அம்மாவின் பாவாடைதான் ட்ரெஸ்.. நியூயார்க் சாலையில் ஆட்டம் போட்ட இந்திய இளைஞர்! காரணம் இதுதான்!!
பாலின பேதம் ஆடையிலும் இருக்கிறது. பெண்கள் பலரும் ஜீன்ஸ், டி ஷர்ட்களை மிடுக்காக அணிந்து கொள்வதற்கும், பாய் கட் வைத்துக் கொள்வதற்கும் தயங்குவதில்லை. ஆனால் இன்னும் ஆண்களுக்கு ஆடையை பாலினம் சார்ந்து பார்க்கக் கூடாது என்ற பக்குவம் அதிகமாக வந்துவிடவில்லை.
பாலின பேதம் ஆடையிலும் இருக்கிறது. பெண்கள் பலரும் ஜீன்ஸ், டி ஷர்ட்களை மிடுக்காக அணிந்து கொள்வதற்கும், பாய் கட் வைத்துக் கொள்வதற்கும் தயங்குவதில்லை. உடை என்பது அவரவர்களின் செளகரிகத்துக்கு ஏற்பவே இருக்கின்றன. அதற்கு ஏற்பவே ஆண்களும் பெண்களும் உடை அணிகின்றனர். சில இடங்களில் செளரியம் என்பதை தாண்டி உடையை சமூக கட்டமைப்புகளும் தீர்மானிக்கின்றன.
அந்த பேதத்தை, சமூக கட்டமைப்புகளை தனது ஆசைக்காக உடைத்தெறிந்துள்ளார் இந்தியாவைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஜைனில் மேத்தா. இவர் கங்குபாய் கத்தியாவாடி படத்தில் இடம்பெற்ற ஜும் ரே கோரி பாடலுக்கு லெஹங்கா பாவாடை அணிந்து ஆடிய ஆட்டம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜைனில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவை சில தினங்களுக்கு முன்னர் தான் பகிர்ந்துள்ளார். அவர் பகிர்ந்ததில் இருந்து இதுவரை 17 மில்லியன் பார்வைகளைக் கடந்து, 790 லைக்குகளையும் தாண்டி, 10 ஆயிரத்துக்கு மேலதிகமான பின்னூட்டங்களையும் பெற்று வைரலாகி வருகிறது.
அதில் கருத்து சொல்லியுள்ள பலரும், ஜைலினின் நடனம் அவர் சுதந்திர தாகத்தின் வெளிப்பாடு போல் இருக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளனர். இதை இப்பத்தான் செய்ய வேண்டும் என்ற சமூக கட்டமைப்புகளை உடைத்து ஜைலின் வலிமையாக விடுவித்துக் கொண்டுள்ளார் என்று பாராட்டியுள்ளனர்.
ஜைலின் தனது ஆசைகள் பற்றி பேசியுள்ளார். அவருடைய 5 வயதில் அவர் தனது விருப்பத்தை உணர்ந்துள்ளார். சமையலறையில் தன் வீட்டு உதவியாளருடன் ஆடிய நடனமே முதல் நடனம் என்று ஜைலின் கூறியுள்ளார். அதன் பின்னர் நடனம் தனது மூச்சில் கலந்ததால் தனது வீட்டின் அறையையே அவர் நடன அரங்காக நினைத்துக் கொண்டு ஆடி வந்துள்ளார்.
View this post on Instagram
ஆனால் பாலிவுட் படங்களில் நடிகைகளின் நடனங்களைக் கண்ட அவர், ஏன் நாமும் அப்பெண்களைப் போல் லெஹங்கா அணிந்து ஆடக் கூடாது என விரும்பியுள்ளார். அப்போது வீட்டில் தாயின் லெஹங்காவை எடுத்து போட்டுக் கொண்டு ஆடி தனது ஆசையை நிறைவேற்றிக் கொண்டுள்ளார். ஆனால் அது அறைக்குள் நடந்த சம்பவமாக அவர் மனதுக்கு மட்டுமே தெரிந்த சம்பவமாக அமைந்துவிட்டது.
நீண்ட நாட்களாகவே ஜைனிலுக்கு பொதுவெளியில் இவ்வாறாக லெஹாங்காவில் ஆட வேண்டும் என்ற ஆசை அதிகரித்துள்ளது. இதை அறிந்து கொண்ட ஜைனிலின் பெற்றோரும் அவரை ஊக்குவித்துள்ளனர். வீட்டில் விடுதலை கிடைக்க இப்போது சமூகத்தில் தனது விடுவிப்பை சாட்சிப் படுத்தியுள்ளார் ஜைனில்.