Viral Tortoise : மீட்கப்பட்டது முதல் வளர்ந்து வலம் வருவது வரை.... இன்ஸ்டாகிராமில் ஹிட் அடிக்கும் ஆமை!
டில்லி ஜி எனும் மீட்கப்பட்ட ஆமையின் அனைத்து செயல்பாடுகளும் வீடியோக்களாகப் பகிரப்பட்டு இன்ஸ்டாவில் கவனம் ஈர்த்து வருகிறது
டில்லி ஜி எனும் ஆமையும்ன் ஸ்கிப்பி எனும் நாயும் வாஞ்சையுடன் விளையாடும் வீடியோக்கள் இன்ஸ்டாகிராமில் ஹிட் அடித்து வருகின்றன.
மனிதர்கள் தொடர்ந்து வித்தியாசமான வீடியோக்கள் பகிர்ந்து இணையத்தில் ட்ரெண்ட் ஆக முயன்றாலும், செல்லப் பிராணிகள் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களை தொடர்ந்து ஆக்கிரமித்து ஹிட் அடித்து வருகின்றன.
குறிப்பாக செல்லப் பிராணிகளுக்கென தனி பக்கங்களும் பராமரிக்கப்பட்டு அவற்றை லட்சக்கணக்கானோர் பின் தொடர்ந்து வருகின்றனர்.
View this post on Instagram
அந்த வகையில், டில்லி ஜி எனும் மீட்கப்பட்ட ஆமை ஸ்கிப்பி எனும் நாயுடன் ஒன்றாக விளையாடும் வீடியோக்கள் இன்ஸ்டாகிராமில் ஹிட் அடித்து வருகின்றன.
டில்லி ஜி குட்டி ஆமையாக ஆறு ஆண்டுகளுக்கு முன் அதன் பாதுகாவலரால் மீட்கப்பட்டு வீட்டுக்கு வந்தது தொடங்கி, அங்கிருக்கும் பிற நாய்கள், பூனைகளுடன் ஒன்றாக சன் பாத் எடுப்பது, கேரட் சாப்பிடுவது, தூங்குவது, கொஞ்சி விளையாடுவது என அனைத்து வீடியோக்களும் டில்லி ஜியின் பிரத்யேகப் பக்கத்தில் பகிரப்பட்டு ஹிட் அடித்து வருகின்றன.
View this post on Instagram
tillygthetortoise எனும் பெயரில் செயல்பட்டு வரும் இந்தப் பக்கம் இன்ஸ்டாகிராமில் ஹிட் அடித்து வருகிறது.