Turkey Teeth: ஆபத்துகள் நிறைந்த பற்களை அழகாக்கும் சிகிச்சைகள்! எச்சரிக்கும் மருத்துவர்கள்!
Turkey Teeth: அழகான பல் வரிசைக்காக செய்யப்படும் சிகிச்சை மிகவும் ஆபத்தானவை என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.
'Turkey teeth'- உலக அளவில் இது மிகவும் பிரபலமான பல் சிகிச்சை முறை. பல்வேறு நாடுகளில் இருந்தும், குறிப்பாக பிரிட்டிஷ் இல் இருந்து துருக்கி நாட்டிற்கு சென்று அழகான பல் வரிசை வேண்டும் என்பதற்காக சிகிச்சை மேற்கொள்ளும் வழக்கம் அதிகரித்துவிட்டது. அழகு என்பதற்காக செய்யப்படும் இதுபோன்ற சிகிச்சைகள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது என்று எச்சரிக்கின்றனர் பல் மருத்துவர்கள்.
துருக்கி நாட்டில் பல் வரிசைகளை அழகாக்க சிறப்பு சிகிச்சை செய்யப்படுகிறது. பல்வேறு நாடுகளில் இருந்தும் இங்கு வந்து தங்கள் பற்கலை அழக்காக்கும் சிகிச்சைகளை பலர் மேற்கொள்கின்றனர். குறிப்பாக, பிரிட்டிஷ் நாடுகளில் இருந்து இங்கு வருவது அதிகரித்திருப்பதாகவும், இந்தச் சிகிச்சையால் ஏற்படும் பக்க விளைவுகளை சரி செய்வதற்காக பிரிட்டிஷ் நாடுகளில் உள்ள பல் மருத்துவர்கள் மிகவும் மெனக்கெடுவதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும், இதுபோன்ற சிகிச்சை ஆபத்தானவை என்றும் எச்சரிக்கின்றனர். ,Love Island.' என்ற தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ ஒன்றில் தான் இந்த ’Turkey teeth' முறை பிரபலமானது.
‘There’s a lot of stuff I didn’t know’: Love Island’s Jack Fincham on his ‘Turkey teeth’https://t.co/J5aCu0ewbC@LoveIsland #turkeyteeth #dentaltourism #loveisland pic.twitter.com/c4kOzmEJBL
— Dentistry (@Dentistry) July 14, 2022
அதென்ன ’Turkey teeth':
Dental veneers மற்றும் Dental crowns என்ற இரண்டு முறைகளில் துருக்கியில் பல் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. veneers என்பது ஓடுகள் போன்றது. பற்களில் இருக்கும் அழுக்கு, பற்களை வெண்மையாக மாற்றுதல், பல் தேய்மானத்தை சரி செய்தல் உள்ளிட்டவைகள் இங்கு மேற்கொள்ளப்படுகின்றன. அழகான பல்வரிசை பெறுவதற்கே இந்தச் சிகிச்சை. veneers- ரகத்தில் ஏற்கனவே இருக்கும் பற்களின் மேல் வைக்கப்படும் ஓர் அடுக்குதான் இது. உதாரணமாக, நாம் செயற்கை நகங்கள் வைத்துக்கொள்வது பற்றி கேள்விப்படிருப்போம் இல்லையா? அதுபோலதான் இது. ஒரு லேயர் போல புதிய பளிச்சென்ற பற்கள் ஒட்டப்படும்.
Dental crowns எனப்படுவது கடவாய் பற்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். இது பெரும்பாலும் metals, porcelain, resin மற்றும் செராமிக்ஸ் (ceramics) உள்ளிட்டவைகளால் தயாரிக்கப்படுகிறது. பல் சொத்தை காரணமாக ஏற்படும் பிரச்சினைகளுக்கு இந்த முறை பயன்படுத்தப்படுகிறது.
இவை இரண்டுமே ஆரோக்கியமற்றது என்கிறது மருத்துவ உலகம்.
I don’t have a problem with people going to Turkey or other countries to have their teeth done. After all it’s free choice. Just don’t expect me to fix it on the NHS for £288 when it all goes wrong. #turkeyteeth #dentistry
— Dr Jeff Sherer (@drjeff_tooth) July 14, 2022
’Turkey teeth'- ஆல் பாதிக்கப்பட்ட Lisa Martyn-னின் கதை:
பிரிட்டிஷ் நாடுகளில் வசிக்கும் லிசா மார்டைன்( Lisa Martyn) தன்னுடைய மகனின் திருமணத்தில் அழகான சிரிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதற்காக பல் சிகிச்சைக்காக கடந்த ஆண்டு துருக்கிக்குப் பறந்தார். அங்கு அவருக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இனிவரும் காலங்களில் தன்னுடைய சிரிப்பு மிகவும் அழகாக இருக்கப்போகிறது என்று நினைத்தவருக்கு வலியே மிஞ்சியது. ஆம். சிகிச்சை முடிந்த சில மாதங்களில்லேயே அவரால் எதுவும் சாப்பிட முடியவில்லை. உள்ளூர் மருத்துவரிடம் சென்றுபோது அவருக்கு veneers முறையில் பல் லேயர் வைக்கப்படமால், crowns-களைப் பொருத்தி சிகிச்சை அளித்திருப்பது தெரியவந்துள்ளது.
crowns என்றால் பற்களில் மேலே அழகான, சீரான செயற்கை பற்களை பொருத்த, இயற்கையாக இருக்கும் பல்லில் இருந்து சிறது பகுதியை அகற்றி விடுவார்கள். இப்படி செய்வது முற்றிலும் ஆபத்தில்தான் முடியும். லிசாவின் பற்களில் 60-70 சதவீத பற்கள் நீக்கப்பட்டு, அதில் செய்ற்கை பற்கள் பொருத்தப்பட்டு சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
How far would you go for a perfect smile?
— BBC Breakfast (@BBCBreakfast) July 14, 2022
A new BBC documentary has found that hundreds of people who travelled abroad for 'Turkey Teeth' - made popular by reality TV shows like Love Island, have suffered from serious complications.
Read More: https://t.co/624bepbhff pic.twitter.com/jD4bdrppbC
இதன் காரணமாக, சில நாட்களுக்கு பிறகு, லிசாவிற்கு பற்களில் நரம்பு வலி (nerve sensitivity) உணவு சாப்பிட்டால் பற் கூச்சம் உள்ளிட்ட பிரச்சினைகள் அதிகரிக்க தொடங்கியது. லிசா வெகுநாட்களாக தாளாத பல் வலியால் அவதிப்பட்டுள்ளார். இதற்காக நிறைய வலி நிவாரணி எடுத்து கொண்டுள்ளார். இதன் விளைவு 12 கிலோ எடை குறைந்து மெலிந்து போனார். தற்போது லிசாவால் உணவை சரியாக மெல்லவோ, கடிக்கவோ கூட முடியவில்லை என்று வேதனைப்படுகிறார்.
அழகான பல் வரிசைக்காக துருக்கியில் அவர் கொடுத்த விலை 3,500 யூரோக்கள். இதனால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய அவர் முதற்கட்டமாக செலவழித்தத் தொகை 2000 யூரோக்கள். இதற்கு தீர்வாக, லிசாவுக்கு மேலும் ஒரு சிகிச்சை செய்ய வேண்டும் என்றிருக்கிறார்கள் பல் மருத்துவர்கள்.
Turkey teeth'- ஆல் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். லிசாவின் கதை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், பிரிட்டிஷ் நாட்டில் வசிக்கும் பல் மருத்துவர்கள் இந்தச் சிகிச்சையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு அதிகமாக சிகிச்சை வழங்கிவருவதாக தெரிவித்துள்ளனர்.