Frankenstein’s fish : ஆழ்கடலில் வசித்து பயமுறுத்தும் விசித்திர மீன்கள்! புகைப்படங்கள் உள்ளே...!
வித்தியாசமான கண்களுடன் பேய் போன்ற தோற்றமுடைய மீன் ஒன்றை பகிர்ந்துள்ளார்
ரஷ்யாவில் ஆழ்கடலில் மீன்பிடித்த மீனவர் ஒருவர் "ஃபிராங்கண்ஸ்டைனின் மீன்" என்று அழைக்கப்படும் வித்தியாசமான தோற்றமுடைய உயிரினத்தை சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்திருக்கிறார்.
ரஷ்யாவின் வடமேற்கு பகுதியில் உள்ள மர்மன்ஸ்கில் இழுவை படகில் பணிபுரியும் ரோமன் ஃபெடோர்ட்சோவ் என்ற மீனவர் வித்தியாசமான உயிரினங்களை தேடுவதையும் அவற்றின் பண்புகள் குறித்து அறிந்துகொள்வதிலும் அதிக ஆர்வமுடையவர். அவர் தனது வாழ்நாளின் பல மாதங்களை கடலில்தான் கழிக்கிறார். கடலின் ஆழத்தில் இருந்து பயமுறுத்தும் உயிரினங்களை கண்டறியும் அவர் , அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.சமீபத்தில், ரோமன் கிட்டத்தட்ட ஒளிஊடுருவக்கூடிய துடுப்புகள், வால் போன்ற நீளமான த்ரெஷர் மற்றும் வித்தியாசமான கண்களுடன் பேய் போன்ற தோற்றமுடைய மீன் ஒன்றை பகிர்ந்துள்ளார். இதற்கு சமூக வலைத்தளங்களில் 5,000க்கும் மேற்பட்ட லைக்குகளை குவித்துள்ளது. அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
ஃபெடோர்ட்சோவ் படம்பிடித்த வேறு சில விசித்திர உயினங்களை கீழே காணலாம்.
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram