மேலும் அறிய

Syria War: மீண்டும் ஒரு அதிபர் தப்பியோட்டம் - சிரியா தலைநகருக்குள் நுழைந்த கிளர்ச்சியாளர்கள், என்ன தான் நடக்குது?

Syria War: சிரியாவின் தலைநகரமான டமாஸ்கஸ் நகருக்குள் நுழைந்ததாக கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். 

Syria War: சிரியாவின் தலைநகரமான டமாஸ்கஸ் அருகே உள்ள ராணுவ சிறைச்சாலையை கிளர்ச்சியாளர்கள் திறந்துவிட்டுள்ளனர்.

டமாஸ்கஸில் சிரியா கிளர்ச்சியாளர்கள்

ஹாம்ஸ் நகரை தொடர்ந்து, சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸ் நகருக்குள் ஞாயிறன்று காலை கிளர்ச்சியாளர்கள் நுழைந்துள்ளனர். பெரிய எதிர்ப்பு ஏதுமின்றியே அவர்கள் நகரை அடைந்ததாகவும் கூறப்படுகிறது. புறநகரில் உள்ள ஒரு பெரிய ராணுவ சிறைச்சாலையான செட்னயா சிறையின் கதவுகள் திறந்து அதிலிருந்த ஆயிரக்கணக்கான கைதிகளை விடுவித்துள்ளனர். இதுதொடர்பான வீடியோவில், “எங்கள் கைதிகளை விடுவித்து, அவர்களின் சங்கிலிகளை விடுவித்து, செட்னாயா சிறையில் அநீதியின் சகாப்தம் முடிவுக்கு வந்ததை அறிவிக்கும் செய்தியை நாங்கள் சிரிய மக்களுடன் கொண்டாடுகிறோம்” என கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தப்பியோடிய அதிபர்

2011ல் சிரியாவில் உள்நாட்டுப் போர் தொடங்கியதில் இருந்து,  அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு மிகப்பெரிய சவாலாக இந்த முன்னேற்றங்கள் அமைந்துள்ளன. இதையடுத்து சிரிய அதிபர் பஷர் அல்-அசாத், நாட்டிலிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

ஏற்கனவே ஆஃப்கானிஸ்தான் அதிபர் கனி கடந்த 2021ம் ஆண்டு, தாலிபான்களின் ஆக்கிரமிப்பு காரணமாக நாட்டை விட்டு வெளியேறினார். அதைதொடர்ந்து, இலங்கையில் வெடித்த பொதுமக்கள் போராட்டத்தின் காரணமாக அதிபர் கோத்தபய ராஜபக்ச சிங்கபூரில் தஞ்சமடைந்தார். அண்மையில் வங்கதேசத்தில் வெடித்த மக்கள் புரட்சியை தொடர்ந்து, பிரதமர்  ஷேக் ஹசினா இந்தியாவில் தஞ்சமடைந்தார். அந்த வரிசையில் தற்போது சிரியா அதிபரும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். 

ரஷ்யா சொல்வது என்ன?

மாஸ்கோவின் கூட்டாளியான அதிபர் பஷர் அல்-அசாத்தின் படைகளுக்கு எதிராகப் போராடும் "பயங்கரவாத" கிளர்ச்சியாளர்களின் கைகளில் சிரியா சிக்குவதை அனுமதிக்கக் கூடாது என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறினார். அதன்பட்,  "சிரிய அரபுக் குடியரசின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் ஒற்றுமையை வலுவாக வலியுறுத்தும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 2254ஐ குறிப்பிட்டு இருக்கும் உடன்படிக்கைகளை மீறி நிலங்களை பயங்கரவாதக் குழுவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர அனுமதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், துருக்கி விவகாரத்தில், "அரசியல் தீர்வுக்கு" அழைப்பு விடுத்தார். ஆனால், அமெரிக்க அதிபராக தேர்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்ப்  சிரியாவில் உள்ள சூழ்நிலையில் அமெரிக்கா "தலையிடக்கூடாது" என்று தெரிவித்துள்ளார். அதன்படி. "சிரியா ஒரு குழப்பம், ஆனால் எங்கள் நண்பர் அல்ல, அமெரிக்காவிற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது எங்கள் சண்டை அல்ல. அவர்களே பார்த்துகொள்ளட்டும். அமெரிக்கா இதில் தலையிட வேண்டாம்" என்று டிரம்ப் தனது ட்ரூத் சமூக தளத்தில் தெரிவித்துள்ளார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Top 10 News Headlines: CM விஜய்க்கு கேள்வி, கனிமொழி கண்டனம், நீதிபதிகள் இன்று பதவியேற்பு - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: CM விஜய்க்கு கேள்வி, கனிமொழி கண்டனம், நீதிபதிகள் இன்று பதவியேற்பு - 11 மணி வரை இன்று
Trump:”பைத்தியக்காரா, நான் இல்லேன்னா நீ ஜெயில்ல இருப்ப” நேதன்யாகுவை அசிங்கமாக திட்டிய ட்ரம்ப்
”பைத்தியக்காரா, நான் இல்லேன்னா நீ ஜெயில்ல இருப்ப” நேதன்யாகுவை அசிங்கமாக திட்டிய ட்ரம்ப்
US Iran Attacks: போட்டு சாத்திய அமெரிக்கா; பதிலுக்கு அடித்த ஈரான்; மத்திய கிழக்கில் மீண்டும் போரா.? நடப்பது என்ன.?
போட்டு சாத்திய அமெரிக்கா; பதிலுக்கு அடித்த ஈரான்; மத்திய கிழக்கில் மீண்டும் போரா.? நடப்பது என்ன.?
US Iran War: “அது நடக்கும் வரை ஒப்பந்தம் கிடையாது“; ஒரே போடாய் போட்ட ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர்; என்ன கூறினார்.?
“அது நடக்கும் வரை ஒப்பந்தம் கிடையாது“; ஒரே போடாய் போட்ட ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர்; என்ன கூறினார்.?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரை மேயராகும் அழகிரியின் மகள் கயல்விழி? மிஷன் தென் மண்டலம் - தவெக ஸ்கெட்ச்..
மதுரை மேயராகும் அழகிரியின் மகள் கயல்விழி? மிஷன் தென் மண்டலம் - தவெக ஸ்கெட்ச்..
Annamalai: அண்ணாமலையும் போயிட்டா அதோகதிதான்! தமிழ்நாட்டில் பாஜக-வின் நிலைமை அவ்ளோதானா?
Annamalai: அண்ணாமலையும் போயிட்டா அதோகதிதான்! தமிழ்நாட்டில் பாஜக-வின் நிலைமை அவ்ளோதானா?
பள்ளி மாணவிகளுக்கு 3 நாள் பீரியட்ஸ் லீவ்: கண்ணியம் காக்குமா? காற்றில் பறக்குமா? தொடர் விவாதம்!
பள்ளி மாணவிகளுக்கு 3 நாள் பீரியட்ஸ் லீவ்: கண்ணியம் காக்குமா? காற்றில் பறக்குமா? தொடர் விவாதம்!
Annamalai: டெல்லியிலிருந்து அண்ணாமலை போட்ட ட்வீட்..! CM விஜய்க்கு கேள்வி - திமுக மீதும் அட்டாக்
Annamalai: டெல்லியிலிருந்து அண்ணாமலை போட்ட ட்வீட்..! CM விஜய்க்கு கேள்வி - திமுக மீதும் அட்டாக்
Assembly Secretary Srinivasan : சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.!! இது தான் காரணமா.?
சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.!! இது தான் காரணமா.?
EPS Statement: ஆட்சி நடத்துவது எப்படி.? நீங்க 6 மாத Course முடிப்பதற்குள் மக்கள் மடியனுமா.? விஜய்யை வெளுத்து வாங்கிய இபிஎஸ்
இன்னும் பஞ்ச் டயலாக் பேசும் ரீல் ஹீரோவாகவே இருக்காதீங்க.! மாய உலகில் இருந்து வெளியே வாங்க விஜய் - இபிஎஸ் அதிரடி
TN By-Election: நமக்குள்ள சண்டை வேண்டாம்..! ”உனக்கு 4, எனக்கு 1” ஆளுங்கட்சியை வீழ்த்த (அ)திமுக தொகுதி பங்கீடு
நமக்குள்ள சண்டை வேண்டாம்..! ”உனக்கு 4, எனக்கு 1” ஆளுங்கட்சியை வீழ்த்த (அ)திமுக தொகுதி பங்கீடு
பள்ளிகள் திறப்பு; கல்விக் கட்டணம்- தனியார் பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவைப் பிறப்பித்த அரசு!
பள்ளிகள் திறப்பு; கல்விக் கட்டணம்- தனியார் பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவைப் பிறப்பித்த அரசு!
Embed widget