Russia-Ukraine War : 800 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் - உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம்
உக்ரைன் நடத்திய பாதுகாப்பு தாக்குதலில் 800 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேற்று அறிவித்தார். அவரின் அறிவிப்பைத் தொடர்ந்து உக்ரைன் தலைநகர் மீது, மற்ற சில பகுதிகளிலும் ரஷ்யா தாக்குதல் நடத்தியது ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனால் ஏராளமான சேதம் ஏற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்தியா இந்த விவகாரத்தில் நடுநிலை வகித்து வருகிறது.
இந்தநிலையில், உக்ரைன் நடத்திய பாதுகாப்பு தாக்குதலில் 800 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
வியாழன் அன்று நடந்த தாக்குதலில் இருந்து ரஷ்யப் படைகள் மீது அதன் ஆயுதப் படைகள் சுமார் 800 பேர் பலியாகியுள்ளதாக உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளதாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது. கொல்லப்பட்ட வீரர்களின் எண்ணிக்கையை அமைச்சகம் குறிப்பிடுகிறதா என்பது குறித்து உடனடியாகத் தெரியவில்லை. உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சகத்தின் கூற்றுப்படி, 30 க்கும் மேற்பட்ட ரஷ்ய டாங்கிகள், ஏழு ரஷ்ய விமானங்கள் மற்றும் ஆறு ஹெலிகாப்டர்கள் அழிக்கப்பட்டுவிட்டதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.
#stoprussia
— Defence of Ukraine (@DefenceU) February 25, 2022
🔊Заступник Міністра оборони України Ганна Маляр інформує:
Орієнтовні втрати противника станом на 03:00 25.02.2022
Літаки 7 од.
Гелікоптери 6 од.
Танки - більше 30 од.
ББМ - 130 од.
Втрати особового складу противника орієнтовно (уточнюється) 800 осіб.
உக்ரைன் மீது குண்டு மழை பொழியும் வீடியோக்களும், அதிரும் கட்டிடங்களின் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், ரஷ்ய படையெடுப்பில் இதுவரை 10 இராணுவ அதிகாரிகள் உட்பட 137 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 316 பேர் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.
நேற்றைய தாக்குதலை தொடர்ந்து தற்போது ரஷ்யா, உக்ரைனில் 2வது நாள் தாக்குதலை தொடங்கியுள்ளது. இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்