மேலும் அறிய

Trump Iran War: ”போரை முடிச்சுக்கலாம்னு இருக்கேன்” ஈரான் எண்ணெயை கூட வித்துக்கலாம் - ட்ரம்ப் அறிவிப்பு

Trump Iran War: ஈரான் மீதான போரை முடித்துக் கொள்வது குறித்து பரிசீலித்து வருவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Trump Iran War: ஈரான் மீதான போரில் எங்கள் இலக்கை அடைவதில் மிகவும் நெருக்கமாக உள்ளதாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியுள்ளார்.

”ஈரான் போரை முடிச்சுக்கலாம்னு இருக்கேன்” 

சர்வதேச அளவில் நிலவும் கச்சா எண்ணெய் விநியோக தட்டுப்பாட்டை சீராக்கும் நோக்கில், ஈரான் எண்ணெய் மீதான பொருளாதார தடைகளை அமெரிக்கா சற்றே தளர்த்தியுள்ளது. இந்த சூழலில், ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை குறைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக அதிபர் ட்ரம்ப் பேசியுள்ளார். தங்களது எதிரிகளை தலை சுற்ற செய்யும் அளவிற்கு தக்க பதிலடி தந்துள்ளதாக ஈரான் உச்சபட்ச தலைவர் மொஜ்தாபா அறிவித்தபிறகு, ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை கொண்டு சவுதி அரேபியா மற்றும் இஸ்ரேல் மீது புதிய தாக்குதலை தொடங்கியது. இந்நிலையில் தான், மத்திய கிழக்கு போர் தொடர்பான தனது தனது நிலைப்பாட்டை ட்ரம்ப் வெளிப்படுத்தியுள்ளார்.

”இலக்கை நெருங்கிவிட்டோம்” - ட்ரம்ப்

தனது சமூக வலைதள கணக்கில் வெளியிட்ட பதிவில், “மத்திய கிழக்கு நாட்டில் அமெரிக்கா மேற்கொண்ட மாபெரும் நடவடிக்கையை குறைத்துக் கொள்வது குறித்து பரிசீலித்து வரும் நிலையில், இந்த நடவடிக்கையில் நமது நோக்கங்களை அடைவதற்கான நிலையை அமெரிக்கா மிகவும் நெருங்கி உள்ளது” என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். மற்றொரு செய்தியாளர் சந்திப்பில், “ஹார்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்தும் மற்ற நாடுகள், தேவைக்கேற்ப அதனைப் பாதுகாத்து கண்காணிக்க வேண்டும். ஆனால் அமெரிக்கா அதனை பயன்படுத்தாததால் அதனை பாதுகாக்க வேண்டியதில்லை” எனவும் குறிப்பிட்டுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி தொடங்கிய ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை விரைந்து முடிவுக்கு கொண்டு வரும் மனநிலையை ட்ரம்ப் எட்டிவிட்டார் என்பதற்கான ஆதாரமாக அவரது புதிய பதிவு பார்க்கப்படுகிறது.

வெள்ளை மாளிகை சொல்வது என்ன?

இதனிடையே, வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளர் கரோலின் லீவிட்வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “ ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை நிறைவேற்றுவதற்குச் சுமார் 4-6 வாரங்கள் ஆகும் என்று அதிபரும் பென்டகனும் கணித்திருந்தனர். நாளை மூன்றாவது வாரம் தொடங்குகிறது. அமெரிக்க ஆயுதப் படைகள் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. நாள் செல்லச் செல்ல, ஈரானிய ஆட்சி முடக்கப்பட்டு வருகிறது, மேலும் அமெரிக்காவையும் நமது நட்பு நாடுகளையும் அச்சுறுத்தும் அவர்களின் திறன் கணிசமாகக் குறைக்கப்பட்டு வருகிறது” என குறிப்பிட்டுள்ளார். 

ஈரான் மீதான பொருளாதார தடைகளுக்கு தளர்வு

ஹார்மூஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையேற்றத்துடன், விநியோகத்திலும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையை சீராக்கும் நோக்கில், மார்ச் 20ம் தேதிக்கு முன்னர் கப்பல்களில் ஏற்றப்பட்ட ஈரானிய கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை விற்பனை செய்துகொள்ள அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது. இந்த அங்கீகாரமானது ஏப்ரல் 19ம் தேதி வரை நீடிக்கும் என தெரிவித்துள்ளது. இதன் மூலம் சுமார் 140 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உடனடியாக உலக சந்தைக்கு கொண்டு வரப்படும் என்றும், ஈரானால் உருவான தற்காலிக அழுத்தம் குறையும் என்றும் அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Holiday Special Bus : சுதந்திர தின தொடர் விடுமுறை.! வெளியூர் செல்ல சிறப்பு பேருந்து- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
சுதந்திர தின தொடர் விடுமுறை.! வெளியூர் செல்ல சிறப்பு பேருந்து- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
Maruti Suzuki SUV: 7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
Embed widget