Watch Video : கூட்டத்துக்குள் அதிவேகமாக புகுந்த சிவப்பு கார்... அடுத்து நடந்த சோகம்!
அதிவேகமாக சிவப்பு நிற கார் ஒன்று கூட்டத்துக்குள் புகுந்தது
அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட ஊர்வலத்தின் போது அதிவேகத்தில் நுழைந்த கார் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் அமெரிக்காவில் களைகட்டத் தொடங்கியுள்ளது. அமெரிக்க மக்கள் சாலையெங்கும் கொண்டாட்டமாக சாலைகளில் ஊர்வலமாக சென்று கிறிஸ்துமஸை கொண்டாடுவது வழக்கம்.
BREAKING: First video of a red Ford Escape breaking through barriers after mowing down parade goers and firing rifle into crowd in Waukesha, WI pic.twitter.com/QHDi2fsKDz
— David Kimball (@wxandnews) November 21, 2021
இந்நிலையில் அமெரிக்காவின் விஸ்கான்ஸின் மாகாணத்தின் புறநகர்ப்பகுதியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. மக்கள் சாலைகளில் ஆடல் பாடலுடன் ஊர்வலமாக சென்றுகொண்டிருந்தனர். அப்போது அதிவேகமாக சிவப்பு நிற கார் ஒன்று கூட்டத்துக்குள் புகுந்தது. காரின் அதிவேகத்தால் மிரண்டு போன மக்கள் அதிர்ச்சியிலேயே காரினை பார்த்துக்கொண்டு இருந்தனர்.
Graphic video shows a speeding vehicle ram through participants of the Christmas parade in #Waukesha, Wisc. Few details confirmed at this point though the police said they have a person of interest they’re looking into. pic.twitter.com/zKEX1VoC2T
— Andy Ngô 🏳️🌈 (@MrAndyNgo) November 22, 2021
ஆனால் கூட்டத்துக்குள் நுழைந்த கார் வேகத்தை குறைக்காமல் அதே வேகத்தில் சென்றது. இதில் 5 பேர் கார் மோதி உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். உடனடியாக் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாப்பு அதிகாரி துப்பாக்கியால் சுட்டு காரினை நிறுத்தியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக போலீசாரும், உளவுத்துறையினரும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
A car just plowed through a crowd at a Christmas parade in Waukesha, WI.
— Benny (@bennyjohnson) November 21, 2021
As many as 30 people people are reportedly injured.
Prayers up 🙏🏻
pic.twitter.com/lTEpo6nFZ7