Pongal Gift: பொங்கலுக்கு ஏன் ரூ.1000 வழங்கப்படவில்லை? ; நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்னது என்ன?
List of Pongal Gift: பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி,சர்க்கரை,ஒரு முழு கரும்பு அளிக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது; ஏன் ரூ. 1000 வழங்கவில்லை குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்துள்ளார்.
ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் விழா கொண்டாடப்படவுள்ள நிலையில், கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியது போல, இந்த ஆண்டும் தர முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, ஒரு முழு கரும்பு பொதுமக்களுக்கு அளிக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், நேற்றைய அறிவிப்பில் ரூ. 1000 வழங்குவது தொடர்பாக அறிவிப்பு வெளியாகவில்லை.
இது தொடர்பாக அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்படிருந்ததாவது, “
2025-ஆம் ஆண்டில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடிட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக் கரும்பு வழங்கிட தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழர்களின் பழம்பெரும் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கும் விழாவாகப் பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்தநாள் அறுவடைத் திருவிழாவாகவும், இயற்கைக்கும், உழவர் பெருங்குடி மக்களுக்கும் அவர்தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழாவாகவும் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.
2025-ஆம் ஆண்டு தைப்பொங்கலைச் சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் 2,20,94,585 அரிசி குடும்ப அட்டைதாரர்களும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களும் பயன்பெறுவார்கள்.
மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி சேவைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பெங்கல் பரிசுத் தொகுப்புடன் இவற்றையும் சேர்த்து வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஏன் ரூ. 1000 வழங்கப்படவில்லை?
இந்த நிலையில், ஏன் ரூ. 1000 வழங்கப்படவில்லை என்பது குறித்து தமிழ்நாட்டின் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்துள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது , “ கடந்த ஆண்டு மழை புயல் உள்ளிட்ட பேரிடர்களில் ரூ. 2000 கோடி வரையிலான தொகையானது செலவு செய்யப்பட்டது. மேலும் , பேரிடர் நிதியை கொடுக்கம்படி மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தோம்.
அப்போது, ரூ. 3000 கோடி கேட்கப்பட்ட நிலையில், மத்திய அரசானது ரூ.275 கோடியை மட்டுமே கொடுத்தது.
இந்நிலையில், தற்போது ரூ. 280 கோடியானது பொங்கல் தொகுப்பிற்காக செலவு செய்யப்பட்டுள்ளது.
இந்த தருணத்தில் மகளிர் உரிமைத் தொகையான ரூ. 1000, பொங்கல் திருநாளுக்கு முன்பாகவே வழங்குவது தொடர்பாக பரிசீலிக்கிறோம் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
Also Read: PM Modi: இந்த இணையதளத்தை பாருங்க.! முக்கியமாக குழந்தைகளே, மாணவர்களே , இளைஞர்களே - பிரதமர் மோடி