? என்பது குறித்து கீழே காணலாம்.
உலகம் முழுவதையும் முடக்கிய கொரோனா வைரசால் ஏற்பட்ட பாதிப்பு உயிரிழப்பும், அதன் சோகமும் அடங்கி இரண்டு ஆண்டுகளே ஆகியுள்ள நிலையில் தற்போது புதியதாக எச்.எம்.வி.பி. என்ற புதிய வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தும் விதமாக உருவாகியுள்ளது.
இந்த நிலையில், உலகிலே மிகவும் ஆபத்தான 10 வைரஸ்கள் என்னென்ன? என்பது குறித்து கீழே காணலாம்.
1. மார்பர்க் வைரஸ்:
உலகிலேயே மிகவும் ஆபத்தான வைரசாக மார்பர்க் வைரஸ் உள்ளது. இந்த வைரஸ் பாதிப்பால் ரத்தக்கசிவு காய்ச்சல் ஏற்படும். இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் தோல் மற்றும் உறுப்புகளில் ரத்தக்கசிவு உண்டாகும். இந்த வைரஸ் 90 சதவீதம் உயிரிழப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது.
2. எஃபோலா:
உலகை அச்சுறுத்தும் வைரஸ்களில் மிகவும் முக்கியமான எஃபோலா வைரஸ். ஆப்பிரிக்க கண்டத்தில் அதிகளவு இந்த வைரஸ் பாதிப்பு காணப்படுகிறது. இந்த வைரசானது ஜைர், சூடான், தை பாரெஸ்ட், புண்டிக்யோ மற்றும் ரெஸ்டன் என்று 5 வகைப்படும். இதில், ஜைர் எஃபோலா மிகவும் ஆபத்தானது. இந்த வைரசும் 90 சதவீத இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது.
3. ஹண்டாவைரஸ்:
1950ம் ஆண்டு நடந்த கொரியப் போரின்போது அமெரிக்க வீரர்கள் முதன்முதலில் ஹண்டா வைரசால் பாதிக்கப்பட்டனர். இந்த வைரஸ் நுரையீரல், சிறுநீரகத்தை செயலிழக்க வைக்கும் அபாயம் கொண்டது.
4. ஃப்ளூ வைரஸ்:
ஃப்ளூ வைரஸ் பாதிப்பால் ஏற்படும் காய்ச்சல் பறவைக் காய்ச்சல் என்று அழைக்கப்படுகிறது. இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட கோழிகள் மூலமாக மனிதர்களுக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த வைரஸ் 70 சதவீத இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது. இந்த வைரசும் ஆபத்தான வைரஸ் ஆகும்.
5. ஜுனின் வைரஸ்:
இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திசு வீக்கம், ரத்தப்போக்கு ஆகியவை ஏற்படும். இது அர்ஜெண்டினா ரத்தக்கசிவு காய்ச்சலுடன் தொடர்புடையது. இதன் அறிகுறிகள் காய்ச்சலுக்குப் போன்றே சாதாரணமாக காணப்படும். இந்த வைரஸ் பாதிப்பு அரிதாகவே காணப்படுகிறது.
6. கிரிமியோ காங்கோ காய்ச்சல்:
கிரிமியோ காங்கோ காய்ச்சல் வைரஸ் உண்ணி மூலம் பரவுகிறது. இது மிகவும் ஆபத்தானது ஆகும். இந்த வைரஸ் பாதிப்பும் எஃபோலா, மார்பர்க் வைரஸ்களைப் போலவே ஆபத்தானது ஆகும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தக்கசிவு உண்டாகும்.
7. மச்சுபோ வைரஸ்:
இந்த மச்சுபோ வைரசை கருப்பு டைபஸ் என்று அழைக்கின்றனர். இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் மிக கடுமையான காய்ச்சல் பாதிப்பு ஏற்படும். இந்த வைரஸ் பாதிப்பு ஜுனின் வைரஸ் பாதிப்பைப் போன்றே காணப்புடும். இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் ரத்தக்கசிவு உண்டாகும்.
8. கியாசனூர் வைரஸ்:
இந்தியாவின் தென்மேற்கு கடற்கரைகளில் உள்ள காடுகளில் 1955ம் ஆண்டு கியாசனூர் வன வைரசை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். எலிகள், பன்றிகள், பறவைகள் மூலமாகவும் இந்த வைரஸ் பரவலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக காய்ச்சல், மிகக்கடுமையான தலைவலியுடன் ரத்தப்போக்கும் ஏற்படுகிறது.
9. டெங்கு:
இந்தியாவிலே மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ள காய்ச்சல் டெங்கு காய்ச்சல் ஆகும். இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் பலவும் டெங்குக்காய்ச்சால் கடும் பாதிப்பை மேற்கொண்டுள்ளன. ஆண்டுதோறும் 50 மில்லியன் முதல் 100 மில்லியன் வரை மக்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த வைரஸ்களினால் கடந்த காலத்தில் கடுமையான பாதிப்பை உலக நாடுகள் எதிர்கொண்டுள்ளன. இதன் காரணமாக, தற்போது பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை உலக நாடுகள் செய்துள்ளது.