உக்ரைன் மீது ரஷ்யா வான்வெளி தாக்குதல்; 90-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு என அதிர்ச்சி தகவல்
உக்ரைன் மீது ரஷ்யா விமானப்படை நடத்திய தாக்குதலில் 90-க்கும் மேற்ப்ட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தொடர் தாக்குதலில், தற்போது 90-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
6 மாதங்களாக தொடரும் தாக்குதல்:
கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தத் தொடங்கியது. 6 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் இத்தாக்குதலால் உக்ரைனில் உள்ள பல நகரங்கள் சேதமடைந்துள்ளன. இத்தாக்குதலால், உக்ரைன் குடிமக்கள் பலரும் வெவ்வேறு பகுதிகளில் குடிபெயர்ந்தனர். இதில் சிலர் நாட்டை விட்டு வெளியேறினர்.
வான் வெளி தாக்குதல்:
இந்நிலையில், தற்போது உக்ரைன் நாட்டின் வட கிழக்குப் பகுதியான கார்கிவ் பகுதியில், ரஷ்ய ஆயுதப்படைகள் வான்வெளி தாக்குதலை நடத்தியுள்ளன. இத்தாக்குதல் குறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது, ஆயுதப் படைகளை குவித்து வைத்திருந்த கும்பல் மீது நடத்திய தாக்குதலில், 90க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது.
இத்தாக்குதலில் பலியானவர்களில் 80-க்கும் மேற்பட்டோர், உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
உலக நாடுகள் வேண்டுகோள்:
இந்நிலையில், யுக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய நாட்டு தலைவர்களிடையே பேச்சுவார்த்தை ஏற்படுத்த துருக்கி நட்டின் அதிபர் எர்டோகன் முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெலன்கி மற்றும் புதின் ஆகிய இருவரும், உரிய முறையில் பேச்சுவார்த்தை நடத்தி, யுக்ரைனுக்கான பாதையை ஏற்ப்டுத்த வேண்டும் எனவும் உலக நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
View this post on Instagram
Also Read: Watch Video: லண்டன் சவுத்வார்க் ரயில்வே பாலத்தில் பயங்கர தீ விபத்து.! பதைபதைக்க வைக்கும் காட்சிகள்!
Also Read: Chinese Spy Ship: இலங்கையில் சீன ‘உளவு’ கப்பல்.. இந்தியாவின் ப்ளான் என்ன? நிலைமையைச் சொன்ன அமைச்சர் ஜெய்சங்கர்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்