மேலும் அறிய

Trump Warns Oman: ட்ரம்ப்பின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.! ஓமனை தகர்த்துவிடுவேன் என எச்சரிக்கை; எதற்காக தெரியுமா.?

US Iran War: அமெரிக்கா - ஈரான் இடையேயான ஹார்முஸ் பிரச்னையில் தற்போது ஓமனும் சிக்கியுள்ளது. ஆம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அந்நாட்டை தகர்த்துவிடுவேன் என ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளார். அது எதற்காக என்று தெரிந்துகொள்வோம்.

ஈரான் உடனான தொடர்ச்சியான பதற்றங்களுக்கு நடுவே, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஓமனுக்கு நேரடி எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பாக பேசிய அவர், அந்த முக்கிய நீர்வழியை எந்த நாடும் கட்டுப்படுத்த அனுமதிக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது, ​​ஹார்முஸ் ஜலசந்தி அனைத்து நாடுகளுக்கும் திறந்திருக்க வேண்டும் என்று கூறிய ட்ரம்ப், அதனை "சர்வதேச நீர்நிலைகள்" என்று குறிப்பிட்டு, எந்த ஒரு நாடும் அதன் மீது உரிமை கோர முடியாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

டிரம்ப் கூறியது என்ன.?

அமைச்சரவை கூட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப்பிடம், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தியின் கட்டுப்பாட்டை, ஈரானும், ஓமானும் பகிர்ந்து கொள்ளும் முன்மொழியப்பட்ட அமைப்புக்கு அவர் ஒப்புதல் அளிப்பாரா என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ட்ரம்ப், "நாங்கள் அதை கண்காணிப்போம். ஆனால், யாரும் அதை கட்டுப்படுத்த முடியாது. அது எங்கள் கலந்துரையாடல்களின் ஒரு பகுதியாகும்," என்று கூறினார்.

ஓமனுக்கு எச்சரிக்கை

மேலும், ஓமனுக்கு நேரடி எச்சரிக்கை விடுத்த ட்ரமப், "அவர்கள் அதை கட்டுப்படுத்த விரும்புகிறார்கள். யாராலும் அதை கட்டுப்படுத்த முடியாது. இது சர்வதேச கடல் பகுதி. ஓமன் மற்ற நாடுகளைப் போலவே நடந்துகொள்ள வேண்டும். இல்லையென்றால் நாங்கள் அவர்களை தகர்க்க வேண்டியிருக்கும்" என்று அவர் எச்சரித்தார். இருப்பினும், பின்னர் தனது நிலையை மாற்றி, "அவர்கள் அதை புரிந்துகொள்கிறார்கள். அவர்கள் நலமாக இருப்பார்கள்" என்று தெரிவித்தார்.

ஈரான் ஒப்பந்தத்தின் நிலை குறித்து ட்ரம்ப் கூறியது என்ன.?

ஈரானுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் குறித்து டொனால்ட் ட்ரம்ப் அதிருப்தி தெரிவித்துள்ளார். அது குறித்து பேசிய அவர், "ஈரானின் நோக்கங்கள் மிகவும் வலுவானவை. அவர்கள் ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார்கள். ஆனால், அவர்களின் நிபந்தனைகளில் எங்களுக்கு திருப்தி இல்லை, இருப்பினும் நாங்கள் திருப்தி அடைவோம்" என்று கூறினார். மேலும், "ஒன்று, நாம் இதற்கு ஒப்புக்கொள்ள வேண்டும், அல்லது நமது பணியை முடிக்க வேண்டியிருக்கும்" என்றும் அவர் மீண்டும் எச்சரிக்கை விடுத்தார்.

அதோடு, "இந்த ஒப்பந்தம் குறைபாடற்றதாக இருக்க வேண்டும். இந்த ஒப்பந்தத்திற்கு மிகப்பெரிய தடைகளில் ஒன்று ஹார்முஸ் ஜலசந்தி ஆகும். அங்கு எதிர்கால கட்டுப்பாடு நிச்சயமற்றதாக உள்ளது. ஈரான் தனது அணுசக்தித் திட்டம் மற்றும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் தொடர்பான அமெரிக்காவின் கோரிக்கைகளை பரிசீலித்து வருகிறது," என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

ஏற்கனவே மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது ஓமனுக்கும் சேர்த்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளதால், பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பான பிரச்னை முடிவுக்கு வராததால், ஏற்கனவே உலகளாவிய எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு, இந்தியா உட்பட பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பான பிரச்னை மேலும் அதிகரித்தால், அது உலக நாடுகளுக்கு எரிபொருள் கிடைப்பதில் இன்னும் சிக்கலை ஏற்படுத்தும். ஏற்கனவே விலைவாசிகள் உயர்ந்து வரும் நிலையில், தற்போது ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை, மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Advertisement

தலைப்பு செய்திகள்

Sheikh Hasina: இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
Trump on Iran War: “போரே வேணாம்டா சாமி, என்ன விட்டுடுங்க.!“ என்ன விலை கொடுத்தாவது ஈரானுடன் ஒப்பந்தம்; ட்ரம்ப் முனைப்பு
“போரே வேணாம்டா சாமி, என்ன விட்டுடுங்க.!“ என்ன விலை கொடுத்தாவது ஈரானுடன் ஒப்பந்தம்; ட்ரம்ப் முனைப்பு
North Korea Heatwave: “வெப்ப அலைல சிக்காம தப்பிக்கணும்னா, நாய் சூப் சாப்பிடுங்க“ - மக்களுக்கு அட்வைஸ் கொடுத்த அதிபர் யார்.?
“வெப்ப அலைல சிக்காம தப்பிக்கணும்னா, நாய் சூப் சாப்பிடுங்க“ - மக்களுக்கு அட்வைஸ் கொடுத்த அதிபர் யார்.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Embed widget