TCS CEO Resigns: திடீரென பதவி விலகிய டிசிஎஸ் சி.இ.ஓ.. அடுத்த தலைமை செயல் அதிகாரி இவரா..?
டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ராஜேஷ் கோபிநாதன் பதவி விலகினார்.
டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ராஜேஷ் கோபிநாதன் பதவி விலகினார். இதையடுத்து, பிஎஃப்எஸ்ஐ பிரிவின் உலகளாவிய தலைவரான கே கிருத்திவாசனை உடனடியாக சி.இ.ஓ நியமனமாக நியமித்து அந்த நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “ டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்துடன் கடந்த 22 ஆண்டுகளுக்கு மேலாகவும், கடந்த 6 ஆண்டுகளாக நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக வெற்றிகரமாக செயல்பட்ட ராஜேஷ் கோபிநாதன் தனது பிற நலன்களை கருத்தில் கொண்டு டிசிஎஸ் நிறுவனத்திலிருந்து விலக முடிவு செய்துள்ளார்.
வங்கி, நிதி சேவைகள் மற்றும் இன்சூரன்ஸ் வணிக குழுமத்தின் உலகளாவிய தலைவருமான கிருதிவாசன் உடனடியாக டிசிஎஸ்-ஸின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இன்று (மார்ச் 16 ம் தேதி) முதல் அமலுக்கு வரும் வகையில் கே கிருத்திவாசனை சி.இ.ஓ வாக நியமனம் செய்ய நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. இதையடுத்து ராஜேஷ் கோபிநாதனுக்கு பதிலாக கிருத்திவாசன் அடுத்த நிதியாண்டில் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்படுவார்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.