மேலும் அறிய
Advertisement
கோவாக்சினுக்கு அங்கீகாரம் தர அமெரிக்கா மறுப்பு; மனுவை தள்ளுபடி செய்தது!
கோவாக்சின் தயாரிப்பில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் அமெரிக்கக் கூட்டாளி நிறுவனமான ஆக்குஜென் தாக்கல் செய்த விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, முழு அனுமதியைக் கேட்டு விண்ணப்பிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசியை அவசரகாலப் பயன்பாட்டுக்கு அனுமதி கேட்ட விண்ணப்பத்தை அமெரிக்காவின் உணவு, மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு- எப்.டி.ஏ. தள்ளுபடி செய்துள்ளது. இதனால் கோவாக்சின் தடுப்பூசியை அந்த நாட்டில் முறைப்படி அறிமுகம் செய்வதே தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
கொரோனா முதல் அலையின் முடிவில் இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதில், இந்திய அரசின் மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும் ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனமும் இணைந்து தயாரித்த கோவாக்சினுக்கு மூன்றாம் கட்ட சோதனை முடியும் முன்னரே அவசரகாலப் பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன் பிறகே மூன்றாம் கட்ட பரிசோதனை நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதை முன்னிட்டு, உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் கோவாக்சின் தடுப்புமருந்துக்கு அவ்வளவாக வரவேற்பு இல்லாத நிலை இருந்துவருகிறது. குறிப்பாக, உலக சுகாதார அமைப்பு உள்பட முதன்மையான அமைப்புகள் இன்னும் கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கவில்லை. இந்தியாவிலிருந்து பன்னாட்டுப் பயணம் மேற்கொள்பவர்கள் இந்த மருந்தை இரண்டு தவணை எடுத்துக்கொண்டாலும் அவர்களுக்கு பல நாடுகளில் நுழைவு அனுமதி கிடைப்பதில்லை. ஐரோப்பிய ஒன்றிய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்போ அமெரிக்காவின் எப்.டி.ஏ.வோ அனுமதி அளித்தால்தான் உலக சந்தையில் கோவாக்சின் தடுப்புமருந்தை விற்பனை செய்ய முடியும் என்பது இன்னொரு அவசர அவசியம்.
இந்த நிலையில்தான், கோவாக்சின் தயாரிப்பில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் அமெரிக்கக் கூட்டாளி நிறுவனமான ஆக்குஜென் தாக்கல் செய்த விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, முழு அனுமதியைக் கேட்டு விண்ணப்பிக்க உள்ளதாக வியாழனன்று தெரிவித்துள்ளது.
உயிரியல் உரிம விண்ணப்பம் எனப்படும் முழு அனுமதிக்காக விண்ணப்பிக்க, ஆக்குஜென் நிறுவனம் கூடுதல் பரிசோதனையை நடத்திக்காட்ட வேண்டும் என்று எப்.டி.கே. தெரிவித்ததை அடுத்தே, இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
உயிரியல் உரிம விண்ணப்பம் எனப்படும் முழு அனுமதிக்காக விண்ணப்பிக்க, ஆக்குஜென் நிறுவனம் கூடுதல் பரிசோதனையை நடத்திக்காட்ட வேண்டும் என்று எப்.டி.கே. தெரிவித்ததை அடுத்தே, இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
பொதுவாக, இதைப் போல மாற்றங்கள் நிகழும்போது பங்குச்சந்தையில் மருந்து நிறுவனத்துக்கு ஏற்றமோ இறக்கமோ ஏற்படக்கூடும். இதை முன்னிட்டு, நியூயார்க் பங்குச் சந்தையில் அந்த நிறுவனம் விளக்கம் ஒன்றை வெளியிட்டது. அதில், ”ஆக்குஜென் நிறுவனத்தின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களைப் பரிசீலித்த எப்.டி.ஏ., அவசரகாலப் பயன்பாட்டு அனுமதிக்குப் பதிலாக முழு அனுமதிக்காக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தியது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து எப்.டி.ஏ.வுடன் ஆக்குஜென் தரப்பில் பேச்சு நடத்தப்படுவதாகவும் அனுமதிக்கு ஒப்புதல் பெறுவதற்கு இன்னும் கூடுதல் ஆவணங்கள் தேவைப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. இது பற்றி ஊடகங்களுக்குப் பேசிய ஆக்குஜென் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் சங்கர் முசுனிரி, “ எங்களுக்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவுக்கு கோவாக்சினைக் கொண்டுவருவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.” என்றார். இந்தியாவில் கோவாக்சின் தடுப்பூசிக்காக பலரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion