Watch video :வலுக்கட்டாயமாக நீச்சல் கற்றுக்கொடுக்கும் தாய் நீர்நாய்! பயந்து நடுங்கும் குட்டி! - க்யூட் வீடியோ!
இம்முறை குட்டி சற்றும் தயக்கமில்லாமல் தாயை ஃபாலோ செய்து நீந்த துவங்குகிறது.
![Watch video :வலுக்கட்டாயமாக நீச்சல் கற்றுக்கொடுக்கும் தாய் நீர்நாய்! பயந்து நடுங்கும் குட்டி! - க்யூட் வீடியோ! Watch: Mother Otter Teaches Its Baby Swimming, Internet Amazed Watch video :வலுக்கட்டாயமாக நீச்சல் கற்றுக்கொடுக்கும் தாய் நீர்நாய்! பயந்து நடுங்கும் குட்டி! - க்யூட் வீடியோ!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/06/1f45498291039d67058c4d0872f915c41662446664222224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மனிதர்களை போலவே விலங்குகளும் சில பொதுவான குணங்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் தாய்பாசம். பெரும்பாலான விலங்குகள் மனிதர்களை போலவே தங்களது குட்டிகளுக்கு சில அடிப்படை விஷயங்களை கற்றுக்கொடுக்கின்றன. அப்படித்தான் இங்கு ஒரு நீர் நாய் தனது குட்டிக்கு நீந்த கற்றுக்கொடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வீடியோ :
View this post on Instagram
அமேசிங் சயின்ஸ் என்னும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவில் வரமாட்டேன் என அடபிடிப்பது போல நிற்கும் குட்டி நீர்நாயினை , அதன் அம்மா தர தரவென வாயால் கவ்வி இழுத்தபடியே தண்ணீருக்கு அழைத்துச்செல்கிறது. இடையிடையே வர மறுத்து , தண்ணீரை கண்டு பயந்து குட்டி நீர் நாய் கரையிலேயே நிற்க , முதலில் தண்ணீரில் குதித்த நீர்நாய் , பின்னர் குட்டியை வாயில் கவ்விக்கொண்டு நீந்த ஆரமிக்கிறது. பார்க்கும் நமக்கு என்னவோ “இப்படித்தான் நீந்தனும் கத்துக்கோ” என கூறுவது போல இருக்கிறது. மறு கரைக்கு சென்றடைந்ததும் குட்டியின் தலையை வாயால் துடைத்துவிட்டு மீண்டும் புறப்பட்ட கரைக்கே திரும்புகிறது தாய் நீர் நய். இம்முறை குட்டி சற்றும் தயக்கமில்லாமல் தாயை ஃபாலோ செய்து நீந்த துவங்குகிறது. இந்த வீடியோவை கண்ட பலரும் ஹார்ட் எமொஜிகளை பறக்கவிட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)