நல்ல தண்ணீர் குடிக்கனுமா? உலகத்திலேயே இந்த 3 நாட்டில் தான் கிடைக்கும்!
உலக சுகாதார மையத்தின் தரவுகளின்படி உலகத்தில் 78.5 கோடி மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை. மேலும் 14.4 கோடி மக்கள் குடிப்பதற்கு நிலத்தடி நீரை மட்டுமே நம்பி உள்ளனர் என்றும் அந்த தரவுகள் தெரிவிக்கின்றன.
உலக சுகாதார மையத்தின் தரவுகளின்படி உலகத்தில் 78.5 கோடி மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை. மேலும் 14.4 கோடி மக்கள் குடிப்பதற்கு நிலத்தடி நீரை மட்டுமே நம்பி உள்ளனர் என்றும் அந்த தரவுகள் தெரிவிக்கின்றன. இதனை வைத்து பார்க்கும் போது நிலத்தடி நீர் சுத்தமாக இல்லை என்றால் அது எவ்வளவு மக்களுக்கு பிரச்னை தரும் என்பது நமக்கு நன்றாக தெரிகிறது.
அத்துடன் உலகத்தில் 2 கோடி மக்கள் மிகவும் மோசமான குடிநீரையை தங்கள் தேவைக்கு பயன்படுத்தி வருகின்றனர் என்ற அதிர்ச்சிகரமான தகவலையும் சுகாதார மையம் தெரிவித்துள்ளது. சுத்தமான குடிநீர் இல்லை என்றால் காலரா, வயிற்றுப்போக்கு, டைஃபாயிட், போலியோ உள்ளிட்ட நோய்கள் ஏற்படலாம். அந்தவகையில் உலகத்தில் ஆண்டு தோறும் 2.85 லட்சம் பேர் சுத்தமான குடிநீர் கிடைக்காமல் வயிற்றுப்போக்கு காரணமாக இறந்து வருகின்றனர்.
இந்நிலையில் உலகத்தில் மனிதர்கள் குடிக்க நல்ல குடிநீர் 3 நாடுகளில் மட்டும் தான் உள்ளது. அது எந்தந்த நாடுகள் தெரியுமா?
சுவிட்சர்லாந்து:
உலகிலேயே மிகவும் சிறப்பான தரமான குடிநீர் கொண்ட நாடு சுவிட்சர்லாந்து தான். இங்கு வருடத்திற்கு தோராயமாக 153 சென்டி மீட்டர் மழை பதிவாகிறது. இந்த நாட்டில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் சுத்திகரிப்பு மையம் மற்றும் இவர்களின் மழைநீர் சேகரிப்பு முறை தண்ணீரின் தரத்தை குறையவிடாமல் பார்த்து கொள்கிறது. இந்த நாட்டில் 80 சதவிகித குடிநீர் மழை மற்றும் நிலத்தடி நீர் மூலமாகவே எடுக்கப்படுகிறது.
நியூசிலாந்து:
உலகத்தில் சுற்றுலா செல்வதற்கு உகந்த நம்பர் ஒன் நாடு நியூசிலாந்து தான். இந்த நாட்டில் இருக்கும் இயற்கை வளங்கள் நம்மை பிரமிக்க வைக்கும் அளவிற்கு இருக்கும். இங்கு 1995 ஆம் ஆண்டு அந்நாட்டு அரசு மக்களுக்கு அளிக்கும் குடிநீரில் 95% சதவிகிதம் சுத்தமாக கொடுக்க வேண்டும் என்ற முடிவை எடுத்தது. அதன்படி அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தது. 2015-16ஆம் ஆண்டில் அந்த நாட்டில் வழங்கப்படும் குடிநீர் 97.8 சதவிகிதம் சுத்தமானதாக அமைந்துள்ளது. அத்துடன் 98.4% சுத்தமான வேதியியல் தன்மையையும் கொண்டதாக அமைந்துள்ளது.
நார்வே:
அமெரிக்காவை போலவே இந்த நாட்டிலும் தீவிர குடிநீர் பிரச்னை ஏற்படும் சூழல் உருவானது. அதனைத் தொடர்ந்து அந்த நாட்டின் அரசு தன்னுடைய கட்டுபாட்டில் குடிநீர் சுத்திகரிப்பு மையங்களை அமைத்தது. அத்துடன் நீர் சேகரிப்பு மற்றும் நீர் மேலாண்மை உள்ளிட்ட பணிகளில் அதிக முனைப்புடன் செயல்பட்டது. இதன் விளைவாக 20-30 ஆண்டுகளில் நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளது. தற்போது 10 ல் 9 பேருக்கு அரசு சார்ந்த குடிநீர் மையங்களில் இருந்து சுத்தமான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நாடுகளில் மக்கள் தொகை இந்தியா அளவிற்கு இல்லையென்றாலும் அங்கு இருக்கும் குடிநீரை எப்படி அரசு கையாள்கிறது என்பதை நம் பார்த்து கற்று கொள்ள வேண்டும். இந்தியாவில் 70 சதவிகிதம் மழை தென்மேற்கு பருவமழை மூலம் தான் வருகிறது. அப்போது அதிகளவில் நீர் வெள்ளங்களாக வீணாக கடலில் சென்று கலக்கிறது. இவ்வாறு அதிகளவில் நீர் கடலில் சென்று கலக்காமல் அதனை தேக்கி வைத்தாலே இந்தியாவின் குடிநீர் பிரச்னையை போக்க உதவியாக அமையும் என்பதே வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.