நடுவானில் விமானத்தில் இளம்பெண் செய்த செயல்...முகம் சுழித்த பயணிகள்..வைரல் வீடியோ
ஜன்னலோர இருக்கைக்கு செல்ல இரு பயணிகளை அப்பெண் தாண்ட வேண்டியுள்ளது. அதில் முதலில் கார்னரில் இருக்கும் பயணி குழந்தையுடன் இருக்கிறார்.
விமானத்தில் ஜன்னலோர இருக்கைக்கு இளம்பெண் ஒருவர் வித்தியாசமாக செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
பொதுவாக விமானப் பயணம் என்பது சாமானியர்களுக்கு இன்றளவும் கனவாகவே இருந்தாலும், அதில் பயணிக்கும் பெரும்பாலானோர் ஜன்னலோர இருக்கைகளையே கிடைக்க விரும்புவர். விமானம் புறப்பட்டது முதல், நடுவானில் மேகக் கூட்டங்களுக்கு இடையே செல்வது, தரையிறங்குவது போன்ற செயல்களை காண விரும்புவது என சிறியவர் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமில்லாமல் அந்த ஜன்னலோர இருக்கைப் பயணத்தை ரசிப்பார்கள்.
இதே பஸ் அல்லது ரயில்களில் தேடிச் சென்று ஜன்னலோர இருக்கைகளை பிடித்தாலும் அந்த சந்தோஷத்தை நொடிப்பொழுதில் கெடுக்க நிச்சயம் யாரேனும் குடும்பத்துடன் வருவார்கள். இதுதொடர்பாக மீம்ஸ்களும் இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
So each time she has to leave, or get back to her seat, her fellow passengers including baby, have to get up and jostle in the aisle. Much easier to do what she did and those seated near her didnt seem to mind. That is what matters most.
— Netwebangel (@Netwebangel) June 17, 2022
இந்நிலையில் பிராண்டன் என்ற ட்விட்டர் பயனர் பகிர்ந்துள்ள வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில் ஜன்னலோர இருக்கைக்கு செல்வதற்காக பயணிகளின் மீது பெண் ஒருவர் குதிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. மேலும் அந்த பதிவில் விமானத்தில் நான் பார்த்ததிலேயே மிகவும் குற்றச் செயல். இந்த பெண் 7 மணி நேர விமானத்தில் மற்ற பயணிகளின் மீது குதித்துக்கொண்டிருந்தார் என தனது ஆட்சேபனையை தெரிவித்துள்ளார்.
ஜன்னலோர இருக்கைக்கு செல்ல இரு பயணிகளை அப்பெண் தாண்ட வேண்டியுள்ளது. அதில் முதலில் கார்னரில் இருக்கும் பயணி குழந்தையுடன் இருக்கிறார். அப்பெண்ணின் அநாகரீகமான செயல் இணையவாசிகள் இடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சிலர் அந்த பெண் அத்தனை முறை இதுபோன்று நடந்த போதும் சக பயணிகள் முகம் சுழிக்கவில்லை என கூறியுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்