Watch Video | அப்போ டூத் பேஸ்ட்ல உப்பு... இப்போ டூத் பேஸ்ட்ல காபியா? யாரும் ட்ரை பண்ணாதீங்க மக்களே.. வைரல் வீடியோ !
பல் துலக்க பயன்படும் டூத் பேஸ்ட் வைத்து ஒருவர் காபி போடும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.
சமூக வலைதளத்தில் எப்போதும் உணவு தொடர்பான வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அதிலும் குறிப்பாக அந்த உணவு சற்று வித்தியாசமாக இருந்தால் அது நிச்சயம் வைரலாகும். தேநீருக்கு பல பேர் பிரியர்கள் என்று இருக்கிறார்கள். அதேபோல் காபிக்கும் பலர் பிரியர்களாக இருக்கின்றனர். இவர்கள் தவிர பிளாக் காபி, க்ரீன் டீ உள்ளிட்டவற்றிற்கும் கூட பிரியர்கள் உள்ளனர். ஆனால் இவர்களிலிருந்து சற்று மாறுபட்டு ஒருவர் வேறு ஒன்றை முயற்சி செய்துள்ளார்.
அதாவது இந்த சம்பவம் தொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருவர் வீடியோவாக பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஒருவர் டூத் பேஸ்ட் உடன் காபி ஒன்றை செய்கிறார். அத்துடன் அந்த காபியை அவர் குடித்துவிட்டு செய்யும் செய்கை பலரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. இந்த வீடியோவை தற்போது வரை பலர் பார்த்து வருகின்றனர்.
View this post on Instagram
மேலும் இந்த வீடியோ தொடர்பாக தங்களுடைய கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர் நான் இதை வீட்டில் செய்து பார்த்தேன் மிகவும் மோசமாக உள்ளது என்று பதிவிட்டுள்ளார். மற்றொருவர் இதை நிச்சயம் வீட்டில் செய்து பார்க்காதீங்க என்றும் சிலர் பதிவிட்டு வருகின்றனர். அத்துடன் சிலர் இதையேல்லாம் யார் இவர்களுக்கு முயற்சி செய்ய சொல்கிறார்கள் என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: ஒரு வருடம் கழித்து வீட்டுக்கு வந்த தந்தை.. அன்பால் உருகவைத்த மகள்கள் - வீடியோ!