அடித்த ஜாக்பாட்.. வந்தாள் மகாலட்சுமி.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு லாட்டரியில் தலா 41 லட்சம்!
மூன்று டிக்கெட்டுகளிலும் அக்டோபர் 13 பிக் 5 ட்ராவுக்கு 5-3-8-3-4 என்கிற எண்கள் இருந்தன
லாட்டரி விளையாட்டுகள் மொத்தமும் அதிர்ஷ்டத்தை அடிப்படையாகக் கொண்டவை. இந்த லாட்டரி விளையாட்டில், அமெரிக்காவின் மேரிலாண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர், ஒரே லாட்டரி ட்ராவுக்கான டிக்கெட்டுகளை வாங்க ஒரே எண்களின் தொகுப்பைப் பயன்படுத்தினர்.இதை அடுத்து நம்புவதற்கு மிகவும் கடினமான ஒரு சம்பவத்தில், குடும்ப உறுப்பினர்கள் தலா $50,000 கிட்டத்தட்ட ரூபாய் 41 லட்சம் பரிசை வென்றுள்ளனர்.
மேரிலேண்ட் லாட்டரியின்படி, 61 வயது முதியவர் அக்டோபர் 13 அன்று ஹாம்ப்ஸ்டெட்டில் ஒரு அமெரிக்க டாலர் கொடுத்து டிக்கெட் வாங்கினார். விரைவில், அவரது 28 வயது மகளும் 31 வயது மகனும் அதே ட்ராவுக்கான லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கியுள்ளனர். ஆனால் இவர்கள் மூவருக்குமே ஒருவருக்கு ஒருவர் டிக்கெட் வாங்கியது தெரியாது.
மூன்று டிக்கெட்டுகளிலும் அக்டோபர் 13 பிக் 5 ட்ராவுக்கு 5-3-8-3-4 என்கிற எண்கள் இருந்தன, ட்ராவில் இந்த எண்களே இடம்பெற்றிருந்தன. மேரிலேண்ட் லாட்டரி அதிகாரிகளின் கூறிய தகவலின்படி, வென்றவர்களில் ஒருவர் தங்களுக்குக் கிடைத்த பணத்தைப் பயன்படுத்தி புதிய வீட்டை வாங்க திட்டமிட்டுள்ளார், மற்ற இருவரும் பரிசுத் தொகையை முதலீடு செய்ய உள்ளனர்.
மேரிலேண்ட் லாட்டரி தகவலின்படி, இந்த மாத தொடக்கத்தில், அந்த நபர் 20 வருட ட்ராக்களை பகுப்பாய்வு செய்து தனது லாட்டரி எண்களைத் தேர்ந்தெடுத்துள்ளார். மேரிலாந்தைச் சேர்ந்த அந்த 77 வயது முதியவர், $50,000 வென்ற லாட்டரி ஜாக்பாட்டைப் பெறுவதற்கு பல ஆண்டுகளாக உபயோகித்த இலக்கங்களைப் பயன்படுத்தியதாகக் கூறினார். இந்த பரிசுத் தொகையில் புதிய கார் வாங்க முதியவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இதேபோன்ற ஒரு சம்பவத்தில், மிச்சிகன் மாகாணத்தை சேர்ந்த ஒரு நபர் $25,000 லாட்டரி பரிசை வென்றுள்ளார். யுபிஐ-ன் அறிக்கையின்படி, அந்த நபர் தனது வெற்றிகரமான டிக்கெட்டில் எண்களை உருவாக்க ஆன்லைனில் தனக்குக் கிடைத்த ரேண்டம் எண் ஜெனரேட்டரைப் பயன்படுத்தியுள்ளார்.
ஆரோன் எசென்மேக்கர் என அடையாளம் காணப்பட்ட அந்த 50 வயது நபர், செப்டம்பர் 15ம் தேதி வாரன் ஹேப்பி டேஸ் பார்ட்டி ஸ்டோரில் தனது லக்கி ஃபார் லைஃப் டிராயிங் டிக்கெட்டை வாங்கியதாகக் கூறப்படுகிறது.
கேரளாவில் இருந்து மலேசியாவுக்கு சமையல்காரராக பணிபுரிய செல்ல திட்டமிட்டிருந்த ஆட்டோ ரிக்சா ஓட்டுநர் ஒருவர், ஞாயிற்றுக்கிழமை அன்று ஓணம் பம்பர் லாட்டரியில் 25 கோடி ரூபாயை வென்றுள்ளார். இதற்கு ஒரு நாள் முன்புதான், 3 லட்சம் கேட்டு வங்கியில் அவர் விடுத்திருந்த விண்ணப்பத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இன்னும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ஸ்ரீவராஹத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அனூப், அந்த லாட்டரி டிக்கெட்டை சனிக்கிழமை அன்றுதான் வாங்கியுள்ளார். TJ 750605 என்ற எண்களை கொண்ட டிக்கெட்டுக்குத்தான் பரிசு விழுந்துள்ளது. ஆனால், அந்த டிக்கெட் தனது முதல் தேர்வு அல்ல என ஊடகவியலாளர்களிடம் கூறியுள்ளார் அனூப். இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "நான் தேர்ந்தெடுத்த முதல் டிக்கெட்டை விரும்பவில்லை. எனவே, நான் வேறு ஒன்றைத் தேர்ந்தெடுத்தேன். அது வெற்றியாளராக என்னை மாற்றியுள்ளது. கடன் தொடர்பாக இன்று வங்கி அழைத்தது. இனி எனக்கு அது தேவையில்லை என்றேன். இனி, மலேசியா செல்ல வேண்டிய தேவையும் இல்லை.
கடந்த 22 ஆண்டுகளாக லாட்டரி சீட்டுகளை வாங்கி, கடந்த காலங்களில் சில நூறுகள் முதல் அதிகபட்சம் 5,000 ரூபாய் வரையிலான தொகைகளை வென்றுள்ளேன். நான் வெற்றி பெறுவேன் என்று எதிர்பார்க்கவில்லை. அதனால் லாட்டரி முடிவுகளை டிவியில் பார்க்கவில்லை. இருப்பினும், எனது தொலைபேசியைச் சரிபார்த்தபோது, நான் வெற்றி பெற்றதைக் கண்டேன்.
என்னால் நம்ப முடியாமல் என் மனைவியிடம் காட்டினேன். அது வெற்றி எண் என்பதை அவர் உறுதிப்படுத்தினார். ஆனால், நான் இன்னும் பதற்றமாக இருந்ததால், எனக்கு தெரிந்த லாட்டரி சீட்டு விற்கும் ஒரு பெண்ணை அழைத்து எனது டிக்கெட்டின் படத்தை அனுப்பினேன். அது வெற்றி எண் என்பதை உறுதிப்படுத்தினார். நான் மீண்டும் லாட்டரி சீட்டு வாங்குவேன்" என்றார். லாட்டரிக்கான வரி கழிக்கப்பட்ட பிறகு, அனூப் சுமார் 15 கோடி ரூபாயை வீட்டிற்கு எடுத்துச் செல்வார். பணத்தை என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு, அவர் தனது குடும்பத்திற்கு ஒரு வீட்டைக் கட்டுவதும், அவர் செலுத்த வேண்டிய கடன்களை அடைப்பதும்தான் தனது முதல் முன்னுரிமை என்றார்.