மேலும் அறிய

"தடைகளைத் தகர்ப்போம்.. எதேச்சதிகாரத்தை வெல்வோம்" தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்!

ஆழிப்பேரலையை எதிர்கொண்டு உயர்ந்து நிற்கும் திருவள்ளுவர் சிலை போல் தமிழ்நாடும் தடைகளைத் தகர்த்து முன்னேறும் என திமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

திருவள்ளவர் வழங்கிய திருக்குறளில் உள்ள அதிகாரங்களைத் துணையாகக் கொண்டு எதேச்சதிகாரத்தை வெல்வோம் என திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

அதில், "உலகப் பொது மறையாம் திருக்குறளை வழங்கிய திருவள்ளுவர் தமிழர்களின் உலக அடையாளமாகத் திகழ்கிறார். உலக வாழ்வியலுக்கான பொது முறையை வழங்கும் அறநெறிகளைக் கொண்ட திருக்குறளுக்கும் திருவள்ளுவருக்கும் உலகளாவிய புகழ் சேர்த்திடும் வகையில், முக்கடல் சங்கமிக்கும் குமரி முனையில் திருவள்ளுவர் சிலையை நிறுவியவர் நம் உயிருடன் கலந்திருக்கும் முன்னாள் முதல்வர் கருணாநிதி. 

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் வள்ளுவர் கோட்டம் அமைத்து புகழ் சேர்த்த தலைவர் கலைஞர், தமிழ்நாடு அரசின் சார்பில் திருவள்ளுவர் ஆண்டுக் கணக்கை நடைமுறைப்படுத்தினார். குறள் நெறியை அனைத்து மக்களுக்கும் பரப்புகின்ற வகையில் பேருந்துகளிலும் திருக்குறளை எழுதியவர் அவர்.

"காலத்தால் அழியாத காவியம்"

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தியாவின் தென் எல்லையாக உள்ள தமிழ்நாட்டின் குமரி முனையில் உள்ள பாறையில் திருக்குறளில் உள்ள அதிகாரங்களைக் குறிக்கின்ற வகையில் 133 அடி உயரத்திற்கான சிலையை நிறுவி, அதனைப் புத்தாயிரம் ஆண்டான 1-1-2000 அன்று வண்ணவிளக்கொளியில் வான்புகழ் வள்ளுவர் மின்னிடும் வகையில் திறந்து வைத்தார்.

வானுயர் வள்ளவர் சிலை திறக்கப்பட்ட அந்த நொடியில் உங்களில் ஒருவனான நான் உள்பட அத்தனை பேரும் மெய்சிலிர்த்து நின்றோம். உலகத் தமிழர்கள் அனைவரும் பெருமிதம் கொள்ளத் தக்க வகையில் திருவள்ளுவருக்கும் திருக்குறளுக்கும் பெருமை சேர்த்தார் கருணாநிதி.

கடல் நடுவே கம்பீரமாக உயர்ந்து நின்ற சிலையைக் காண உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்தனர். அண்ணாந்து பார்த்து அதிசயித்தனர். படகில் ஏறி சிலை உள்ள பாறைக்குச் சென்று முழுமையாகக் கண்டு களித்தனர்.

கருணாநிதி நிறுவிய பெருமைமிக்க திருவள்ளுவர் சிலைக்கு 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் நாள் இயற்கை ஒரு பெரும் சோதனையை உண்டாக்கியது. கடந்த சில நூற்றாண்டுகளில் தமிழ்நாடோ இந்தியாவோ கண்டிராத வகையில் ஆழிப்பேரலை எனும் சுனாமியின் தாக்குதல் இந்தோனேஷியாவில் தொடங்கி, தமிழ்நாட்டின் கடற்கரை நெடுகிலும் பெரும் பாதிப்பை உண்டாக்கியது.

அந்த நேரத்தில், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் இருந்த கருணாநிதி ஆழிப்பேரலையின் பாதிப்புகளை அறிந்ததும், “திருவள்ளுவர் சிலை எப்படி இருக்கிறது?” என்று கேட்டார்.

கருணாநிதி உருவாக்கிய தமிழ்ப் பண்பாட்டுச் சின்னங்களுக்கெல்லாம் வடிவம் கொடுத்த சிற்பி வை. கணபதி ஸ்தபதி அவர்களின் தலைமையில் வடிவமைக்கப்பட்டு நிறுவப்பட்ட குமரி முனை  சிலையின் தலை வரை ஆழிப்பேரலை தாக்கிய போதும், அதனை எதிர்கொண்டு எவ்வித சேதாரமுமின்றி கம்பீரமாக நின்றார் திருவள்ளுவர்.

காலத்தால் அழியாத காவியமாக நிலைப்பெற்றுவிட்ட திருவள்ளுவர் சிலைக்கு, கருணாநிதி இந்தியாவின் தென் எல்லையில் நிறுவிய தமிழ்ப்பண்பாட்டு அடையாளத்துக்கு இது வெள்ளி விழா ஆண்டு. ஆம். திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது.

தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்:

கால் நூற்றாண்டு காலத்தை கடந்து, இன்னும் பல நூற்றாண்டுகள்  நிலைத்து நிற்கவிருக்கும் சிலைக்கு, பேரறிவுச் சிலை (Statue of Wisdom) எனப் பெயர் சூட்டி விழா எடுத்து மகிழ்கிறது உங்களில் ஒருவனான என் தலைமையில் அமைந்துள்ள நம் திமுக அரசு.

வள்ளுவர் நமக்கு வெறும் அடையாளம் அல்ல. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற சமூக நீதித் தத்துவத்தை வழங்கிய பேராசான். சமுதாயம்-ஆட்சி முறை-  தனிமனித வாழ்க்கை இவை எப்படி அமையவேண்டும் என்பதற்கான அறநெறிகளை வழங்கிய வழிகாட்டி. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் அவர் தந்த ஈரடிக் குறள்கள் இன்றளவும் மானுட சமுதாயத்தின் மேன்மைக்குத் துணை நிற்கின்றன.

திராவிட இயக்கம் எப்போதும் திருக்குறளையும் திருவள்ளுவரையும் போற்றி வருகிறது. தந்தை பெரியார் திருக்குறள் மாநாடுகளை நடத்தினார். அண்ணா திருக்குறளின் பெருமையையும் திருவள்ளுவரின் சிறப்பையும் ஒவ்வொரு நிகழ்விலும் எடுத்துரைத்தார்.

கருணாநிதி, குறளோவியம் தீட்டினார். பொதுவாழ்வுக்கும் தனி வாழ்க்கைக்கும் துணை நிற்கும் திருக்குறளை வழங்கிய திருவள்ளுவரை இளந்தலைமுறைத் தமிழர்களும் போற்றிடும் வகையில் பேரறிவுச் சிலையின் வெள்ளிவிழா கன்னியாகுமரியில் டிசம்பர் 30, 31, மற்றும் ஜனவரி 1 ஆகிய நாட்களில் சிறப்போடு நடைபெறவிருக்கிறது.

வெள்ளிவிழாவின் அடையாளமாக வள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறைக்கும் அருகேயுள்ள விவேகானந்தர் மண்டபம் அமைந்துள்ள பாறைக்கும் இடையே கண்ணாடிப் பாலம் அமைக்கப்பட்டு திறக்கப்படுகிறது. கடல் நடுவே கண்ணாடிப் பாலம் என்பது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை.

அதனைத் திறம்பட நிறைவேற்றியிருக்கிறார் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு. பழமைக்குப் பழமையாய்-புதுமைக்குப் புதுமையாய் வள்ளுவம் திகழ்கிறது என்பதன் அடையாளமாக நவீனத் தொழில்நுட்பத்தில் கடல் நடுவே அமைந்துள்ள இந்த கண்ணாடிப் பாலத்தை உங்களில் ஒருவனான நான் திறந்து வைக்கவிருக்கிறேன். இனி சுற்றுலாப் பயணிகள் எளிதாக இரண்டு இடங்களுக்கும் சென்று வர முடியும். 

உயர்ந்து நிற்கும் திருவள்ளுவர் சிலை போல தமிழ்நாடும் தமிழர்களும் நாளும் உயர்ந்திட வேண்டும், அதற்கேற்ப வள்ளுவர் வழங்கிய திருக்குறளின் நெறி போற்றி நாம் வாழவேண்டும். தமிழின் சிறப்பை உலகம் உணர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் வெள்ளிவிழா கொண்டாடப்படுகிறது. விழா நாட்களில் மட்டுமல்ல எல்லா நாட்களும் திருக்குறளைப் போற்றுவோம். அதன் வழி நடப்போம்.

புத்தாயிரம் ஆண்டில் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டு, புத்தாண்டான 2025ல் பேரறிவுச் சிலையாகப் பெயர் பெற்றுத் திகழும் திருவள்ளுவர் சிலை, ஆழிப்பேரலையை எதிர்கொண்டு உயர்ந்து நிற்பதுபோல தமிழ்நாடும் தடைகளைத் தகர்த்து முன்னேறும். திருவள்ளவர் வழங்கிய திருக்குறளில் உள்ள அதிகாரங்களைத் துணையாகக் கொண்டு எதேச்சதிகாரத்தை வெல்வோம்" என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi: ”டெல்லியில் 3 கார் ஏறிய எடப்பாடி” - விளையாட்டு வீரர்களுக்கு காப்பீடு - DY CM உதயநிதி அறிவிப்பு
Udhayanidhi: ”டெல்லியில் 3 கார் ஏறிய எடப்பாடி” - விளையாட்டு வீரர்களுக்கு காப்பீடு - DY CM உதயநிதி அறிவிப்பு
Gold Rate New Peak: அடித்து துவைக்கும் தங்கம் விலை.. ஒரே நாளில் இவ்வளவு உயர்வா.? இன்று புதிய உச்சம்...
அடித்து துவைக்கும் தங்கம் விலை.. ஒரே நாளில் இவ்வளவு உயர்வா.? இன்று புதிய உச்சம்...
MGNREGS Wages: 100 நாள் வேலை திட்டம்..! ஊதியத்தை ரூ.400 ஆக உயர்த்திய மத்திய அரசு, தமிழர்களுக்கு எவ்வளவு தெரியுமா?
MGNREGS Wages: 100 நாள் வேலை திட்டம்..! ஊதியத்தை ரூ.400 ஆக உயர்த்திய மத்திய அரசு, தமிழர்களுக்கு எவ்வளவு தெரியுமா?
TVK Vijay: தவெகவின் முதல் பொதுக்குழு..! விஜய் பேசப்போவது என்ன? மாநில சுற்றுப்பயணம், பூத் கமிட்டி மாநாடு?
TVK Vijay: தவெகவின் முதல் பொதுக்குழு..! விஜய் பேசப்போவது என்ன? மாநில சுற்றுப்பயணம், பூத் கமிட்டி மாநாடு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Women Issue | ”பொம்பள பொறுக்கி நாயே..!HONEYMOON போறியா டா” சண்டை போட்ட முதல் மனைவி AIRPORT-ல் கத்தி கதறிய பெண்Coimbatore | ”பொம்பள பொறுக்கி நாயே..!HONEYMOON போறியா டா” சண்டை போட்ட முதல் மனைவி AIRPORT-ல் கத்தி கதறிய பெண்Vijay vs Udhayanidhi : ஜனநாயகன் vs பராசக்தி விஜய்யுடன் மோதும் உதயநிதி! அரசியல் ஆயுதமான சினிமாEPS meets Amit shah | ஆட்சியில் பங்கு கேட்ட பாஜக கறார் காட்டிய இபிஎஸ் அ.மலைக்கு துணை முதல்வர்? ADMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”டெல்லியில் 3 கார் ஏறிய எடப்பாடி” - விளையாட்டு வீரர்களுக்கு காப்பீடு - DY CM உதயநிதி அறிவிப்பு
Udhayanidhi: ”டெல்லியில் 3 கார் ஏறிய எடப்பாடி” - விளையாட்டு வீரர்களுக்கு காப்பீடு - DY CM உதயநிதி அறிவிப்பு
Gold Rate New Peak: அடித்து துவைக்கும் தங்கம் விலை.. ஒரே நாளில் இவ்வளவு உயர்வா.? இன்று புதிய உச்சம்...
அடித்து துவைக்கும் தங்கம் விலை.. ஒரே நாளில் இவ்வளவு உயர்வா.? இன்று புதிய உச்சம்...
MGNREGS Wages: 100 நாள் வேலை திட்டம்..! ஊதியத்தை ரூ.400 ஆக உயர்த்திய மத்திய அரசு, தமிழர்களுக்கு எவ்வளவு தெரியுமா?
MGNREGS Wages: 100 நாள் வேலை திட்டம்..! ஊதியத்தை ரூ.400 ஆக உயர்த்திய மத்திய அரசு, தமிழர்களுக்கு எவ்வளவு தெரியுமா?
TVK Vijay: தவெகவின் முதல் பொதுக்குழு..! விஜய் பேசப்போவது என்ன? மாநில சுற்றுப்பயணம், பூத் கமிட்டி மாநாடு?
TVK Vijay: தவெகவின் முதல் பொதுக்குழு..! விஜய் பேசப்போவது என்ன? மாநில சுற்றுப்பயணம், பூத் கமிட்டி மாநாடு?
Kasampatti BHS: திண்டுக்கல்லுக்கு கிடைத்த பெருமை..! காசம்பட்டி கோயில் காடுகளுக்கு அங்கீகாரம், தமிழகத்தின் 2வது மாவட்டம்
Kasampatti BHS: திண்டுக்கல்லுக்கு கிடைத்த பெருமை..! காசம்பட்டி கோயில் காடுகளுக்கு அங்கீகாரம், தமிழகத்தின் 2வது மாவட்டம்
America Vs Canada: எல்லாம் முடிஞ்சு போச்சு.! இனி நீ யாரோ, நான் யாரோ.. அமெரிக்க உறவை முறித்த கனடா.. ஏன்.?
எல்லாம் முடிஞ்சு போச்சு.! இனி நீ யாரோ, நான் யாரோ.. அமெரிக்க உறவை முறித்த கனடா.. ஏன்.?
CSK vsRCB: தோனியின் சிக்ஸால் வென்ற ஆர்சிபி, பழிவாங்க துடிக்கும் சிஎஸ்கே - இன்று பலப்பரீட்சை, 16 வருட ஏக்கம்..
CSK vsRCB: தோனியின் சிக்ஸால் வென்ற ஆர்சிபி, பழிவாங்க துடிக்கும் சிஎஸ்கே - இன்று பலப்பரீட்சை, 16 வருட ஏக்கம்..
BCCI: கடுப்பான பிசிசிஐ..! ஆள் சேக்குறீங்களா? கம்பீரின் சப்போர்ட்டர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவு..! யார் யார் தெரியுமா?
BCCI: கடுப்பான பிசிசிஐ..! ஆள் சேக்குறீங்களா? கம்பீரின் சப்போர்ட்டர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவு..! யார் யார் தெரியுமா?
Embed widget