Gotabaya Rajapaksa : மனித உரிமை மீறல் வழக்கில் இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு சம்மன்..
Srilanka: மனித உரிமை மீறல் தொடர்பான வழக்கில், இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு உச்சநீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
Srilanka: மனித உரிமை மீறல் தொடர்பான வழக்கில் இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு உச்சநீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
இலங்கை: இலங்கையில் கடந்த 2011-ஆம் ஆண்டு மனித உரிமை ஆர்வலர்கள் 2 பேர் மாயமானது தொடர்பாக முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்த மனித உரிமை மீறல் வழக்கில் கோத்தபய ராஜபச்சேவுக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருந்தது. அந்த நேரத்தில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி நீதிமன்றத்தில் ஆஜராகாமல் அவர் கூறியிருந்தார். அதற்கு பிறகு இலங்கை நாட்டிற்கு அதிபராக பொறுப்பு ஏற்றதால் அரசியல் சாசன விலக்கு பெற்றவர் என்ற முறையில் அவருக்கு அனுப்பிய சம்மன் விலக்கிக் கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு வரும் டிசம்பர் 15-ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. இதனால் அந்த நாளன்று விசாரணைக்கு நேரில் ஆஜராக கோத்தபய ராஜபக்சேவுக்கு உச்சநீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் நடந்தது என்ன?
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையில் ராஜபச்சே சகோதரர்கள் காரணம் எனக் கூறி அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த நாடு முழுவதும் பிரதமர், அதிபருக்கு எதிராக நடத்திய போராட்டங்கள் நடைபெற்றது. அரசியல்வாதிகள் வீடுகள் சூறையாடப்பட்டன. அதிபர் கோத்தபய ராஜபக்ச இலங்கையில் இருந்தவரை தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்யாமல் இருந்தார். அவரால் போராட்டக்காரர்களின் செயல்பாடுகளை சமாளிக்க முடியாமல், போராட்டங்கள் வலுவெடுத்த நிலையில், தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அதற்கான கடிதத்தை அனுப்பிவிட்டு அங்கிருந்து ராஜபக்சே தாய்லாந்துக்கு சென்றார். பாதுகாப்பு காரணங்களுக்காக ராஜபக்சே தங்கும் இடத்தை விட்டு வெளியே வராமல் சிறையில் இருப்பது போன்று தாய்லாந்தில் வாழ்ந்து வந்தார். பின்பு சில நாட்கள் கழித்து சொந்த நாடான இலங்கைக்குத் திரும்பினார். தற்போது உள்ள அதிபரான ரணில் விக்ரமசிங்கே அவருக்கு உரிய பாதுகாப்பு தருவதாக கூறி, உறுதி அளித்ததை அடுத்த கோத்தபய இலங்கை திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அவருக்கு எதிராக மனித உரிமை மீறல் தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்தது. அந்த வழக்கில், ராஜபச்சே அதிபர் பதவியை விலகியதை அடுத்து, அவருடைய அரசியல் சாசன விலக்கு ரத்தாகி இருக்கிறது. இதைத் தொடர்ந்து கோத்தபயவுக்கு உச்சநீதிமன்றம் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
Also read: உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழ்நாட்டில் கனமழையா..? எச்சரிக்கும் வானிலை மையம்..!