Watch Video | "என்ன விடுங்க நான் அத்தையை பார்க்க போறேன்.." : வைரலாகும் குழந்தையின் பாசம்..!
விமான நிலையத்தில் தன்னுடைய அத்தையை பார்க்க சென்ற குழந்தையின் வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.
சமூக வலைதளங்களில் பெரும்பாலும் குழந்தைகள் தொடர்பான வீடியோக்கள் எப்போதும் வைரலாவது வழக்கம். அந்தவகையில் தற்போது மீண்டும் ஒரு வீடியோ மிகவும் வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில் சிறு குழந்தை தன்னுடைய பாசத்தை வெளிப்படுத்தும் வகையில் காட்சிகள் அமைந்துள்ளன. இதனால் அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
அதன்படி ட்விட்டர் தளத்தில் ஒருவர் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ கத்தார் விமான நிலையத்தில் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், வெளிநாட்டிற்கு புறப்படும் பெண் ஒருவர் பாதுகாப்பு சோதனை முடிந்து தன்னுடைய விமானத்தின் லையனிற்கு சென்று கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் ஒரு சிறிய குழந்தை அப்பெண்ணை பார்க்க வேண்டும் என்றும் பாதுகாப்பு காவலர்களிடம் அனுமதி கேட்டுகிறது. அதன்பின்னர் அந்தப் பெண்ணை பார்த்து கட்டியணைத்து கொள்ளும் காட்சிகள் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.
She asked the officer permission to say goodbye to her aunt at the airport. pic.twitter.com/bcsb9rnxt6
— Kaptan Hindustan™ (@KaptanHindostan) October 14, 2021
இந்த வீடியோவை தற்போது வரை 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பர்த்து உள்ளனர். மேலும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்துள்ளனர். மேலும் இந்த வீடியோ தொடர்பாக பலரும் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அதாவது அந்த குழந்தையின் பாசம் நம்மை நெகிழ வைத்துள்ளது என்று சில பதிவிட்டுவருகின்றனர். மேலும் சிலர் இது மிகவும் க்யூட்டாக உள்ளது என்று கூறி வருகின்றனர்.
So cute 🥰
— The Nightmare (@The_Nightmare28) October 14, 2021
Good gesture by airport authority..
— Irshad khan (@Mrkhanirshad) October 15, 2021
Cute Baby 😘
Gosh! She's so cute! Barely a foot and a half high!
— Jyoti Singh (@synchronise1857) October 15, 2021
மேலும் படிக்க: துப்பாக்கியால் தாயை சுட்டுக் கொன்ற குழந்தை... கைதானார் தந்தை!
Biggboss Tamil 5 | அக்ஷரா கதையை விட அக்ஷராவைப் புடிக்கும் சார்.. அசடுவழிந்த ராஜுமோகன்..#Rajumohan #Akshara #BiggbossTamil5https://t.co/DnXdNjH7iZ
— ABP Nadu (@abpnadu) October 16, 2021