Sunita Williams: சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவது எப்போது? நாசாவின் புதிய திட்டம்!
Sunita Williams: விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்ப நாசா புதிய திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

விண்வெளியில் 7 மாதங்களுக்கும் மேலாக சிக்கியுள்ள, சுனிதா வில்லியம்ஸ், Butch Wilmore ஆகியோர் விரைவில் பூமிக்கு திரும்ப புதிய திட்டம் இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.
சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் தாமதம்:
பூமியில் இருந்து, சுமார் 400 கி,மீ உயரத்தில் அமைந்துள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் , 2024, ஜூன் மாதம் விண்ணில் ஏவப்பட்ட ஸ்டார்லைனர் ராக்கெட்டில் விண்வெளி பயணங்களை சோதனை செய்யும் வகையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் , புட்ச் வில்மோர் ஆகியோர் விண்வெளி நிலையத்திற்கு சென்றனர்.
இந்தத் திட்டத்தின் நோக்கம், முதலில் எட்டு நாட்கள் பயணம் என்று திட்டமிடப்பட்டிருந்தது. விண்கலத்தின் என்ஜினில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக அவர்கள் இருவரும் பூமி திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. பயணித்த விண்கலனின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு, வேறு சில கசிவுகள் காரணமாக அந்த விண்கலத்தைப் பயன்படுத்துவது பாதுகாப்பானதாக இருக்காது எனக் கருதப்பட்டது. இதை சரிசெய்ய நாசா தொடர்ந்து தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையில், அதிக நேரம் விண்வெளி நடை மேற்கொண்டவர் என்ற சாதனையைச சுனிதா வில்லியம்ஸ், ஜனவரி 30ஆம் தேதி படைத்தார்.
பயணிகளில் விண்கலத்தில் உள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவர்களை பூமிக்கு அழைத்து வருவில் சிக்கல் ஏற்பட்டது. அவர்களை பூமிக்கு கொண்டு வர எலான் மஸ்க்கிஸ்ர்க்குச் சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஸ்பேஸ்க்ராஃப் மூலம் அவர்களை மீட்க திட்டமிடப்பட்டது. அதற்காக ஏற்கனவே ஸ்பேஸெக்ஸின் ட்ராகன் விண்வெளிக்கு சென்றது. இருவரும் பிப்ரவரி மாதம் பூமி திரும்புவார்கள் எனவும் நாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு, மார்ச் மாதம் என முடிவு செய்யப்பட்டது.
புதிய திட்டம் என்ன?
சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் - இருவரையும் விண்வெளியில் இருந்து அழைத்து வர, விண்கலம் மார்ச், 25ம் தேதி ஏவப்பட இருந்தது. இப்போது, மார்ச், 12 ம் தேதி விண்ணில் ஏவப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்களின் ’astronaut capsules' ஸ்விட்ச் செய்ய திட்டமிட்டுள்ளனர். பூமியில் இருந்து ’Crew-10’ வீரர்களுடன் விண்வெளிக்கு சென்று அங்கிருக்கும் விண்வெளி ஆராய்ச்சி, ஆகியவற்றை பற்றி தெரிந்துகொள்வர். Crew-9 அவர்களுக்கு அங்கே நடைபெறும் செயல்பாடு குறித்து விளக்கம் அளிப்பார்கள். ஏற்கனவே விண்ணுக்கு சென்றுள்ள 'SpaceX Crew Dragon capsule' (called 'Endurance') கேப்ஸ்யூல் மூலம் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் குழுவினர் பூமிக்கு திரும்புவார்கள் என திட்டமிடப்பட்டுள்ளது.
’Crew-10’ திட்டத்தில் நிக்கோல் ஆர்யஸ் தலைமையில், விண்வெளி வீரர்கள் அனே மெக்லைன் பைலட் JAXA (Japan Aerospace Exploration Agency) வீரர் டக்யா ஒனிஷி, கிரில் பெஸ்காவ் ஆகியோர் விண்வெளி நிலையத்திற்கு செல்ல இருக்கின்றனர். இவர்கள் விண்வெளி மையத்திற்கு சென்று அங்கிருக்கும் சுனிதா வில்லியம்ஸ் குழுவினரின் கேப்ஸ்யூல்களில் உள்ள தொழில்நுட்ப கோளாறுகளை சரிசெய்வர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுனிதா வில்லியம்ஸ் மற்றும் குழுவினர் 'Dragon capsule’-ல் பூமிக்கு திரும்புவார் என்று நாசா தெரிவித்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

