Watch Video: கியூபாவில் அச்சுறுத்தும் அதிகனமழை; நீரில் மூழ்கிய சாலைகள்.. பரிதவிக்கும் மக்கள்..
மழை வெள்ளத்தில் மூழ்கிய ஹவாணா மாகாணம்.
கியூபா நாட்டில் கடுமையான மழை பெய்துவருவதால் ஏற்பட்ட வெள்ளத்தில் ஹவாணா மாகணத்தில் இரண்டு பேர் இறந்துள்ளனர். பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர் என்று கியூபா நாட்டின் பேரிடர் மீட்புக் குழு தெரிவித்துள்ளது.
கியூபா நாட்டில் கடந்த சில நாட்களாக கடுமையான மழை பெய்து வருகிறது. கியூபா சாலைகள் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அலெக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள புயலால் மத்திய கியூபா மற்றும் மேற்கு கியூபா பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கியூபா நாட்டில் கனமழை தொடரும் என்று அந்நாட்டின் வானிலை ஆய்வு மையன் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கியூபாவில் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை அப்பகுதிகளில் இருந்து மீட்டும் பணி விரைந்து செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பினார் டெல் ரியோ( Pinar del Río (western extreme)) முதல் ஸ்சாண்டி ஸ்பைரிடஸ் ( Sancti Spíritus (Center)) போன்ற கரீபீயன் பகுதிகள் மழை வெளுத்து வாங்குகிறது. இதனால் பல தங்களுது உடைமைகளையும் வீடுகளையும் இழந்துள்ளனர்.
ஹவாணா சாலைகளில் முழங்கால்வரை தண்ணீர் தேங்கியிருக்கிறது. மக்கள் தெருக்களில் நின்றுக்கொண்டிருக்கிறார்கள். கார்கள், டூவீலர் போன்றவைகள் வெள்ளத்தில் மூழ்கியிருக்கின்றன. மக்கள் செல்வதற்கு இடமின்றி தவித்து வருகின்றனர்.
கியூபாவில் கனமழை தொடர்வதால், வானிலை எச்சரிக்கைகளை கவனிக்குமாறு மக்கள் கேட்டுக்கொள்ள்ப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு குழு உள்ளிட்டவைகள் தயார் நிலையில் இருப்பதாக கியூபா அரசு தெரிவித்துள்ளது.
@DiazCanelB exhortó a ser responsables ante el fenómeno meteorológico que está afectando a #Cuba e indicó mantener activado el Sistema de Defensa Civil.#CubaPorLaVida #PreparadosYAlertas pic.twitter.com/vFi1hUrfoa
— Mariana Blanco (@Mariana49247136) June 4, 2022
RT @irenepperezz: 🌧️ Lluvias intensas en La Habana 👉🏼https://t.co/V4E8BiUbGb#Cuba pic.twitter.com/8FGCYx8Xtd
— AntonioIncansable (@AntonioI1990) June 4, 2022
#Cuba es resiliencia. ❤💪 pic.twitter.com/ZmxsDnYDJu
— Joy Puentes Saldise (@joy_puentes) June 4, 2022
கியூபாவில் வெள்ளம் தொடர்ந்தால் இறப்பு எண்ணிக்கை உயரும் அபாயம் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.