மேலும் அறிய

Tobacco : தினமும் 5,500 குழந்தைகள் புகையிலை பழக்கத்துக்கு அடிமை...2-வது இடத்தில் இந்தியா...வெளியான அதிர்ச்சி தகவல்...!

புகைபிடிப்பதால் ஆண்டுதோறும் இந்தியாவில் 10 லட்சம் மரணங்கள் நிகழ்வதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tobacco : புகைபிடிப்பதால் ஆண்டுதோறும் இந்தியாவில் 10 லட்சம் மரணங்கள் நிகழ்வதாக தகவல் வெளியாகி உள்ளது.

புகையிலையை புகைப்பவருக்கு மட்டுமில்லாமல் அந்த பாதிப்பு அருகில் உள்ளவர்களுக்கும் மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எந்தவொரு வடிவத்திலும் புகையிலையின் நுகர்வு எல்லோருக்கும் தீங்கிழைக்கக்கூடியதுதான். ஆனாலும் உலகெங்கும் பலர் இதற்கு அடிமையாகி உயிரிழக்கின்றனர். 

2வது இடத்தில் இந்தியா

இந்நிலையில் இதுகுறித்து பிரபல தொற்றுநோய் நிபணர் புரோஹித் கூறுகையில், "அதிகமாக புகையிலை பயன்படுத்துபவர்களில் உலக அளவில் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. இங்கு 26 கோடியே 80 லட்சம் பேர் புகையிலை பயன்படுத்துகின்றனர். இந்த புகையிலை பயன்பாட்டால் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழப்பதாகவும், 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புகையிலை சுவாசிப்பதால் உயிரிழப்பதாகவும்” தெரிகிறது. 

"புகை பிடிப்பதால் இந்தியாவில் ஆண்டுதோறும் 10 லட்சம் மரணங்கள் நிகழ்கின்றன. பக்கத்தில் இருந்து புகையை சுவாசிப்பவர்களில் 2 லட்சம் பேர் இறக்கிறார்கள். மேலும், இந்தியாவில் புற்றுநோய் மரணங்களில் 27 சதவீதம் மரணங்கள், புகையிலை பயன்பாட்டால் ஏற்படுகின்றன” என்றார்.

5,500 குழந்தைகள் அடிமை

இதனை தொடர்ந்து தொற்றுநோய் நிபுணர் கூறியதாவது, "நாட்டில் தினமும் 5,500 குழந்தைகள் புகையிலை பழக்கத்துக்கு அடிமை ஆகிறார்கள். அவர்களில் மூன்றில் ஒரு பங்கு பேர், புற்றுநோய், மாரடைப்பு, ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளில் பாதிக்கப்படுகின்றனர். மேலும், புகைபிடிக்கும்போது அருகில் இருந்து புகையை சுவாசிப்பவர்களுக்கு இதய நோய்கள், நுரையீரல் புற்றுநோய், குழந்தைகளுக்கு சுவாச தொற்று ஏற்படும் என்று தெரிவிக்கின்றனர்.

மேலும், ஹோட்டல், உணவகம், விமான நிலையம் ஆகிய இடங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் புகைபிடிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. அந்த பகுதிகளை ரத்து செய்து, பொது இடங்களில் 100 சதவீத தடை விதிக்க வேண்டும். அப்போது தான் பாதிப்புகளை குறைக்க முடியும் என்றார். புகையிலையில் ஆயிரக்கணக்கான ரசாயனங்கள் இருப்பதாகவும், அதில் குறைந்தது 80 ரசயானங்கள் புற்றுநோயை உண்டாக்குவதாக தெரிவித்தார். இந்த ரசாயனங்களால் 80 விதமான புற்றுநோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். பெண்களுக்கு கூட புகையிலை பழக்கத்தால், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் ஏற்படுகின்றன” என்றார்.

புகையிலை விளைவிக்கும் தீங்குகள்

புகை பிடிப்பதனால் கார்பன் மோனாக்சைடு உடலில் சென்று இதயமும் கடுமையாக பாதிக்கப்பட்டு நுரையீரலுக்கு மற்றும் கை கால்களுக்கு தேவையான ஆக்சிஜன் குறைகிறது. இதனால் புற்றுநோய், மாரடைப்பு, பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

நிறுத்தினால் என்ன பயன்?

புகைபிடிப்பதை நிறுத்தினால் ஆண்மைக் குறைவு, கருத்தரித்தல் பிரச்சினை, குறை பிரசவம், குறைந்த எடையில் குழந்தை பிறப்பது, கருச்சிதைவு ஆகியவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

மேலும் படிக்க

H3N2 Flu : அதிகரிக்கும் இன்ஃப்ளூயன்ஸா தொற்று.. இதுவரை 2 பேர் உயிரிழப்பு.. உச்சகட்ட கண்காணிப்பில் மாநிலங்கள்..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Fengal Cyclone LIVE: இன்று மாலை 5.30 மணிக்கு உருவாகிறது ஃபெங்கல் புயல்
Fengal Cyclone LIVE: இன்று மாலை 5.30 மணிக்கு உருவாகிறது ஃபெங்கல் புயல்
Group 4 Counselling: தேர்வர்களே…வந்தது அப்டேட்! குரூப் 4 கலந்தாய்வு எப்போது? டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
Group 4 Counselling: தேர்வர்களே…வந்தது அப்டேட்! குரூப் 4 கலந்தாய்வு எப்போது? டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Fengal Cyclone LIVE: இன்று மாலை 5.30 மணிக்கு உருவாகிறது ஃபெங்கல் புயல்
Fengal Cyclone LIVE: இன்று மாலை 5.30 மணிக்கு உருவாகிறது ஃபெங்கல் புயல்
Group 4 Counselling: தேர்வர்களே…வந்தது அப்டேட்! குரூப் 4 கலந்தாய்வு எப்போது? டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
Group 4 Counselling: தேர்வர்களே…வந்தது அப்டேட்! குரூப் 4 கலந்தாய்வு எப்போது? டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Keerthy Suresh : 15 ஆண்டுகால காதல்...ஹாரி பாட்டர் ஸ்டைலில் திருமணத்தை அறிவித்த கீர்த்தி சுரேஷ்
Keerthy Suresh : 15 ஆண்டுகால காதல்...ஹாரி பாட்டர் ஸ்டைலில் திருமணத்தை அறிவித்த கீர்த்தி சுரேஷ்
Pink Auto: பெண்களுக்கு பிங்க் ஆட்டோ வாங்க மானியம்; கட்டுப்பாடு நீக்கம்- விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
Pink Auto: பெண்களுக்கு பிங்க் ஆட்டோ வாங்க மானியம்; கட்டுப்பாடு நீக்கம்- விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
Embed widget