பிப்.20, 1947 ஆண்டு அமெரிக்காவால் பழ ஈக்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டன.
சோவியத் யூனியன் லைகா என்ற நாய்யை நவ.3, 1957ம் ஆண்டு விண்வெளிக்கு அனுப்பினர்.இது விண்வெளியில் சுற்றிய முதல் நாய் மற்றும் முதல் விலங்கு என்ற சிறப்பைப் பெற்றது.
சோவியத் விண்வெளி நிறுவனம் சோண்ட் 5 விண்கலத்தில் ஆமைகளை 1968 விண்வெளிக்கு அனுப்பினர்.
ஃபெலிசிட் தான் விண்வெளியில் நுழைந்த முதல் மற்றும் ஒரே பூனை. பிரெஞ்சு விண்வெளி நிறுவனம் 1963 ஆம் ஆண்டு Félicité என்ற பூனையை விண்வெளிக்கு அனுப்பியது.
1959 ஆம் ஆண்டில், அமெரிக்க விண்வெளி நிறுவனம் அமெரிக்க விண்வெளி ஓடம் USV2 இல் ஆல்பர்ட் குரங்கு-2 என்ற குரங்கை விண்வெளிக்கு அனுப்பியது.
நாசா அமைப்பை உருவாக்குவதற்கு முன்பே எலிகளை அமெரிக்க விண்வெளிக்கு அனுப்பியது
நுண் ஈர்ப்பு விசை மீன்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதை ஆய்வு செய்வதற்காக அவை விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளன.