Watch Video: அடேய்.. தகப்பா! செல்போனால் சிக்கிக்கொண்ட தந்தை.. சுட்டிக்குழந்தையின் வைரல் வீடியோ!
WATCH VIDEO: ஒரு குழந்தயை அம்மா இல்லாத நேரங்களில் சமாளிக்க ஒருவர் மிகச் சாதூர்யமான யுக்தியை கையாண்டு குழந்தையிடம் மாட்டிக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
WATCH VIDEO: ஒரு குழந்தையை அம்மா இல்லாத நேரங்களில் சமாளிக்க ஒருவர் மிகச் சாதுர்யமான யுக்தியை கையாண்டு குழந்தையிடம் மாட்டிக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
இணையம் வளர்ந்த பிறகு உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு மூலை முடுக்குகளிலும் நடக்கும் மிகவும் சுவாரஸ்யமான மற்றும் வித்தியாசமான நிகழ்வுகள் அனைத்தும் கண்ணிமைக்கும் உலகம் முழுவதும் வைரலாகி விடுவது வழக்கமாக இருக்கிறது. அவ்வகையில் இணையத்தில் தற்போது மிகவும் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. ஒரு குழந்தயை அம்மா இல்லாத நேரங்களில் சமாளிக்க ஒருவர் மிக சாதுர்யமான யுக்தியை கையாண்டு குழந்தையிடம் மாட்டிக்கொண்ட வீடியோ தான் அது.
வீடியோவில், குழந்தையினை மிகவும் லாவகமக மடியில் வைத்துக் கொண்டு ஆண் ஒருவர் (அநேகமாக அது அந்த குழந்தையின் தந்தையாக இருக்கலாம்) குழந்தைக்கு புட்டிப் பால் கொடுத்து வருகிறார். அப்போது அவர் குழந்தையின் தாய் முகத்தினை போட்டாவாக கட் செய்து தனது கழுத்தில் பக்கவாட்டில் ஒட்டிக்கொண்டார். குழந்தை தன்னை மடியில் வைத்திருப்பது தனது அம்மாதான் என நினைத்து பால் குடித்துக் கொண்டு இருந்தது. பின்னர் தனது அம்மாவின் முகத்தினை தொட முயற்சி செய்த குழந்தை, ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கரை நகர்த்தி விட்டது. இது தெரியாமல் மொபைலில் மூழ்கியிருந்த அந்த ஆண் அப்பட்டமாக மாட்டிக் கொண்டார். இந்த வீடியோ மிகவும் வேகமாக இணையத்தில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலர் நல்ல ஐடியா என்றும் குழந்தையிடம் அகப்பட்ட அந்த நபரை கலைத்தும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்