Taliban: ஆப்கானில் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு எழுத பெண்களுக்கு தடை - தொடரும் தலிபான்கள் அட்டகாசம்..! மக்கள் கவலை
Taliban: ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு எழுத பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது.
![Taliban: ஆப்கானில் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு எழுத பெண்களுக்கு தடை - தொடரும் தலிபான்கள் அட்டகாசம்..! மக்கள் கவலை Taliban ban female students from attending university entrance exam in afghnistan Taliban: ஆப்கானில் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு எழுத பெண்களுக்கு தடை - தொடரும் தலிபான்கள் அட்டகாசம்..! மக்கள் கவலை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/29/4b1c0585d4fca1d8507516a06bd69ce81674971066236571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Taliban : ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு எழுத பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகளை போட்ட தலிபான்கள்
கடந்த 2021ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆதரவு அரசாங்கத்தை கவிழ்த்து தலிபான்கள் ஆட்சியை பிடித்தனர். அவர்கள் ஆட்சியை கைப்பற்றியது முதல் அந்த நாட்டில் ஏராளமான கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்க ஆதரவு அரசு அமைவதற்கு முன்பு தலிபான்கள் ஆட்சி செய்தபோது இருந்த கடும் கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டு வருவது உலக நாடுகளை கவலையில் ஆழ்த்தியது. விதிக்கப்பட்டு வரும் பிற்போக்கான விதிகள் காரணமாக அந்த நாட்டு மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
குறிப்பாக, பெண்களுக்கு எதிராக கொண்டு வரப்படும் மோசமான கட்டுப்பாடுகள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, ஆப்கானிஸ்தானில் உள்ள பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. இதற்கு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கவலை தெரிவித்திருந்தது. தலிபான் அரசின் நடவடிக்கை உலக அளவில் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து அவர்கள் நடுநிலைப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பெண்கள் கல்வி பெறுவதைத் தடை செய்தனர், பெரும்பாலான வேலைகளில் இருந்து பெண்களைத் தடை செய்தனர், மேலும் பொது இடங்களில் தலை முதல் கால் வரை ஆடைகளை அணிய உத்தரவிட்டனர். பெண்கள் பூங்காக்கள் மற்றும் ஜிம்களில் இருந்தும் தடை செய்யப்பட்டனர் மற்றும் ஆண் உறவினர் இல்லாமல் வெளியே பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டது. ஆண் மருத்துவர்களை பெண்கள் சந்திப்பதும் தடை செய்யப்பட்டது. இதுபோன்ற பல கட்டுப்பாடுகளை பெண்களுக்கு எதிராக விதிக்கப்பட்டு வருகிறது.
தேர்வு எழுத தடை
அதன்படி, தற்போது பல்கலைக்கழகங்களில் பெண்கள் நுழைவுத் தேர்வு எழுத முடியாது என அதிரடியாக தலிபான் அரசு கூறியுள்ளது. பெண்களை நுழைவுத் தேர்வு எழுத அனுமதிக்கக் கூடாது என்று தனியார் பல்கலைக்கழகங்களுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஜியாவுல்லர் ஹஷ்மி தெரிவித்துள்ளார்.
The Taliban have reportedly BANNED women from taking the university entrance exam (Kankor) in Afghanistan. This can only mean that the ban on women going to university will be permanent.
— Shabnam Nasimi (@NasimiShabnam) January 28, 2023
Their cruelty against women knows no limits. Stand up for the women of Afghanistan now! 📣 pic.twitter.com/L3c0zraYqB
இந்த தடையால் இளங்கலை, முதுநிலை மற்றும் முனைவர் பட்டத்திற்கான நுழைவு தேர்வில் பங்கேற்க முடியாது. எதாவது ஒரு பல்கலைக்கழகம் இந்த உத்தரவை மீறி செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியது முதல் அந்த நாட்டில் ஏராளமான கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்க ஆதரவு அரசு அமைவதற்கு முன்பு தலிபான்கள் ஆட்சி செய்தபோது இருந்த கடும் கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டு வருவது உலக நாடுகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)