மேலும் அறிய

Kashmir Issue: காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா. சபையில் எழுப்பிய துருக்கி அதிபர்..! பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசினாரா?

ஐக்கிய நாடுகள் பொது சபையில் காஷ்மீர் விவகாரத்தை துருக்கி அதிபர் எர்டோகன் மீண்டும் எழுப்பியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீர் விவகாரம்:

இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் சுதந்திரம் பெற்றதில் இருந்தே இரண்டு நாடுகளுக்கும் முக்கிய பிரச்னையாக இருந்து வருவது காஷ்மீர் விவகாரம். காஷ்மீர் தனக்குதான் சொந்தம் என பாகிஸ்தான் உரிமை கொண்டாடி வரும் நிலையில், இந்தியா அதை தொடர்ந்து கடுமையாக எதிர்த்து வருகிறது. குறிப்பாக, காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச அமைப்புகளில் பாகிஸ்தான் பல முறை எழுப்பியுள்ளது. ஆனால், இது உள்நாட்டு விவகாரம் என்றும் காஷ்மீரில் பயங்கரவாதத்தை பாகிஸ்தான் வளர்த்து வருவதாகவும் இந்தியா குற்றஞ்சாட்டி வருகிறது. காஷ்மீர் விவகாரத்தில் பெரும்பாலான நாடுகளின் ஆதரவு இந்தியாவுக்கு இருந்தாலும், பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்து வரும் முக்கிய நாடாக இருப்பது துருக்கியே (துருக்கி).

ஐ.நா. சபையில் காஷ்மீர் பிரச்னை:

இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் பொது சபையில் காஷ்மீர் விவகாரத்தை துருக்கியே அதிபர் எர்டோகன் மீண்டும் எழுப்பியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் பொது சபையின் 78ஆவது அமர்வில் உலக தலைவர்கள் மத்தியில் பேசிய எர்டோகன், "தெற்காசிய பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழுமைக்கு வழி வகுக்கும் மற்றொரு முக்கியமான முன்னேற்றம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தை. இதற்கான ஒத்துழைப்பை துருக்கி வழங்க தயாராக உள்ளது. ஒத்துழைப்பு மூலம் காஷ்மீரில் ஒரு நியாயமான மற்றும் நீடித்த அமைதியை நிறுவுவதே வழிவகுக்கும். இந்த விவகாரத்தில்  எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு துருக்கி தொடர்ந்து ஆதரவளிக்கும்" என்றார்.

இந்தியா இருப்பது பெருமை:

தொடர்ந்து பேசிய அவர், "ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பங்கு வகிப்பது பெருமைக்குரியது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் 15 தற்காலிக உறுப்பினர்களை நிரந்தர உறுப்பினர்களாக ஆக்க விரும்புகிறேன். இந்த 20 நாடுகள் (5 நிரந்தர உறுப்பினர்கள் + 15 தற்காலிக உறுப்பினர்கள்) சுழற்சி முறையில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்களாக இருக்க வேண்டும். ஆனால், உங்களுக்கு தெரியும், உலகம் ஐந்தை விட பெரியது. உலகம் என்பது அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா மற்றும் ரஷ்யாவை பற்றியது மட்டுமல்ல" என்றார்.

காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா பொது சபையில் துருக்கியே அதிபர் எழுப்புவது இது முதல்முறை அல்ல. கடந்த ஆண்டு, உயர்மட்ட ஐ.நா பொதுச் சபை அமர்வில் உலகத் தலைவர்களிடம் தனது உரையின் போது காஷ்மீர் பிரச்னையை துருக்கியே அதிபர் எழுப்பினார். அப்போது பேசிய அவர், "இந்தியாவும் பாகிஸ்தானும் 75 ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் இறையாண்மையையும் சுதந்திரத்தையும் நிறுவிய பிறகும், இன்னும் ஒருவருக்கொருவர் அமைதியையும் ஒற்றுமையையும் ஏற்படுத்தவில்லை. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. காஷ்மீரில் ஒரு நியாயமான, நிரந்தரமான, அமைதியான சூழல் நிலைநாட்டப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். அதற்காக பிரார்த்தனை செய்கிறோம்" என்றார். கடந்த 2020ஆம் ஆண்டும், ஐநா பொது சபையில் காஷ்மீர் விவகாரம் குறித்து எர்டோகன் பேசியிருந்தார். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க 

Amit Shah: மகளிர் இடஒதுக்கீடு மசோதா: "அரசியலாக்கும் சில கட்சிகள்”...மக்களவையில் அட்டாக் செய்த அமித் ஷா!

தலைப்பு செய்திகள்

US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget