Watch Video: அய்யய்யோ.. தவளை போல மாறிய முகம்.. வைரலாகும் நபர்!
நீண்ட காலமாக பணியாற்றி வரும் ஜாங்கிற்கு அவரது பணியின் காரணமாக முகத்தசைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது அவர் காற்று ஊதும்போது அவரின் இரு கன்னங்களும் தவளையின் கன்னங்கள் போல விரிவடைந்து துடிக்கிறது.

சீனாவில் கண்ணாடி தயாரிக்கும் தொழில் செய்பவரின் முகம் தவளைப் போல காணப்படும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அவர் தன்னை தவளை இளவரசன் என அழைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாம் செய்யும் தொழிலுக்கு ஏற்ப நம்முடைய நடை, உடை, பாவனை என அனைத்தும் மாறும் என்பதை நாம் உணர்ந்திருப்போம். இப்படியான நிலையில் தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் ஜாங்ஷான் என்ற இடம் உள்ளது. இங்கு கண்ணாடி உற்பத்தி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில் 48 வயதான ஜாங் என்பவர் பணியாற்றி வருகிறார்.
#Guangdong glassblower jokes he’s a “Frog Prince” after 30 years on the job pic.twitter.com/xOfQTCIAVP
— Shanghai Daily (@shanghaidaily) December 18, 2025
நீண்ட காலமாக பணியாற்றி வரும் ஜாங்கிற்கு அவரது பணியின் காரணமாக முகத்தசைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது அவர் காற்று ஊதும்போது அவரின் இரு கன்னங்களும் தவளையின் கன்னங்கள் போல விரிவடைந்து துடிக்கிறது. இது காண்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினாலும் அதனால் ஒருபோதும் ஜாங் வருத்தப்பட்டதே இல்லையாம். அவருடைய நண்பர்கள், உடன் பணியாற்றுபவர்கள் ஜாங்கை பெரிய வாய் சகோதரர் என அழைக்கிறார். அதேசமயம் ஜாங் தன்னை தானே தவளை இளவரசன் என பெயரிட்டு கொண்டு மகிழ்ந்துள்ளார்.
ஜாங் மத்திய ஹுனான் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் குவாங்டாங்கில் கண்ணாடித் தொழிலில் 30 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். இதுதொடர்பாக வைரலாகும் வீடியோவில் ஜாங் 1.5 மீட்டர் நீளமுள்ள உலோகக் குழாயைப் பயன்படுத்தி 1,000 டிகிரி செல்சியஸுக்கு மேல் சூடேற்றப்பட்ட உருகிய கண்ணாடி கலவையை எடுத்து அதனை குழாயில் ஊற்றி காற்று ஊதி அந்த கண்ணாடியை விரிவடைய செய்கிறார்.
தொடர்ந்து ஊதும்போது கண்ணாடியின் வடிவத்தை சரிசெய்ய அவர் குழாயை மென்மையாகச் சுழற்றுவதைக் காணலாம். அவர் வேலை செய்யும் இடத்தில் அதிக வெப்பநிலை நிலவும் என்பதால் ஜாங் பெரும்பாலும் சட்டையின்றி தான் காணப்படுகிறார்.
ஆரம்பத்தில் நான் வேலை செய்யும் போதெல்லாம் தனது முகம் சாதாரணமாக இருந்ததாக கூறும் ஜாங், மீண்டும் மீண்டும் காற்று வீசுவதன் விளைவாக, எனது முக தசைகள் காலப்போக்கில் விரிவடைந்து இருக்கலாம் என தெரிவிக்கிறார். மேலும் கன்னங்கள் பலூன் போல மாறியது பலரிடமும் என்னைக் கொண்டு போய் சேர்த்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சீனாவைப் பொறுத்தவரை கண்ணாடி ஊதுதல் என்பது ஆயிரம் ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட தொழிலாகும். தற்காலத்தில் பெரும்பாலான கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தி காற்றை ஊதுவதற்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், சிக்கலான தயாரிப்புகளை உருவாக்க பாரம்பரிய ஊதுதல் தேவைப்படுகிறதுஷான்சி மாகாணத்தில் உள்ள கிக்சியன் மாவட்டத்தில் சுமார் 35 ஆயிரம் நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
ஜாங்கின் கதை சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. பல வருடங்களாக அவரின் போராட்டம், வலி எத்தகையது என்பதை அந்த கடின உழைப்பு சொல்லும் என பயனர் ஒருவர் தெரிவித்துள்ளார்.




















