ஒரே நேரத்தில் 2 ஜோடி ஐடென்டிக்கல் ட்வின்ஸைப் பெற்ற அதிசயப் பெண்.. இன்னும் இருக்கு சுவாரஸ்யம்
அமெரிக்காவில் இளம் பெண் ஒருவர் ஒரே நேரத்தில் 2 ஜோடி ஓருரு இரட்டையரைப் பெற்றுள்ளார்.
அமெரிக்காவில் இளம் பெண் ஒருவர் ஒரே நேரத்தில் 2 ஜோடி ஓருரு இரட்டையரைப் பெற்றுள்ளார். இந்த இரட்டையர்களில் ஆண் ஒன்று பெண் ஒன்று இருந்தன. இது உலகில் 10 மில்லியனில் ஒரு கேஸ் என்ற வீதத்தில் அமைந்துவிடும். ஆகையால் மருத்துவ அற்புதம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த குழந்தைகள் 'ஐடென்டிக்கல் ட்வின்ஸ்' (Identical Twins) என்றாலும் கூட இவர்கள் பாலினம் வேறாக உள்ளதே இவ்வாறாக அற்புதம் என்று கூறப்படக் காரணமாகக் கூறப்படுகிறது.
'ஐடென்டிக்கல் ட்வின்ஸ்' ( 'ஓருரு இரட்டையர்') என்றால் என்ன?
இரட்டையரில் ஐடென்டிக்கல் ட்வின்ஸ் 'Identical twins', நான் ஐடென்டிக்கல் ட்வின்ஸ் 'Non-Identical Twins' என்று இரு வகை உண்டு.
ஆணின் ஓர் உயிரணு பெண்ணின் ஒரு கருமுட்டையோடு இணைந்த பின் கருவுற்ற முட்டையிலுள்ள செல் இரண்டாகப் பிரியும். இவ்வகையில் பிறக்கும் இரு குழந்தைகளும் பெண்களாகவோ, ஆண்களாகவோ மட்டுமே இருக்கும். ஒரு குழந்தை பெண்ணாகவும் மற்றொரு குழந்தை ஆணாகவும் இருக்க வாய்ப்பில்லை. மேலும் இந்த வகை இரட்டையர்களின் மரபணுக்கள் ஒரே மாதிரியாக இருக்கும். இவர்களின் முகத்தோற்றம், உடல்வாகு மற்றும் குணாதிசயங்களும் ஒரே மாதிரியாக இருக்கும். இப்படி உருவாகும் இரட்டையரை 'ஐடென்டிக்கல் ட்வின்ஸ்' (Identical Twins) என்று மருத்துவர்களால் அறியப்படுகின்றனர்.
'நான் ஐடென்டிக்கல் ட்வின்ஸ்' என்றால் என்ன?
இவ்வாறாக இல்லாமல், ஆணின் இரண்டு உயிரணுக்கள் பெண்ணின் இரண்டு கருமுட்டைகளோடு தனித்தனியாக இணைந்து இரண்டு கருக்களுமே தனித்தனியாக வளர்ந்து இரண்டு குழந்தைகளாக உருவாகும். அவ்வாறாக பிறக்கும் இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தை பெண்ணாகவும், மற்றொரு குழந்தை ஆணாகவும் இருக்கலாம். அல்லது இரு குழந்தைகளும் பெண்ணாகவும், இரு குழந்தைகளுமே ஆணாகவும் கூட இருக்கலாம். இவர்களின் மரபணுக்கள் வேறாக இருக்கும். இவர்களின் முகத்தோற்றம், உடல்வாகு, குணாதிசயங்களும் என எல்லாமே மாறுபட்டதாகவே இருக்கும். இவர்களை மருத்துவ உலகம் 'நான் ஐடென்டிக்கல் ட்வின்ஸ்' (Non-Identical Twins) எனப் பட்டியலிடுகிறது.
இப்போ நம்ம ஸ்டோரியின் ஹீரோயின் ஆஷ்லே நெஸ் ஏன் பிரபலமாகியிருக்கிறார்கள் என்றால், இவர்கள் இரண்டு ஜோடி ஓருரு இரட்டையர்களைப் பெற்றதோடு அதில் ஆணும், பெண்ணும் இருக்கும்படி பெற்றிருக்கிறார். அதுதாங்க உலக அதிசயமாகியிருக்கு.
அடிச்சது லக்கி ப்ரைஸ்:
ஆஷ்லே நெஸ் என்ற 35 வயது பெண் தான் இப்போது ஒட்டுமொத்த உலகத்தின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார். இது குறித்து ஆஷ்லே அளித்த பேட்டியில் எனக்கு 12 வாரங்களுக்கு முன்னரே பிறந்துள்ளன. என் குழந்தைகள் இன்னும் 8 வாரங்களுக்கு ஐசியுவில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவர்கள் உலகை பார்க்கும் ஆசையில் முன்னரே வந்துவிட்டனர். சீக்கிரம் நல்லபடியாக மீண்டு வருவார்கள். எனக்கு அதில் நம்பிக்கை உள்ளது. நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
ஆஷ்லே நீண்ட காலமாக குழந்தைப் பேறு இல்லாமல் சிகிச்சை பெற்று வந்தார். ஒரு குழந்தைக்காக ஏங்கிய அவருக்கு லக்கி ப்ரைஸாக 4 குழந்தைகள் கிடைத்துள்ளதாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் அவருக்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர்.