Srilanka Economic Crisis: நடு இரவில் அதிரடி உத்தரவிட்ட ராஜபக்ஷே! அடுத்தக்கட்டத்தில் இலங்கை சிக்கல்! விழிபிதுங்கும் மக்கள்
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
![Srilanka Economic Crisis: நடு இரவில் அதிரடி உத்தரவிட்ட ராஜபக்ஷே! அடுத்தக்கட்டத்தில் இலங்கை சிக்கல்! விழிபிதுங்கும் மக்கள் Srilanka Economic Crisis: President Gotabaya Rajapaksa declares State Emergency due to people protests in streets Srilanka Economic Crisis: நடு இரவில் அதிரடி உத்தரவிட்ட ராஜபக்ஷே! அடுத்தக்கட்டத்தில் இலங்கை சிக்கல்! விழிபிதுங்கும் மக்கள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/02/c09740258bd82da4f682739b88a28cab_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இலங்கையில் கடந்த சில மாதங்களாக கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அங்கு உணவு, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை மிகவும் வேகமாக உயர்ந்து வருகிறது. அத்துடன் கடந்த மார்ச் மாதத்தில் அங்கு பணவீக்கம் சுமார் 18.5% சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. அத்துடன் உணவு பொருட்களின் விலையும் 30.1% வரை அதிகரித்துள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். இதன்காரணமாக அதிபர் கோத்தபய ராஜபக்ஷே மற்றும் இலங்கை அரசை எதிர்த்து பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ஷே அங்கு அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக நேற்று உத்தரவு ஒன்று வெளியானது. அதன்படி, “இலங்கை நாட்டின் பொது பாதுகாப்பு கருதி அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து மக்களுக்கும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க வழி வகை செய்யும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது சமூக விரோதிகள் சிலர் போராட்டத்தை தூண்டு வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Gazette Notification 👇🏽 pic.twitter.com/c9sxIQI33Q
— Dasuni Athauda (@AthaudaDasuni) April 1, 2022
முன்னதாக நேற்று அதிபர் கோத்தபய ராஜபக்ஷேவின் இல்லத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இதில் பல பொதுமக்கள் பங்கேற்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. மேலும் தற்போது வரை போராட்டங்கள் காரணமாக 50க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் தற்போது இருக்கும் அரசை கழைத்துவிட்டு ஒரு இடைக்கால அரசை அதிபர் நியமிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதற்கிடையே இலங்கையின் வடக்கு மாகாணங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இரவு 10 மணி முதல் அதிகாலை 6 மணி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் வரும் ஞாயிற்றுக்கிழமை பெரியளவில் மக்கள் போராட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதற்கு முன்பாக இலங்கை அதிபர் இந்த அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)