Srilanka: மோசமாகும் தெல்லிப்பளை நிலை.. தங்களுக்குள் மோதிக்கொள்ளும் இலங்கை மக்கள்.. பதறவைக்கும் காட்சிகள்..
இலங்கையின் தெல்லிப்பளை பகுதியில் பெட்ரோலுக்காக ஆட்டோ ஓட்டுநர்கள் சண்டையிட்டுக் கொள்ளும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இலங்கையின் தெல்லிப்பளை பகுதியில் பெட்ரோலுக்காக ஆட்டோ ஓட்டுநர்கள் சண்டையிட்டுக் கொள்ளும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதனால் அங்கு உணவு, பெட்ரோல், டீசல் போன்றவற்றிற்கு கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் பெட்ரோலுக்காக ஆட்டோ ஓட்டுநர்கள் தெல்லிப்பளை பகுதியில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அப்போது நெரிசல் காரணமாக ஏற்பட்ட வாக்கு வாதத்தின் போது சண்டை மூண்டது. இதில் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
களத்தில் இறங்கிய மாணவர்கள்
கொழும்பு - கோட்டை, உலக வர்த்தக மைய கட்டடத் தொகுதிக்கு அருகில், இலங்கை வங்கி மாவத்தைக்குள் வீதித் தடைகளை மீறி, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிரவேசிக்க முயற்சித்தபோது, கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதன் காரணமாக, குறித்த பகுதியில் அமைதியற்ற நிலை ஏற்பட்டது. அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று மதியம் மருதானை தொழில்நுட்ப சந்திக்கு அருகில், அவர்கள் ஆர்ப்பாட்டப் பேரணியை ஆரம்பித்தனர். பின்னர், அவர்கள் பேரணியாக கொழும்பு - கோட்டை பகுதியை அடைந்தனர்.
உயர் தேசிய டிப்ளோமா கற்கை நெறி மாணவர் ஒன்றியத்தின் மாணவர்களுக்கு, இன்றைய தினம் கொழும்பு - கோட்டை நீதிமன்ற அதிகார பிரதேசத்திற்குட்பட்ட வீதிகள் சிலவற்றுக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கோட்டை நீதிமன்ற அதிகார பிரதேசத்திற்குட்பட்ட பல வீதிகள், ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட அரச நிறுவனங்கள் மற்றும் உணவகங்கள் அமைந்துள்ள பகுதிகளுக்குள் பிரவேசிக்க தடை விதித்து கொழும்பு - கோட்டை நீதவான் மஞ்சுள திலகரத்ன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கொழும்பு - கோட்டை காவல்துறை பொறுப்பதிகாரி விடுத்து கோரிக்கையை ஆராய்ந்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இதன்படி, சைத்திய வீதி, பாரோன் ஜயதிலக்க மாவத்தை, கெனல் ரோட், ஜனாதிபதி மாவத்தை, யோர்க் வீதி, செரமிக் சந்தி, இலங்கை வங்கி மாவத்தை, செத்தம் வீதி, முதலிகே மாவத்தை உள்ளிட்ட பகுதிகளுக்கு பிரவேசிக்க இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பேரணிக்க தடை விதிக்கப்பட்ட வீதிகளினூடாக பேரணி நகரமுற்பட்டவேளையில் காவல்த்துறையினர் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டனர்.