மேலும் அறிய

Amit Shah: மகளிர் இடஒதுக்கீடு மசோதா: "அரசியலாக்கும் சில கட்சிகள்”...மக்களவையில் அட்டாக் செய்த அமித் ஷா!

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை சில கட்சிகள் அரசியலாக்கப் பார்ப்பதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றச்சாட்டியுள்ளார்.

Amit Shah: மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை சில கட்சிகள் அரசியலாக்கப் பார்ப்பதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார். 

மகளிர் இடஒதுக்கீடு மசோதா:

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தொடர்பாக பல ஆண்டுகளாக பல்வேறு விவாதங்கள் நடந்து வருகிறது. நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் 33 சதவிகிதம் இடங்களை பெண்களுக்கு ஒதுக்கும் வகையிலான இந்த மசோதா, கடந்த 1996ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் முதல்முறையாக தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அப்போது மசோதா நிறைவேற்ற படவில்லை.

இதைதொடர்ந்து, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவரது ஆட்சி காலத்தில் இந்த மசோதாவை நிறைவேற்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டார்.  ஆனால், போதிய ஆதரவு இல்லாமல் போனதால் அவரது கனவு நனவாகாமலே போனது. இதை தொடர்ந்து, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கடந்த 2010ஆம் ஆண்டு, மாநிலங்களவையில் நிறைவேற்றியது.

மாநிலங்களவையில் நிறைவேற்றினாலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால், அதை மக்களவையில் நிறைவேற்ற முடியவில்லை. இதை தொடர்ந்து, கடந்த 13 ஆண்டுகளாக மக்களவையில் நிறைவேற்றப்படாமல் இருந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை பாஜக தலைமையிலான அரசு நேற்று அறிமுகம் செய்தது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடந்து வரும் நாடாளுமன்ற சிறப்புக்கூட்டதொடரின்போது மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், இந்த மசோதாவை அறிமுகம் செய்தார். இதனை தொடர்ந்து, இதன் மீதான விவாதம் நடந்து வருகிறது.

”ஆண்களை விட பெண்கள் திறமைசாலிகள்"

விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "இந்த மசோதா நாட்டின் முக்கிய முடிவுகளை எடுப்பதிலும், கொள்கை வகுப்பதிலும் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்யும். இன்று உலகளவில் பெண் விமானிகள் 5 சதவீதமாக உள்ளனர். ஆனால், இந்தியாவில் 15 சதவீதமாகவும் உள்ளனர்.  பெண்கள், ஆண்களுக்கு சமம் என மசோதா மீதான விவாதத்தில் பேசிய பல பெண் எம்.பிக்கள் கூறினர். ஆனால், ஆண்களை விட பெண்கள் திறமைசாலிகள் என்று நான் கூறுவேன். பெண்களுக்கான பாதுகாப்பு, மரியாதை மற்றும் பங்கேற்பு, இந்த நாட்டின் பிரதமரான பிறகு மோடியால் வழங்கப்பட்டுள்ளது.

பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவது புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறிக்கும். மகளிருக்கு அதிகாரமளிக்கும் மசோதாவாக மகளிர் இடஒதுக்கீடு மசோதா உள்ளது. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பாஜக மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றவில்லை. இந்த மசோதாவை சில கட்சிகள் அரசியலாக்கப் பார்க்கிறது. ஜி 20 உச்சி மாநாட்டில் பெண்கள் தலைமையிலான முன்னேற்றத்தின் அவசியத்தை பிரதமர் மோடி முன்வைத்தார். சில கட்சிகளுக்கு பெண்கள் அதிகாரம் என்பது அரசியல் பிரச்னையாகவும், வாக்கு வங்கி அரசியலுக்கான கருவியாகவும் இருக்கலாம். ஆனால், பாஜக மற்றும் நரேந்திர மோடிக்கு இது கொள்கை, நம்பிக்கையின் பிரச்னை. நேற்றைய தினம் வரலாற்றில் எழுதப்படும். நேற்று விநாயக சதுர்த்தி, புதிய நாடாளுமன்ற திறப்பு விழா மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தோம்" என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மைலேஜ் அதிகரிக்க வேண்டுமா? இதை தவறாமல் பண்ணுங்க.. எரிபொருள் சிக்கனத்தை உறுதிப்படுத்தும் 5 வழிகள்!
மைலேஜ் அதிகரிக்க வேண்டுமா? இதை தவறாமல் பண்ணுங்க.. எரிபொருள் சிக்கனத்தை உறுதிப்படுத்தும் 5 வழிகள்!
Hormuz Indian LPG Ship: இந்தியாவால மட்டும் தான் முடியும்.! போர் பதற்றத்துக்கு நடுவே ஹார்முஸை அசால்ட்டாக கடந்த LPG கப்பல்
இந்தியாவால மட்டும் தான் முடியும்.! போர் பதற்றத்துக்கு நடுவே ஹார்முஸை அசால்ட்டாக கடந்த LPG கப்பல்
சபரிமலை முதல் மசூதி வரை: பெண்களின் உரிமைக்கான உச்ச நீதிமன்றத்தின் இறுதி விசாரணை நாளை! முக்கிய தீர்ப்பு?
சபரிமலை முதல் மசூதி வரை: பெண்களின் உரிமைக்கான உச்ச நீதிமன்றத்தின் இறுதி விசாரணை நாளை! முக்கிய தீர்ப்பு?
எரிவாயு சிலிண்டர் முன்பதிவில் அதிரடி மாற்றம்! காத்திருப்பு காலம் அதிகரிப்பு: காரணம் என்ன?
எரிவாயு சிலிண்டர் முன்பதிவில் அதிரடி மாற்றம்! காத்திருப்பு காலம் அதிகரிப்பு: காரணம் என்ன?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Opinion Poll 2026: ஆட்சியைப் பிடிக்கும் அதிமுக; கேரளா, அசாம், மேற்கு வங்கத்தில் யார் யார்? பரபரப்பு கருத்துக்கணிப்பு முடிவுகள்!
Opinion Poll 2026: ஆட்சியைப் பிடிக்கும் அதிமுக; கேரளா, அசாம், மேற்கு வங்கத்தில் யார் யார்? பரபரப்பு கருத்துக்கணிப்பு முடிவுகள்!
திறந்து 1 ஆண்டுகளே ஆன நிலையில் விரிசல்! சிதம்பரம் அருகே தேசிய நெடுஞ்சாலைப் பாலம் மூடல்,,,வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
திறந்து 1 ஆண்டுகளே ஆன நிலையில் விரிசல்! சிதம்பரம் அருகே தேசிய நெடுஞ்சாலைப் பாலம் மூடல்,,,வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
Sathankulam Case: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேருக்கும் மரண தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேருக்கும் மரண தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
’’கே.வி. பள்ளிகளில் தமிழ் இல்லையா? திமுகவுக்கு ஏன் இந்த வேல?’’ ஆதாரங்களை அடுக்கிய அண்ணாமலை
’’கே.வி. பள்ளிகளில் தமிழ் இல்லையா? திமுகவுக்கு ஏன் இந்த வேல?’’ ஆதாரங்களை அடுக்கிய அண்ணாமலை
Rain Alert: சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்பு- எப்போ வரை? சர்ப்ரைஸ் செய்த வானிலை மையம்
Rain Alert: சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்பு- எப்போ வரை? சர்ப்ரைஸ் செய்த வானிலை மையம்
Seeman:
Seeman: "சீமான் - பாலா நட்பு அனைவருக்கும் பாடம்" மேடையிலே நெகிழ்ந்த சிங்கம்புலி!
TN Election 2026: ஓரங்கட்டப்பட்ட பிராமின்கள் - ஒருவருக்கு கூட சீட் தராத BJP, ADMK, DMK - 35 ஆண்டுகளில் முதல்முறை
TN Election 2026: ஓரங்கட்டப்பட்ட பிராமின்கள் - ஒருவருக்கு கூட சீட் தராத BJP, ADMK, DMK - 35 ஆண்டுகளில் முதல்முறை
RCB: ஆர்சிபி ரசிகர்கள் மறக்கவே மறக்காத 2 நோ பால்! எப்போ நினைத்தாலும் இனிக்கும்!
RCB: ஆர்சிபி ரசிகர்கள் மறக்கவே மறக்காத 2 நோ பால்! எப்போ நினைத்தாலும் இனிக்கும்!
Embed widget