"போரில் பூத்த காதல்" - ரஷ்ய போர் வீரரை திருமணம் செய்த உக்ரைன் இராணுவத்தை சேர்ந்த பெண்!
வழக்கமாக திருமணங்களில் கையில் பூங்கொத்து வைத்திருப்பார்கள். ஆனால் இந்த மணமகள் ஒரு கோதுமைக் கதிரின் கொத்தை கைகளில் வைத்திருந்தனர். இது போரில் உணவின்றி தவிக்கும் அவலத்தை குறிக்கிறது.
நாட்டின் "ஜோன் ஆஃப் ஆர்க்" என்று அழைக்கப்படும் உக்ரேனிய துப்பாக்கி சுடும் வீரரான எமரால்டு எவ்ஜெனியா, ரஷ்யாவின் படையெடுப்பின் தொடக்கத்தில் சந்தித்த ஒருவரை திருமணம் செய்து கொண்ட செய்தி அனைவர் மனதையும் கவர்ந்துள்ளது.
பாதுகாப்பு வீரர்கள் தினம்
31 வயதான அவர், கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 14) அன்று, கார்கிவ் கேட்டில் நடத்தப்பட்ட ஒரு விழாவில், ரஷ்ய போர் வீரர் Evgeniy Stipanyuk உடன் திருமண சபதம் ஏற்றுக் கொண்டார். இந்த திருமணம் நிகழ்ந்த நாள் தம்பதியினருக்கு மிகவும் ஸ்பெஷலாக அமைந்தது. அந்த நாளை 'பாதுகாப்பு வீரர்கள்' தினம் எனக் கொண்டாடுகிறார்கள். உக்ரேனிய ஆயுதப்படையின் வீரர்கள் மற்றும் போரினால் உயிரிழந்த வீரர்கள் ஆகியோரை கௌரவிக்கும் பொது விடுமுறையாக அனுசரிக்கப்படுகிறது. அதுபோக அந்த பெண்ணின் கணவரின் பிறந்தநாளும் அன்றுதான் என்பதால் மணமக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் அந்த நாளை தேர்ந்தெடுத்து உள்ளனர்.
கோதுமைக் கொத்து
கடந்த பிப்ரவரி மாதம் யுத்தம் ஆரம்பித்த நிலையில், இவர்களது நிச்சயதார்த்தம் ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இந்த இருவருக்கும் இராணுவத் தளபதி திருமணத்தை நடத்தி வைத்தார். சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட புகைப்படங்களில், எமரால்டு ஒரு நீண்ட வெள்ளை நிற கவுனை அணிந்திருந்தார், அவரது கணவர் தனது இராணுவ சீருடையில் துப்பாக்கியை ஏந்தியிருந்தார். வழக்கமாக திருமணங்களில் கையில் பூங்கொத்து வைத்திருப்பார்கள். ஆனால் இந்த மணமகள் ஒரு கோதுமைக் கதிரின் கொத்தை கைகளில் வைத்திருந்தனர். இது போரில் உணவின்றி தவிக்கும் அவலத்தை குறிக்கிறது.
View this post on Instagram
இன்ஸ்டாகிராம் பதிவு
"இன்று, நான் அதிகாரப்பூர்வமாக இராணுவ வீரரின் மனைவியாகிவிட்டேன். உக்ரைனின் ஆயுதப்படைகளின் ஜெனரல் இந்த விழாவை தலைமை தாங்கி நடத்தினார். இதைவிட சரியான திருமணத்தை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை! இது ஒரு சிறப்பான நாள். எல்லோருக்கும் விடுமுறை உள்ள நாள்", என்று அவர் இன்ஸ்டாகிராமில் எழுதினார்.
வான்வழி தாக்குதல்
ரஷ்யா - உக்ரைன் போருக்கு முன்பு, மணப்பெண் எமரால்டு, நகை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்கத் தொடங்கியபோது, அவர் இராணுவத்தில் சேர்ந்தார். மேலும் சஃபாரி சிறப்புப் படைகளின் ஒரு பகுதியாக ஆனார். உக்ரைனில் உள்ள ஒவ்வொரு பெரிய நகரத்தையும் குறிவைத்து ரஷ்யா ஒரு வான்வழித் தாக்குதலை நடத்திய சில நாட்களுக்குப் பிறகு தற்போது எமரால்டின் திருமணம் நடந்துள்ளது. அந்த மிகப்பெரிய தாக்குதல் பொதுமக்களைக் கொன்றது மட்டுமின்றி, உள்கட்டமைப்பை அழித்தது. ஈரானில் தயாரிக்கப்பட்ட "காமிகேஸ்" பாணியிலான ட்ரோன்கள் கொண்டு தாக்குதல் நடத்தியபோது, திங்கட்கிழமை அதிகாலை உக்ரைனின் தலைநகரான கீவ் முழுவதும் குண்டுவெடிப்புகளின் சத்தம் ஒலித்தது. எரிசக்தி சேமிப்பிடங்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலால் பல கட்டிடங்கள் தீப்பிடித்து எரிந்தன. குறைந்தது எட்டு பேர் உயிரிழந்தனர் என்று தெரிகிறது.