(Source: Poll of Polls)
செயற்கை உறுப்பின் மூலம் உறவு...கதறி அழுத ஏமாற்றப்பட்ட பெண்கள்... திருநங்கைக்கு 10 ஆண்டுகள் சிறை
போலி ஆணுறுப்பைப் பயன்படுத்தி இரண்டு பெண்கள் மற்றும் ஒரு இளம்பெண்ணை பாலியல் உறவுக்குத் தூண்டிய திருநங்கை ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
போலி ஆணுறுப்பைப் பயன்படுத்தி இரண்டு பெண்கள் மற்றும் ஒரு இளம்பெண்ணை பாலியல் உறவுக்குத் தூண்டிய திருநங்கை ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
32 வயதான தர்ஜித் சிங், ஹன்னா வால்டர்ஸ் என்ற பெண்ணாகப் பிறந்து இப்போது ஆணாக அடையாளம் காணப்படுகிறார். இருட்டில், உடலுறவின் போது ஆடை அணிந்து கொண்டே செயற்கை ஆணுறுப்பை இவர் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் ஸ்னேர்ஸ்புக் கிரவுன் நீதிமன்றத்தில் நடந்த விசாரணைக்குப் பிறகு, மூன்று முறை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் ஆறு முறை உடல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் கொலை மிரட்டல் விடுத்த ஒரு குற்றச்சாட்டு ஆகியவற்றில் சிங் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
லேசான திரவம் ஒன்றால் பாதிக்கப்பட்ட பெண்ணை தாக்கியது, பின்னர் மொபைல் ஃபோன் மூலம் மூக்கை உடைத்தது தீ வைப்பதாக மிரட்டல் விடுத்திருப்பது ஆகியவை நீதிமன்ற விசாரணையில் தெரியவந்தது. பாதிக்கப்பட்ட பெண்ணை அவர் எப்படி அறைந்தார், குத்தினார் என்பதும் விசாரணையின் போது தெரியவந்தது.
புதன்கிழமை அன்று நடைபெற்ற விசாரணையின்போது பேசிய நீதிபதி ஆஸ்கார் டெல் ஃபேப்ரோ, "எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு கடுமையான தீங்கை விளைவிக்கும் ஆபாத்தானவராக குற்றம்சாட்டப்பட்டவர் இருக்கிறார். ஆபத்தான குற்றவாளியான சிங், பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக வன்முறை மற்றும் தாக்குதல்களை மீண்டும் மீண்டும் செய்துள்ளார்.
நேர்மையற்ற ஒரு கைதேர்ந்த பொய்யராக இருந்துள்ளார். வெளிப்படையாக இருப்பதற்குப் பதிலாக, பாலினம் பற்றி நேர்மையாக உரையாடுவதற்குப் பதிலாக, சிங் வஞ்சகத்தின் பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். நீங்கள் ஆண் என்று அவர்களை வற்புறுத்தி நம்ப வைத்து அதே பாலினமாக நடந்து கொண்டீர்கள்" என்றார்.
சிங்குக்கு 10 ஆண்டுகளுக்கு சிறை தண்டனை வழங்கிய நீதிபதி, பாலியல் ரீதியாக யாரையும் துன்புறுத்தக்கூடாது என உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, விசாரணையின்போது, பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்த வாக்குமூலம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருந்தது. அவர் அளித்த வாக்குமூலத்தில், "எனது மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. எனக்கு கடுமையான கவலை மற்றும் மனச்சோர்வு உள்ளது. நான் மனச்சோர்வுக்கு மருந்து எடுக்க வேண்டியிருந்தது.
அப்போது எனக்கு 16 வயதுதான், என் வாழ்க்கையில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய இடத்தில் இருந்தேன். இதை பிரதிவாதி தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார். அவர் என்னை தன்னுடைய சொந்த சுயநலத்திற்காக பயன்படுத்தி கொண்டார்" என கூறியுள்ளார்.
மற்றொரு பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்குமூலத்தில், "விசாரணைக்கு சற்று முன்பு எனக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. அவர் என்ன செய்தார் என்பதை வார்த்தைகளில் சொல்ல முடியாமல் தவிக்கிறேன். உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும், மனரீதியாகவும் எனக்கு ஏற்பட்ட தாக்கத்தை எதுவும் விளக்க முடியாது" என கூறினார்.
பாதிக்கப்பட்டவர்களில் இரண்டு பெண்களை, அவர் சமூக வலைதளம் வாயிலாக சந்தித்துள்ளார். மற்றொரு பெண்ணை சிக்கன் கடையில் சந்தித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்