Viral News: கடலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்ட 165 ஆண்டுகள் பழமையான ஜீன்ஸ்...! ஏலம் போன விலை இவ்வளவா...?
165 ஆண்டுகள் பழமையான ஜீன்ஸ் பேண்ட் கடலுக்கு அடியில் மூழ்கிய கப்பலில் இருந்து கண்டெடுக்கப்பட்டு, கடந்த வாரம் ஏலத்தில் விடப்பட்டது.
நிலக்கரி சுரங்கங்களில் பணியாற்றுபவர்களுக்காக உருவாக்கப்பட்ட ஜீன்ஸ் பேன்ட்கள், தற்போது உலகளவில் மாடர்ன் உடைகளாக பல்வேறு டிசைன்களில் உலா வருகிறது. இந்த நிலையில், அமெரிக்காவில் வடக்கு கரோலினாவில் கடலில் மூழ்கிய கப்பல் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். அந்த கப்பலில் பெரிதும் சேதமடையாத வெள்ளை நிற ஜீன்ஸ் ஒன்றை கண்டுபிடித்தனர். இந்த ஜூன்ஸ்தான் உலகிலே மிகவும் பழமையான வீடியோ ஆகும்.
அதாவது, ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த கப்பல் 1857ம் ஆண்டு சான் பிரான்ஸிஸ்கோவில் இருந்து நியூயார்க்கிற்கு செப்டம்பர் 12ந் தேதி பனாமா வழியாக சென்று கொண்டிருந்தபோது, புயலில் சிக்கி கடலில் மூழ்கியது. இதன்மூலம், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள வெள்ளை ஜீன்ஸ் பேண்ட் 165 ஆண்டுகள் பழமையானது ஆகும்.
165 ஆண்டுகள் பழமையான இந்த வெள்ளை நிற ஜீன்ஸ் பேண்ட் கடந்த வாரம் ஏலத்தில் விடுக்கப்பட்டது. 5 பட்டன்களை கொண்டு அப்போதைய பேஷனாக உருவாக்கப்பட்ட இந்த வெள்ளை நிற ஜீன்ஸ் பேண்ட் யாருமே எதிர்பார்க்காத வகையில் 1 லட்சத்து 14 ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்கு அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூபாய் 94 லட்சத்திற்கு ஏலம் போனது.
இந்த ஜீன்ஸ் பேன்டை உலகின் பழமையான மற்றும் மிகவும் பிரபலமான டெனிம் நிறுவனம் தயாரித்திருக்கும் என்று பலரும் கருதினர். ஆனால், டெனிம் நிறுவனம் தங்களது முதல் ஜீன்ஸ் பேன்டை 1873ம் ஆண்டுதான் தயாரித்தனர். இந்த ஜீன்ஸ் பேண்ட் டெனிம் நிறுவனத்தை காட்டிலும் 16 ஆண்டுகளுக்கு முன்பே மாயமான கப்பலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனால், இந்த பேன்டை தயாரித்தது யார் என்பது இதுவரை தெளிவாகவில்லை. இந்த ஜீன்ஸ் பேண்ட் சுரங்கங்களில் பணியாற்றுபவர்களுக்காக உருவாக்கப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இந்த பழமையான ஜீன்ஸ் பேண்ட் தொடர்பாக வேறு எந்த தடயங்களும் கிடைக்கவில்லை.
உலகிலேயே பழமையான ஜீன்ஸ் என்று கண்டறியப்பட்டுள்ள இந்த வெள்ளை நிற ஜீன்ஸ் பேண்ட் ரூபாய் 94 லட்சம் ஏலம் போனது மிகப்பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த பேன்டை யார் தயாரித்தார்கள் என்பதை அறிந்து கொள்ளவும் பலரும் ஆர்வமாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : வரலாறு காணாத போராட்டம்...வன்முறைக்கு மத்தியில் மூடப்பட்ட விமான நிலையம்.. எங்கு நடந்தது? என்ன நடந்தது?
மேலும் படிக்க: NASA Moon Mission: பூமிக்கு திரும்பிய ஆர்டெமிஸ் 1 காப்ஸ்யூல்.. தரவுகளை ஆராயும் பணியில் நாசா.. அடுத்த மிஷன் எப்போது?