மேலும் அறிய

போரின் பிடியில் காசா.. அடுத்த கண்டம் வேற இருக்கு.. ஐநா பகீர் எச்சரிக்கை!

காசாவில் இன்னும் ஒரு சில நாள்களில் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாலஸ்தீன பகுதியான காசாவில் கடந்தாண்டு அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கிய போர் 4 மாதங்களாக தொடர்ந்து வருகிறது. இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்த அதற்கு பதில் தாக்குதல் நடத்துகிறோம் என்ற பெயரில், இஸ்ரேல் பாதுகாப்பு படைகள், பாலஸ்தீனத்தில் உள்ள காசாவில் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது.

மனித உரிமை மீறலில் ஈடுபடுகிறதா இஸ்ரேல்?

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலியான பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை நெருங்க உள்ளது. போரில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் பெண்களும் குழந்தைகளுமே ஆவர். போர் நிறுத்தம் அறிவிக்கக் கோரி உலக நாடுகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இன்னும் பல மாதங்களுக்கு போர் நீடிக்க உள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.

போரால் பாதிக்கப்பட்டவர்களை வெளியேற்றவும் காசாவில் அத்தியாவசிய பொருள்களை எடுத்து செல்லவும் இடைக்கால போர் நிறுத்தம் அவ்வப்போது அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, இன்னும் ஒரு சில நாள்களில் அடுத்தகட்ட தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காசாவில் பஞ்சம் ஏற்படும் அபாயம்:

5 மாதங்களாக நீடித்து வரும் போரில் 5 வார காலத்திற்கு இடைக்கால போர் நிறுத்தம் அறிவிக்கக் கோரி எகிப்து, கத்தார் மற்றும் அமெரிக்க நாடுகளை சேர்ந்த மத்தியஸ்தர்கள் முயற்சி செய்து வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில், ஒரே நாள் இரவில் காசாவில் இஸ்ரேல் வீசிய குண்டுகளால் 91 பேர் மரணம் அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இருப்பினும், இடைக்கால போர் நிறுத்தத்தை அறிவிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து மத்தியஸ்தர்கள் தரப்பில் பேசுகையில், "ஒப்பந்தத்தை இறுதி செய்யும் தருவாயில் உள்ளோம். இஸ்ரேலில் காவலில் வைக்கப்பட்டுள்ள பாலஸ்தீனியர்களையும் காசாவில் பிடித்துவைக்கப்பட்ட இஸ்ரேல் பிணைக்கைதிகளையும் விடுவிக்கவும் பேசி வருகிறோம்" என்றார்.

கத்தார் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மஜீத் அல் அன்சாரி இதுகுறித்து கூறுகையில், "இன்றுக்குள் இடைக்கால போர் நிறுத்தம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என கத்தார் நம்புகிறது" என்றார்.

ஏற்கனவே, போரால் நிலைகுலைந்துள்ள காசாவில் பஞ்சம் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக ஐநா எச்சரித்துள்ளது. குறிப்பாக, உணவு பொருள் தட்டுப்பாடு ஏற்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய உலக உணவு திட்டத்தின் துணை நிர்வாக இயக்குநர் கார்ல் ஸ்காவ், "எதுவும் மாறவில்லை என்றால் வடக்கு காசாவில் பஞ்சம் ஏற்படுவது நிச்சயம்" என்றார்.

இதையும் படிக்க: பாலஸ்தீன விடுதலைக்காக உயிரைவிட்ட அமெரிக்க விமானப்படை வீரர்... இஸ்ரேல் தூதரகம் முன்பு பரபரப்பு!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: ” சீக்கிரமா வீட்டிற்கு போயிடுங்க” இன்று இரவு இந்த 12 மாவட்டங்களில் மழை இருக்கு.!
TN Rain: ” சீக்கிரமா வீட்டிற்கு போயிடுங்க” இன்று இரவு இந்த 12 மாவட்டங்களில் மழை இருக்கு.!
ரூ.15 கோடிக்கு ஆளுநர் பதவி.? சதுரங்க வேட்டை பட பாணியில்  ஏமாந்த சென்னை விஞ்ஞானி.!
ரூ.15 கோடிக்கு ஆளுநர் பதவி.? சதுரங்க வேட்டை பட பாணியில் ஏமாந்த சென்னை விஞ்ஞானி.!
Annamalai: முதல்வர் ஸ்டாலினால் இதை சொல்ல முடியுமா? ஆதாரத்தை வெளியிடுவேன்: புது செக் வைத்த அண்ணாமலை 
Annamalai: முதல்வர் ஸ்டாலினால் இதை சொல்ல முடியுமா? ஆதாரத்தை வெளியிடுவேன்: புது செக் வைத்த அண்ணாமலை 
"ஆக்சன் - அக்ரஷன்" இடதுசாரி தீவிரவாதத்திற்கு ஆப்பு.. ஒரே போடு போட்ட மத்திய அரசு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Palani Drunken Women: சுக்குநூறான POLICE பூத்.. அடித்து நொறுக்கிய பெண்.. பழனியில் பரபரப்பு!Aloor shanavas: ”விஜய் கூத்தாடியா உங்களுக்கு?” கண்டித்த திருமாவளவன்! ஷா நவாஸ் புது விளக்கம்Aadhav Join TVK  IT Wing : ஆதவ் கையில் IT WING.. விஜய் மாஸ்டர் ப்ளான்! திமுகவுக்கு ஸ்கெட்ச்ADMK Support Mining Bill : டங்ஸ்டன் சுரங்கம் தம்பிதுரை பேசியது என்ன? ஆதரித்த அதிமுக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: ” சீக்கிரமா வீட்டிற்கு போயிடுங்க” இன்று இரவு இந்த 12 மாவட்டங்களில் மழை இருக்கு.!
TN Rain: ” சீக்கிரமா வீட்டிற்கு போயிடுங்க” இன்று இரவு இந்த 12 மாவட்டங்களில் மழை இருக்கு.!
ரூ.15 கோடிக்கு ஆளுநர் பதவி.? சதுரங்க வேட்டை பட பாணியில்  ஏமாந்த சென்னை விஞ்ஞானி.!
ரூ.15 கோடிக்கு ஆளுநர் பதவி.? சதுரங்க வேட்டை பட பாணியில் ஏமாந்த சென்னை விஞ்ஞானி.!
Annamalai: முதல்வர் ஸ்டாலினால் இதை சொல்ல முடியுமா? ஆதாரத்தை வெளியிடுவேன்: புது செக் வைத்த அண்ணாமலை 
Annamalai: முதல்வர் ஸ்டாலினால் இதை சொல்ல முடியுமா? ஆதாரத்தை வெளியிடுவேன்: புது செக் வைத்த அண்ணாமலை 
"ஆக்சன் - அக்ரஷன்" இடதுசாரி தீவிரவாதத்திற்கு ஆப்பு.. ஒரே போடு போட்ட மத்திய அரசு!
Look Back 2024 : 2024-ன் சைலண்ட் சம்பவக்காரர்கள்.. நிதிஷ் முதல் பெத்தேல் வரை... கவனம் ஈர்த்த வீரர்களின் முழுவிவரம் இதோ!
Look Back 2024 : 2024-ன் சைலண்ட் சம்பவக்காரர்கள்.. நிதிஷ் முதல் பெத்தேல் வரை... கவனம் ஈர்த்த வீரர்களின் முழுவிவரம் இதோ!
பெண்களே! ஏதாச்சும் பிரச்னையா? உடனே போனை எடுங்க.. 181க்கு கால் பண்ணுங்க!
பெண்களே! ஏதாச்சும் பிரச்னையா? உடனே போனை எடுங்க.. 181க்கு கால் பண்ணுங்க!
RP Udhayakumar: எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சில் சட்டப்பேரவை ஆடிப் போய்விட்டது - ஆர்.பி. உதயகுமார்
எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சில் சட்டப்பேரவை ஆடிப் போய்விட்டது - ஆர்.பி. உதயகுமார்
Watch Video: செம்ம கட்! அசத்தலான பந்து வீச்சில் அசால்ட் செய்த அருந்ததி ரெட்டி! - வீடியோ
Watch Video: செம்ம கட்! அசத்தலான பந்து வீச்சில் அசால்ட் செய்த அருந்ததி ரெட்டி! - வீடியோ
Embed widget