பறக்கும் விமானத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்! 3 மணி நேரம் கழிவறையில் தனிமை!
சிக்காகோவில் இருந்து ஐஸ்லாந்து செல்லும் விமானத்தின் நடு வழியில் அமெரிக்க பெண்ணுக்கு கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டது.
அமெரிக்காவின் மிச்சிகனைச் சேர்ந்த ஆசிரியை மரிசா ஃபோட்டியோவுக்கு டிசம்பர் 19 அன்று பயணத்தின் பாதியிலேயே தொண்டை வலி ஏற்பட்ட காரணத்தால், கழிவறையில் ரேபிட் கோவிட் பரிசோதனையை மேற்கொண்டு தனிமை படுத்தப்பட்டார். விமான பயணத்திற்கு முன், மரிசா இரண்டு முறை PCR சோதனைகள் மற்றும் ஐந்து ரேபிட் டெஸ்டுகள் எடுத்ததாக கூறினார். அனைத்து முடிவுகளும் நெகட்டிவாக வந்த நிலையில், விமானத்தில் சென்று கொண்டு இருந்தபோது ஒன்றரை மணி நேரம் கழித்து, மரிசாவுக்கு தொண்டை வலி ஏற்பட்டது.
இது குறித்து மரிசா தெரிவிக்கையில், “பயணத்தின் நடுவில் எனக்கு தலை சுற்றல் ஆரம்பித்தது. உடனே நான் சோதனைக்கு செல்ல வேண்டும் என்று நினைத்தேன். சோதனை செய்த பின் எனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது” என்றார். மரிசா 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டு, பூஸ்டரை டோசையும் போட்டுக் கொண்டவர். அவர் தடுப்பூசி செலுத்தாத மக்களுடன் பணிபுரிந்து வருவதால் தொடர்ந்து கொரோனா சோதனை செய்வதை வழக்கமாக்கி கொண்டு உள்ளார். விமானத்தில் குளியலறையில் தனது கொரோனா சோதனையை செய்தபோது, முடிவு பாசிடிவாக வந்ததை கண்டு மரிசா அதிர்ச்சி அடைந்ததாக கூறினார்.
விமானத்தில் இருந்த மற்ற பயணிகளை பதற்றமாக்கி விட்டதாக தெரிவித்த மரிசாவை விமானப் பணியாளர்கள் ஆறுதல் கூறி அமைதிப்படுத்தினர். மரிசாவை தனி இருக்கையில் அமரவைக்க போதுமான இருக்கை கிடைக்கவில்லை என்று விமானப் பணிப்பெண் கூறிய போது, நான் குளியலறையில் இருந்துக் கொள்கிறேன், ஏனென்றால் நான் விமானத்தில் மற்றவர்களுடன் இணைந்து இருக்க விரும்பவில்லை," என்று மரிசா கூறினார்.
ஐஸ்லாந்தில் விமானம் தரை இறங்கியவுடன், மரிசா மற்றும் அவரது குடும்பத்தினர் விமானத்திலிருந்து கடைசியாக வெளியேறினர். மரிசாவுடன் இருந்த சகோதரருக்கும் தந்தைக்கும் கொரோனா அறிகுறியும் இல்லாததால், அவர்கள் சுவிட்சர்லாந்திற்கு இணைப்பு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் மரிசாவுக்கு விமான நிலையத்தில் விரைவு பிசிஆர் சோதனை செய்யப்பட்ட போது மீண்டும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதனால் மரிசா ஹோட்டல் ஒன்றில் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். மருத்துவர்கள் நாள் ஒன்றுக்கு மூன்று முறை மரிசாவை பரிசோதித்து அவருக்கு உணவு மற்றும் மருந்தை வழங்கி வந்தனர்.
விமானப் பணி ஆட்கள் மற்றும் விமானத்தில் பயணித்த பயணிகள் தனக்கு ஒத்துழைப்பு வழங்கியதாகவும், அனைவரும் தமக்கு ஆறுதல் அளித்தது பெரும் மகிழ்ச்சியை அளித்ததாகவும், இது ஒரு அருமையான அனுபவம் என்றும் ஆசிரியை மரிசா மகிழ்ச்சி தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )