2 ஆண்டுகளுக்கு முன் உயிரிழப்பு! சோபாவில் எலும்புக்கூடு- விவரம் தெரியாமல் வீட்டுக்கு வாடகை வசூல்
பிரிட்டனில் இறந்து 2 ஆண்டுகள் ஆன பிறகும் வீட்டில் வசித்து வந்தவரிடமிருந்து வீட்டு வாடகை வசூலிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிரிட்டனில் இறந்து 2 ஆண்டுகள் ஆன பிறகும் வீட்டில் வசித்து வந்தவரிடமிருந்து வீட்டு வாடகை வசூலிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
2 ஆண்டுகளுக்கு மேலாக உடல் அந்த வீட்டிலேயே கிடந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. பிப்ரவரி மாதம், பெக்காமில் அமைந்துள்ள குடியிருப்பில் சோபாவில் கிடைத்த எலும்புக்கூடுகளை ஆய்வு செய்ததில் அது 58 வயதான ஷீலா செலியோனே என்பது தெரிய வந்திருக்கிறது.
இறந்த பிறகும், அது தெரியாமல் வீட்டு வாடகை வசூலிக்கப்பட்டதற்கு வீட்டுவசதி சங்கம் மன்னிப்பு கேட்டுள்ளது. செலியோனே எப்படி இறந்தார் என்பது குறித்து தெரிந்து கொள்வதற்காக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உடற்கூறாய்வு அறிக்கையில், உடல் சிதைந்த நிலையில் இருந்ததால், செலியோனின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை நடத்தப்பட்ட லண்டனின் சவுத் கரோனர் நீதிமன்றத்தில், இறந்த பெண் கிரோன் நோயாலும் குடல் அழற்சியாலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
உடற்கூறாய்வு நடத்திய ஜூலியன் மோரிஸ் இதுகுறித்து கூறுகையில், "எல்லா மரணமும் சோகமானது. இரண்டு ஆண்டுகளில் கண்டறியப்படாமல் 2022 இல் அது குறித்து புரிந்துகொள்வது கடினமே" என்றார்.
வழக்கத்திற்கு மாறாக செலியோனின் உடல் குடியிருப்பு பகுதியான லார்ட்ஸ் கோர்ட்டில் இரண்டு ஆண்டுகளாக கேட்பாரற்று கிடந்ததால் இந்த வழக்கு அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், செலியோன் கடைசியாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்
வீட்டின் குடியிருப்பாளர் இறந்தது கூட கண்டுபிடிக்காமல் இருந்ததற்கு ஹவுசிங் சொசைட்டி கண்டனம் தெரிவித்துள்ளது. இறந்தது கூட தெரியாமல், அந்த பெண் சரியான நேரத்தில் வீட்டு வாடகை செலுத்தாததால் அவரின் சமூக வங்கி பலனிலிருந்து வாடகையை வசூலிக்க ஹவுசிங் சொசைட்டி முடிவு செய்து விண்ணப்பித்துள்ளது. ஜூன் 2020 இல், எரிவாயு விநியோகத்திற்கான பணம் செலுத்தாததால் அதையும் அவர்கள் நிறுத்தியுள்ளனர்.
வீட்டிலிருந்து வெளியே வராத செலியோனைப் பற்றி குடியிருப்பாளர்கள் பலமுறை வீட்டுவசதி சங்கத்திடமும் காவல்துறையினரிடமும் தகவல் அளித்துள்ளனர் என்பது விசாரணையில் கூறப்பட்டது. இதுகுறித்து விசாரிப்பதற்காக போலீசார் அவரது இடத்திற்கு இரண்டு முறை சென்றுள்ளனர். ஆனால், காவல்துறை கட்டுப்பாட்டாளரின் தவறான தகவலால், அவர் உயிருடன் நன்றாகப் இருப்பதாக வீட்டுவசதி சங்கத்திடமும் பதில் அளிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்